ஞானப்பானா-கிருஷ்ண கீதை 13

அத்தியாயம் 13 ஸகுண பிரம்மம்

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

ഒന്നിലുമറിയാത്ത ജനന്ഗള്ക്കു

                                                ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

                                                 ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്

ഒന്നിലുമൊരു  ബന്ധ്മില്ലാഥെയായ്

നിന്നവന് തന്നെ വിശ്വമ് ചമച്ഛുപോല്

இதற்கு முந்தின அத்தியாயத்தின் முடிவில் சகுண பிரம்மம் நிர்குண பிரம்மத்தின் மறுபக்கம் தான் என்று சொன்னோம்..இன்னும் சற்று ஆழமாக சென்று பார்ப்போம்.

சகுண பிரம்மம் ‘ஒன்று’ என்ற பதத்தின் மூலம் வேதங்களிலும் ஸ்ருதிகளிலும் அடையாளம் காட்டப்படுகிறது. நிர்குண பிரம்மமோ எண்ணிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. எல்லாமே நிர்குண பிரம்மம் தான். அதற்கு ‘ஏகாத்வமோ” ( ஒருமை) ‘நானாத்வமோ’’(பன்மையோ) அடைமொழியாக கொடுக்க முடியாது.

சகுண பிரம்மத்தின் தோற்றத்தை மனுஸ்மிரிதியில் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

ஆஸீதிதம் தமோ பூதம்

அப்ரஞ்சாதமலக்ஷணம்

அப்ரதர்க்யமவிஞ்சேயம்

ப்ரஸுப்தமிவ ஸர்வத:

 

தத: ஸ்வயம்பூர்பகவான்

அவ்யக்தோ வ்யஞ்சயன்னிதம்

மஹாபூதாதி வ்ருத்தௌஜா:

ப்ராதுராஸீத்தமோனுத:

 

யோஆஸாவதீந்த்ரியக்ராஹ்ய:

ஸூக்ஷ்மோஅவ்யக்த: ஸனாதன:

ஸர்வபூத்மயோஆசிந்த்ய:

ஸ ஏவ ஸ்வயமுத்பபௌ

*********************

யத்தல் காரணமவ்யக்தம்

நித்யம் ஸதஸதாத்மகம்

தத்விஸ்ருஷ்ட: ஸ புருஷோ

லோகே ப்ரம்மேதி கீர்த்த்யதே

‘இந்த பிரபஞ்சம் தமோ ரூபமாக உள்ளது. அறிந்து கொள்ள முடியாததாக, எந்த இலக்கணத்திற்குள்ளும் அடைபடாத, மனோ விருத்தியால்-சிந்தித்து அறிந்து கொள்ள முடியாத,எவ்விதத்திலும் தெரிந்துகொள்ள முடியாத, எல்லாம் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பது போல் இருந்தது.

பரமாத்மா யாருக்கும் தெரியாத ஒரு சக்தியாக இருந்து கொண்டிருந்தாலும், பஞ்ச பூதங்களாலான இந்த பிரபஞ்சமாக ஆவிர்பவித்தான்; தோன்றினான்.தன்னை ஆவரணம் செய்திருந்த இருளை நாசம் செய்து,,அதுவரை இந்திரியங்களுக்கு அப்பாற்ப்பட்டவாக, ஸூக்ஷ்ம ரூபியாக, ஸனாதனாக, சர்வ பூத ரூபியாக,சிந்தனைகளுக்கெல்லாம் மேலானவனாக இருக்கும் அவர் பிரபஞ்ச உருவமாக தோன்றினார். ”ஸ்வயமுத்பவ”

அவ்யக்தமாக, நித்தியமானவனாக’,ஸத்’ ஆகவும் அஸத் ஆகவுமிருந்த,எல்லாவற்றினுடைய காரணகர்த்தா வான பரபிரம்மம் பிரம்மா என்ற புருஷனை ஸ்ருஷ்டித்தார்.( மனு ஸ்ம்ரிதி (1.5.6. 7-11)

இதில் கவனத்தில் கொள்ளவேன்டிய வாக்கியம் ‘ஸ ஏவ ஸ்வயமுத்பபௌ’ என்பதாகும். தானே தோன்றினார். யாராலும் உருவாக்கப் படவில்லை.

இதைத்தான் பூந்தானமும்

                        നിന്നവന് തന്നെ വിശ്വമ് ചമച്ഛുപോല്

“நின்னவன் தன்னெ விஸ்வம் சமச்சுபோல்.”

அவனே இந்த விசுவத்தை உருவாக்கினான் போலும் என்கிறார். பிரபஞ்சம் தோன்றும் முன் அந்த பரபிரம்மம் மட்டும் இருந்தது என்று கூறிவிட்டு அந்த பிரம்மம் பிரபஞ்சத்தை சிருஷ்டித்தது என்று சொன்னால் எதிலிருந்து-எதைக்கொண்டு சிருஷ்டித்தது என்ற கேள்வி எழும்புகிறது. மண்பானக் கலைஞன் மண்பாண்டங்கள் செய்தான் என்றால் அவனுக்கு மண் மூலப் பொருளாக( rawmaterial) உளது.. அது போல் பிரம்மம் பிரபஞ்சத்தை உணுபண்ணியது என்றால் மூலப்பொருள் எது? அது தன்னிலேயே அந்த மூலப்பொருளை கண்டது.ஆகவே தன்னிலுள்ள மூலப்பிரகிருதியிலிருந்து பிரபஞ்சத்தை சிருஷ்டித்தது.

