யோகவாசிஷ்டம்-மஹாராமாயணம்-4

யோகவாசிஷ்டம்-மஹாராமாயணம்-4

தினமொரு சுலோகம்

நாள் 4                                                     துர்முகி வருடம் சித்திரை 4 ஏப்ரில் 17 ,2016

5. குரு சீட பந்தம் 1

ஓம் த்த் ஸத் !

ஓம் கணேசாய நம: !

ஓம் சிவாய: நம: !

ஓம் நாராயணாய நம: !

ஓம் ஸ்ரீ பக்வான் ரமணாய நம: !

ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்து விட்டால் அங்கே குரு-சீடன் என்ற இரட்டை நிலைக்கு  வேலையில்லை   நீண்ட ஒரு ஸ்வப்னத்திலிருந்து ஆத்மா உயிர்த்தெழுந்திருக்கின்றது தான் ஆத்ம சாக்ஷாத்காரம். இதை வெளிப்படுத்துகின்றது யோக வாஸிஷ்டம். ஸ்வப்னத்திலுண்டாகின்ற காட்சிகளெல்லாம் அசத்தியம்; அனித்தியம்,அவை சத்தியமாவதற்கு வாய்பேயில்லை அது போல் ஜாக்ரட் அவஸ்தையில் ஏர்படும் அனுபவங்களும் ஸ்வப்னானுபவங்களே. ஆகவே அவையும் அனித்தியம்; அசத்தியம். ‘ஆன்மா மட்டுமே உண்மை’ என்பதை அடிக்கோடிட்டு காண்பிக்கின்றது யோக வாஸிஷ்டம் என்ற யோக சாஸ்திரம்.

இந்த யோக சாஸ்திரத்தில் எல்லா விளக்கங்களும் குரு வஸிஷ்டனுக்கும் சீடன் ஸ்ரீ ராமனுக்கும் இடையில் நடக்கின்றதென்றாலும், இவை சொல்லப் படுகின்றது ஒரு கதைக்குள் இன்னொரு கதை என்கின்ற பாணியில் அமைகின்றது.

.ஒரு பொருள் மீது நமக்கு விருப்பம் உண்டாகிறது. அதைப் பெறுவதற்கு நாம் முயற்சிக்க ஆரம்பிக்கின்றோம்.அது கிடைத்து விட்டால் மகிழ்ச்சி.  ஆனால் அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக இருப்பதில்லை. சிறிது நேரம் அல்லது காலத்திற்கு பின் வேறொரு பொருள் மீது நாட்டம் செல்கிறது. இந்த வஸ்து முன்னதை விட மேலானது என்று தோன்றுகிறது.அதை நேடுவதற்கான முயற்சி ஆரம்பமாகிறது.கிடைத்தவுடன் மீண்டும் மகிழ்ச்சி; சிறிது காலத்திற்குப் பின் மீண்டும் அலுப்பு. புதிய தேடல். இந்த நிகழ்வுகள் சுழற்சியாக வருகின்றது.

விரும்பும் பொருள் கிடைக்கவில்லையென்றாலோ வருத்தம்,கோபம், மானசிக விப்ராந்தி, உளவாகின்றது. திடீரென நமது மனதில் ஒரு குற்ற உணர்வு உண்டாகிறது.’இதற்காகத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டோம்?” என்ற வருத்தம் ஜனிக்கிறது. இந்த வருத்தம் பொருள்கள் மீதுள்ள ஆசையுடன் ஒரே நேரத்தில் நமது உள்ளில் வசிக்கின்றது. இது மனக் குழப்பத்தை உண்டாக்குகின்றது. மனம் பேதலிக்கிறது; எது சரி. எது தவறு என்று புரியாத ஒரு குழப்பமான நிலை

லௌகீக வஸ்துக்களில் விருப்பமுடையவர்கள் எல்லோருக்கும், அந்த விருப்பத்தின் மூலம் அந்த விஷய வஸ்துக்கள் தான் எல்லாம் என்ற உணர்வு இருக்கின்ற வரை மனக்கலக்கம் தொடரத்தான் செய்யும்.நமது ஆன்மாவை மறைத்திருக்கும் மேகங்கள் நீங்காத வரை நமக்கு எது மகிழ்ச்சியை அளிக்கும், எது சாந்தியைத் தரும் என்ற தெளிவிருக்காது. ஆகவே என்ன தேடுகிறோம் என்று தெரியாமல் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவிக்கொண்டேயிருக்கும் நமது மனம். அதனால்த் தான் மனம் ஒரு குரங்கு என்று சொல்கிறார்கள் போலும்! நாம் ஒரு உறுதியான முடிவிற்கும் வர முடிவதில்லை. இம்மாதிரியான ஒரு மனக் கலக்கத்திற்குத் தான் இராமன் ஆளானான். இந்த மனக்குழப்பம் நம் எல்லோரிலும் உண்டு. ஆனால் அது எதனால் என்று புரிவதில்லை. ஆத்ம ஸாக்ஷாத்காரத்தின்  முதல் படியான வைராக்கிய பிரகரணம் நம் எல்லொருக்கும் பொருந்தும்.

ஓம் த்த் ஸத் !

ஓம் கணேசாய நம: !

ஓம் சிவாய: நம: !

ஓம் நாராயணாய நம: !

ஓம் ஸ்ரீ பக்வான் ரமணாய நம: !

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s