GnAnappAnA

ஞானப்பானா – கிருஷ்ண கீதை 17

அத்தியாயம் 17 ஒன்றும் மூன்றும் -2

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

முன் அத்தியாயத்தில் மூர்த்தி த்ரயத்தையும் முப்பெரும் தேவிகளைக் குறித்தும் விளக்கினோம் தேவனான பரபிரம்ம்மும் பிரகிருதியும் சேரும் பொழுது பிரபஞ்சம் உண்டாகிறது என்று சொல்லக் கண்டோம்..அதில் ஆதி

பிரகிருதி ஜலரூபத்தில் இருக்கின்றபொழுது புருஷனாகிய பரமனின்  பீஜம் விழுவதன் மூலம் ‘அண்டம்” –கரு உருவாகிறது. அந்த அண்டத்திலிருந்து ஆதி சிருஷ்டிகர்த்தாவான பிரம்மா தோன்றுகிறார். பிறகு பிரம்மா இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறார். இந்த விவரங்கள் மனுஸ்மிருதியில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

                     ஸோஅபித்யாய சரீரால் ஸ்வால்                                                                                                                ஸிஸ்ருக்ஷுர்விவிதா: ப்ரஜா:

                     அப ஏவ ஸ்ஸர்ஜ்ஜாதௌ

                     தாஸு பீஜமவா ஸ்ருஜல்.

                      த்தண்டமபவத்தைம்ம்

                     ஸஹஸ்ராம்சுஸமப்ரபம்

                    தஸ்மிஞ்சஞ்ச ஸ்வயம் பிரம்மா

                   ஸர்வலோகபிதாமஹ:

                                     (மனுஸ்ம்ரிதி 1-8-9)

“ புருஷோத்தமன் தியானம் செய்து தனது உடலிலிருந்து பல உயிரினங்களை தோற்றுவிக்கும் எண்ணத்துடன் முதலில் ஜலத்தை உற்பத்தி செய்தார்.

அது  தங்க நிறத்தோடுகூடிய சூரியனின் ஒளியுடன் கூடிய ஒரு அண்டமாக உருவெடுத்த்து. அதிலிருந்து சகல பிரபஞ்சத்தின் பிதாமஹனான பிரம்மா தோன்றினார்.”

இங்கு ஜலம் என்று கூறியிருப்பது மூலபிரகிருதியைக் குறிக்கிறது. அவ்வாறு புருஷனும் பிரகிருதியும் சேர்ந்து பிரம்மா தோன்றினார்.

பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி விஷ்ணு புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜட வஸ்துக்களும் பிற்பாடு, தாவர வர்க்கமும் உருவாயின. மூன்றாவதாகத்தான் மனிதனல்லாத ஜீவராசிகள் தோன்றின.கடைசியாகத்தான் மனிதன் தோன்றினான். கல்பாந்தரங்களில் உளவான விசித்திரங்களின் பயனாக இந்த நியதி இப்பொழுதும் மாறுபடுகின்றன. புதிய புதிய செடிகொடிகளும் உயிரினங்களும் இன்னும் அவ்வப்பொழுது தோன்றுகின்றன.

ஐதரேய ப்ராம்மணத்தில் இந்த பரிமாண வளர்ச்சியை விவரமாக விளக்கியுள்ளார்கள் நமது ஆசாரியர்களும் முனிவர்களும்.

    ஆத்மானமாவிஸ்தாராம்  வேதக்னதே ஹாவிர்பூய:

   ஓஷதிவனஸபதயோ யச்ச  கிஞ்ச ப்ராணப்ருல் ஸ ஆத்மான்மாவிஸ்தாராம் வேத:

    ஓஷதி வனஸ்பதிஷு ஹி ரஸோ த்ருஸ்யதே

   சித்தம் ப்ராணப்ருல்ஸு, ப்ராணப்ருல்ஸு த்வேவாவிஸ்தார்மாத்மா

    தேஷு ஹி ரசோஅபி த்ருஸ்யதே- ந சித்தமிதரேஷு

    புருஷே த்வேவாவிஸ்தராத்மா ஸ ஹி ப்ராஞ்சானே சம்பன்னதம: 