‘தமோ ரூபம்’ என்ற சொற்றொடர் மூலபிரகிருதி என்ற பொருளில் மனுஸ்மிருதியில் பயன் படுத்தப் பட்டுள்ளது.இப்படி உண்டாகின்ற தோற்றத்திற்கு ( ஆவிர்பாவத்திற்கு) ஒரு மறை வேண்டியிருந்தது. அது தான் ‘பிரகிருதி’ (இயற்கை) எனப்படுகிறது. இந்த பிரகிருதிக்கு ஸசேதனத்வம்( உயிரூட்டுதல்) புருஷ உதவியில்லாமல் முடியாது.

இரண்டானாலும் உண்மையில் ஒன்றே ஆன,சுபாவத்தில் ‘சத்’ ஆகவும் ‘அசத்’ ஆகவும் தானே ஜீவனாகவும் ஜீவனை தாங்கி நிற்கின்ற ஒரு உபாதியாகவும் இருக்கின்ற புருஷ-பிரகிருதியின் சேர்க்கையில் உருவானது தான் இந்த பிரபஞ்சனைத்தும்.

இந்த சகுண பிரம்மம் தான் எல்லா ஜீவராசியிலும் காணப்படுகின்றது

இந்த பிரம்மம், யாருக்கும்,தென்படாமல் ஆனால் எல்லாவற்றையும் கண்டுகொண்டும்,., யாராலும் கேட்க முடியாதவனாகவும் ஆனால் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டும்,தான் எந்த சித்த விருத்திக்கும் ஆளாகாமல் ( சிந்தனைகளற்ற) எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொண்டு அந்தர்யாமியாக,நாசமில்லாதவனாக நம்முள் வசித்து வருகிறான்.அவன் தான் ஆத்மா.

இதை பிரஹதாரண்யக உபனிஷத் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறது:

                                                                        அத்ருஷ்டோ த்ருஷ்ட:,  ஸ்ருத: ஸ்ரோதா, மதோ மந்தா, அவிஞ்சாதோ விஞ்சாதா,  நான்யோ அதோ அஸ்மி  திருஷ்டா நான்யோஅதோ அஸ்தி ஸ்ரோதா நான்யோஅதோஅஸ்மி மந்தா,னான்யோ அதோஸ்மி விஞ்சாதைஷத ஆத்மாந்தர்யாம்யம்ருதோ அதோ அன்யதார்த்தம்.

(பிர.உப. 3. 7 23)

பக்வத் கீதையில் பகவான் கிருஷ்ணன்  இவனை ‘ஸர்வ பூதாசயஸ்திதன்” என்று கூறுகிறார்..எல்லோருடைய இதயத்திலும் குடிகொண்டிருப்பவன் அவனே.அதாவது ‘சகுண பிரம்மம்’ தான் ஜீவாத்மா எங்கிறார் கிருஷ்ணன். இதுவே எல்லா ஜீவராசிகளுடைய ‘அஹம்’ புத்தியும் .ஆதியும் அந்தமும் இல்லாத புருஷன் என்றும் பரமாத்மா என்றும் அறியப்படுகிறது., சகல ஜீவங்களிலும் குடிகொள்ளுகின்ற ஆத்மாவும்,’அஹம்’ புத்தியோடுகூடிய ஜீவாத்மாவும் ஒன்றே என்று புரிந்து கொண்டுவிட்டோமென்றால்,மூலபிரகிருதியின்- அனாத்மாவாயிருக்கின்ற- தேஹத்தின் சுபாவம் என்ன என்று பார்க்க முயலலாம்.

ஆத்மா ஏக பாவத்துடன் இருக்கின்றபொழுது, அனாத்மாவான தேகம்-பிரகிருதி அனேக பாவத்துடன் இருக்கின்றது. பரமாத்மா பித்ரு பாவத்துடனும், பிரகிருதி மாத்ரு பாவத்துடனும் வர்த்திக்கின்றது.

பிரகிருதி கர்ப்பத்தை தாங்கி நிற்பதால் அதுவே எல்லாவற்றின் உற்பத்தி ஸ்தானமும்.

பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லுவார்:

                                                மம யோனிர்ம்மஹல் ப்ரம்ம

                                                தஸ்மின் க்ரப்பம் ததாம்யஹம்

‘என்னுடைய உற்பத்தி ஸ்தானம் மஹல் பிரம்மம் அதாவது பிரகிருதி தான்.

இந்த பிரகிருதியின் குண நலங்கள் சகல ஜீவராசிகளிலும் ப்ரத்த்யக்ஷமாகிறது. ஆகவே பிரகிருதியின் குணங்கள் யாவை என்று அறிய வேண்டியது அவசியமாகிறது. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.அதுவரை பகவன் நாமம் சொல்லுவோம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s