   விஞ்ஞானம் வத்தி விஞ்ஞதம் பஸ்யதி- வேத ஸ்வஸ்தனம்- வேத லோகாலோகௌ

        மர்த்த்யேனாம்ருதம் ஈப்ஸதி –ஏவம் ஸம்பன்ன:-அதேதரேஷாம் பசுனாமசனாபிபாஸே

   ஏவாபிவிஞ்ஞ்சானம் -ந விஞ்சஞ்சாதம் வதந்தி-

     ந விஞ்சாஞ்சாதம் பஸ்யந்தி ந விது: ஸ்வஸ்தனம் ந லோகாலோகௌ

  த ஏதாவந்தோ பவந்தி-யதா ப்ரஞ்சாஹி ஸம்பவா:

 

‘அவர்—பரமபுருஷன்- தோன்றியதை யாதொருவன் ஆத்மாவாக உணருகிறானோ, அவன் பரமானந்த்த்தை அடைகிறான். செடிகொடிகள், மற்றும் எல்லா உயிரின்ங்களும் ஆத்மாவின் உருவகங்களே என்று அவன் அறிகிறான். தாவர வர்க்கங்களில் சக்தி நீர் ரூபத்தில் -ரசமாக- காணப்படுகிறது. உயிருள்ளவையில் எல்லாம் மனம் தோன்றுகிறது; ஆத்மாவும் தோன்றுகிறது.;ரசமும்( சக்தியு) காணப்படுகிறது.ஆனால் மனித ஜாதியில் மனம்     மிகவும் சக்தி வாய்ந்த்தாக அமைகிறது.அறிவும்-ஞானமும் அவனில் மிகுந்து காணப்படுகிறது. அவன் அறிவதை அவன் சொல்ல முடிகிறது; அவன் அறிவதை அவன் காண முடிகிறது; நேற்று நடந்தவையை அவனால் நினைந்து கூற முடிகிறது;திர்சியங்களையும்—காண்பதையும், அதிருசியங்களையும் – காணாதவையையும் அவன் அறிகிறான்.மரணம் உறுதி என்பதால் மரணமின்மையை விரும்புகிறான்.மற்ற உயிரின்ங்களுக்கு பசியும் தாகமும் மட்டும் தான் உண்டு.மனிதனுக்கோ ஞானம் –அறிவு என்ற ஒன்று அதிகமாக உள்ளது.மற்ற உயிரினங்களால் அறிந்ததை சொல்லமுடிவதில்லை; அறிவதை அவை காண்பதில்லை; நேற்று நடந்தவை அவைகளின் நினைவில் இருப்பதில்லை;திருசியாதிருசியங்களை அவைகள் அறிவதில்லை.. அறிவு அள்விற்கேற்ப  அமைகிறது ஜன்மங்கள்.”

ஐதரேண்யகம் 2-3-2

இவ்வாறு தோன்றிய மனித ஜீவராசிகளில் அன்தர்யாமியாக குடிகொண்டுள்ள பரமபுருஷன் பௌதிக தேகத்துடன் பந்திக்கப் படும்பொழுது தேகி என்ப்படுகிறான்.

பகவத் கீதை13 ஆம் அத்தியாயம் முதல் சுலோகத்தில் பகவான் கூறுகிறார்:

                              इदम् शरीरम् कौन्तेय क्षेत्रमित्यमिधीयते !

                              एतयो वेत्ति तम् प्राहू: क्षेत्रन्ज इति तद्दिविदा:  !

இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபீதியதே !

ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹூ: க்ஷேத்ரஞ இதி த்த்வித: !

‘ குந்திபுத்ரா, இவ்வுடல் க்ஷேதிரம் எனப்படுகிறது.இதை அறிகிறவனை க்ஷேத்திரஞன் என்று ஞானிகள் சொல்லுகிறார்கள்.”

க்ஷேத்திரம் என்றால் எது கெட்டு போகாமல் காப்பாற்றப் பட வேண்டியுள்ளதோ அது என்று பொருள்.அதன் இன்னொரு பொருள் ‘வயல்’. வயல் உழைப்பிற்கேற்ற விளை தரும்.பூமியிலி-வயலில்- நல்லதும் விளையும்; கெட்ட்தும்- உபயோகமற்றதும் விளையும்.வினை விதைத்தால் வினை விளையும்; தினை விதைத்தால் தினை விளையும். பலன் கர்மங்களைப் பொறுத்து இருக்கும். அது போல் எவ்விதம் நாம் நமது உடலாகப்பட்ட க்ஷேத்திரத்தை பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ற பலன் கிடைக்கும் .நம் உடல் எனும் க்ஷேத்திரத்தில் மனம், புத்தி, இந்திரியங்கள் என்பவை உள்ளன. அவைகளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதற்கு தகுந்த பலன் கிடைக்கும்.

அடுத்த சுலோகத்தில் பகவான் சொல்லுகிறார் எல்லா க்ஷேத்திரங்களிலும் பரமாத்மா எனும் க்ஷேத்திரஞனே குடியிருக்கிறான்.இந்த அறிவே ஞானம் எனப்படுகிறாது.

க்ஷேத்திரம் எனும் உடல் பிரகிருதியைக் குறிக்கிறது.க்ஷேத்திரஞன் எனும் பரமாத்மா பரம புருஷனைக் குறிக்கிறது.பிரகிருதியின் சேர்க்கையால் ஏற்படும் குண மாற்றங்களை எப்பொழுது புருஷாத்மா தனது என்று எண்ண ஆரம்பிக்கிறானோ அப்பொழுது அவன் ஜீவாத்மா ஆகிறான்.பிரகிருதி பேதம் எண்ணிலடங்கா; ஆகவே ஜீவாத்மாக்களும் எண்ணிலடங்காத வேற்றுமைகளுடன் காணப்படுகிறது.பிரகிருதியுடன் சேர்ந்திருந்து அதன் குண நலங்களால் பாதிக்கப்படாத ஜீவாத்மாக்கள் முக்தர்கள்.

அதே அத்தியாயத்தில் பகவான் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

शत्वम् रजश्तम इति गुणा: प्रक्रुतिशम्बवा:  !

निबत्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम्.!!

:              ஸத்வம் ரஜ்ஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா: !

             நிபத்ன்ந்தி   மஹாபாஹோ தேஹே தேஹினமவ்ய்யம் !!

“ பெருந்தோளுகளுடைய அர்ஜுனா, பிரகிருதியிலிருந்து உளவாகின்ற சத்வம்,ரஜஸ், தமோ குணங்கள் அழிவற்ற தேஹியை தேஹத்துடன் பிணைக்கின்றன.”

பிரகிருதி முக்குணங்களையுடைது என் முன்னொரு அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் பிரகிருதி வேறு, இந்த குணங்கள் வேறல்ல.உஷ்ணமும் அக்னியும் எப்படி வேற்படுத்தி பார்க்க முடியாதோ அதே போல் பிரகிருதியையும் அதன் குணங்களையும் வேறுபடுத்த இயலாது..இந்த குணங்களால் க்ஷேத்திரஞனான பரமாத்மா பாதிக்கப்படுவதில்லை. ஆனால் ஜீவாத்மா பதிக்கப்பட்ட்து போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. அது ஒரு மாயத் தோற்றம்.நீரில் தெரிகின்ற சூரியனின் பிரதி பிம்பம் நீர் அசையும் பொழுது அசையும்; ஆனால் சூரியன் அசைவதில்லை.அதே போல் ஜீவாத்மா பிரகிருதியின் குணங்களில் கட்டுப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. அந்த உண்மையற்ற நிலையை உண்மை என்று எண்ணி கர்ம்ம் இயற்றும்பொழுது அதன் பலன்கள் ஜீவாத்மாவை பாதிக்கின்றது.

இதைத் தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயம் 25 ஆம் சுலோகத்தில் கூறினார்:

                        प्रक्रुते: क्रियमाणानि गुणैइ: कर्माणि सर्वच: !

                        अहन्गारविमूदात्मा कर्ताहमिति मन्यते !!

                                    ப.கீ. அத் 3 சுலோ 26

               ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வாச: !

              அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மன்யதே !!

பிரக்ருதியின் குணங்களால் ஜீவாத்மா பாதிக்கப்படுகிறது. .ஜீவாத்மா கர்மங்கள் செய்யத் தூண்டப்படுகிறது.. கர்மங்கள் ஆற்றப்படுன்றபொழுது நம்முள் ஜனிக்கும் ‘அஹம்’ என்ற உணர்வு நாம் தான் கர்மங்கள் இயற்றுகிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த ‘கர்த்ருத்வ’ மனோபாவம் தான் கர்மபலங்களின் ஊற்றுக்கண். இந்த நேரத்தில் ப்ரகிருதி வேறு, நிஜமான ‘நான்’ வேறு என்று உணராத நிலைமை ஏற்படுகிறது.அக்ஞானத்தின் ஆரம்பம் உதயமாகிறது. ‘தனக்கு’ அன்னியமான ஒன்றை ‘தனது’ என்ற எண்ணம் தான் அஹங்காரம். மேலும் பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்.

அதுவரை பாடுவோம்:

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s