யோக வாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 15

யோக வாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 15

தினமொரு சுலோகம்

நாள் 15        துர்முகி வருடம் சித்திரை 15 ஏப்ரில் 28, 2016

 

வாசனைகள்

துவிதமனோபாவம் நம்முடைய வாசனைகளை வளர்க்கின்றது. போதத்தை சங்கல்பங்கள் ஆவரணம் செய்து மறைக்கும் பொழுது நாம் மித்யா பாவத்திற்கு ஆளாகிறோம். மித்யா பவம் அனித்தியமானதை நித்தியமாகவும் இல்லாததை உள்ளதாகவும் நம்மை எண்ண வைக்கிறது. அந்த எண்ணங்கள் நம்மில் ராக-துவேஷங்களின் விதைகளை விளைக்கின்றது.அது நம்மை இன்ப-துன்பத்திற்கு ஆளாக்கிறது.இப்படிப்பட்ட வாசனைகள் இரண்டு விதம்- சுத்த வாசனைகள்; மலின வாசனைகள். அடுத்து வரும் மூன்று சுலோகங்களில் வால்மீகி மஹரிஷி விளக்குகிறார்.

                        வாசனா த்விதா ப்ரோக்தா சுத்தா ச மலினா ததா

                        மலினா ஜ்ன்மனோ ஹேது: சுத்தா ஜன்ம வினாசினீ

वासना त्विता परोक्ता शुद्धा च मलिना तथा

मलिना जन्मनो हेतु: शुद्धाजन्म विनासिनी!

‘வாசனைகள் இரண்டு விதம்: சுத்த வாசனைகள்; மலின-அசுத்த வாசனைகள். மலின வாசனைகள் மறுபடியும் இந்த பிரபஞ்சத்தில் பிறக்க காரணமாகிறது. சுத்த வாசனைகளை மறுபிறப்புக்கு இடம் கொடுக்காமல் முக்தியை அளிக்கிறது.’ என்கிறார் வால்மீகி மஹிரிஷி

இந்த இரண்டு வாசனைகளுக்குமுள்ள வேறுபாட்டை அடுத்த இரண்டு சுலோகத்தில் விளக்குகிறர் மஹிரிஷி.

                        அஞ்ஞான சுகனாகாரா கனாஹம்கார சாலினீ

                        புனர்ஜன்மகரீ ப்ரோக்தா மலின வாசனா புதை:

                        புனர்ஜன்மாங்குராம்ஸ்த்யக்த்வா ஸ்திதா சம்ப்ரஷ்ட பீஜவத்

                        தேஹார்தம் த்ரியதே ஞாத ஞேயா சுத்தேதி சோச்யதே

अज्नान सुघनाकारा घनाहम्कार शलिनी

पुन पुरर्ज्न्मकरी प्रोक्तामलिना वासना बुधै:

पुनर्ज्न्मान्कुराम्श्त्यक्त्वा स्तिता सम्भ्रषट बीजवत

देहारथम ध्रियते ज्नात ज्नेया शुद्धेति चोच्यते !

அஞ்ஞான சுகனாகார—ஒன்றை வேறொன்றாக-பலதாக தோற்றுவிக்கின்ற அஞ்ஞானம் நன்றாக உறைந்து கெட்டியானதும்

கனாஹம்கார சாலினீ—‘ நான்’ நான்’ என்ற அஹம் பாவம் மிகவும் வலிமையானதும்

புனர்ஜன்மகரீ—அதனால் பிறப்பு-இறப்பு எனும் சங்கிலித் தொடரில் சிக்க வைப்பதும் தான்

மலின வாசனா—மலின-அசுத்த வாசனைகள்.

புதை: ப்ரோக்தா—ஞானிகள் கூறுகிறார்கள்

புனர்ஜ்ன்மாங்குராந்த்யக்த்வா—பிறப்பு-இறப்பு எனும் தொடர் சங்கிலிப் பிணைப்பிலிருந்து நம்மை முற்றிலும் விடுவிப்பதும்

ஞாதஞேயா—உணர வேண்டிய சத்தியத்தை –ஒன்றன்றி வேறில்லை என்ற சத்தியத்தை உண்ர்வதும்

சம்ப்ரஷ்டபீஜவத் ஸ்திதா—வறுத்த விதை போல் எஞ்சி நிற்பதுமான வாசனையை

சுத்தாய்தி உச்யதே—சுத்த வாசனை என்றுகருதுகிறார்கள்.

தேஹார்தம்த்ரியாத்- பௌதிக சரிர வாழ்க்கையை தொடருவதற்கு மட்டுமே அவை பயன் படும்.

நம்மிலிருந்து வேறாக ஒரு பிரபஞ்சம் உள்ளது; அது ஒன்றல்ல; பலது என்று தோற்றுவிக்கின்ற மித்யா போதம்-அஞ்ஞானம் மனதில் ஜன்ம ஜன்மாந்திரங்களாக உறைந்து பாறை போல் கெட்டியாக உள்ளது.அதன் காரணமாக நமது மனதில் ‘நான்’ ‘ நான்’ என்கின்ற அஹம் பாவம் ஸ்புரித்துக் கொண்டேயிருக்கிறது. இந்தக் காரணங்களால் பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் சம்பவிக்கின்றது.இந்த சம்ஸ்காரத்தைத் தான் மலின வாசனைகள் என்று ஞானிகள் சொல்வார்கள்.

அதே நேரத்தில் பிறப்பும் இறப்பும் என்ற தொடரை முற்றிலும் அறுத்து அத்வைத உண்மையை உணர்த்துவதும் மனதில் எஞ்சியிருக்கின்ற வாசனைகள் வறுத்த விதைக்கு ஸமானமானதாகவும் இருக்கின்ற நிலையில் அதை சுத்த வாசனை என்றும் ஞானிகள் கூறுவார்கள். இந்த வாசனைகள் நம் தரித்திருக்கின்ற தேகத்தை பாதுகாத்து பிராரப்த பூர்த்திக்கு மட்டும் உதவுவதாக இருக்கும்.

எப்பொழுது த்வைத –இரட்டை மனோ பாவம், பிரபஞ்சம் நம்மிலிருந்து வேறானது என்ற மனோ விசாரம் விருத்தியாகின்றதோ அப்பொழுது நமது வாசனைகள் மலினமாகின்றன.

இரட்டை மனோபாவம் வலுவிழக்கும்பொழுது நமது வாசனைகள் சுத்தமடைகின்றன.

பிரபஞ்ச வஸ்துக்கள் நம்மிலிருந்து வேறானவை என்ற நினைப்பு  நம்மில் வலுப்படும்பொழுது, அவைகளை நேடவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது; அதற்கான தேடல் ஆரம்பிக்கின்றது. கிடைத்தால் மகிழ்ச்சியும் கிடைக்காவிட்டால் துக்கமும் உளவாகிறது.கிடைப்பதற்கு உதவுகிறவர்களிடம் பிரியமும், அதற்கு தடையாயிருப்பவர்களிடம் துவேஷமும் உளவாகின்றது.

இந்த ராக துவேஷங்களும் பிரியா-அப்ரியங்களும், சுகம் தரும் என்று தோன்றுகின்ற வஸ்துக்களை சேகரிக்க வேண்டும் என்ற ஆசையும் மரண வேளையிலும் நிற்கின்றது என்றால் அடுத்த பிறவி உறுதி.ஆகவே மலின வாசனைகள் ஜனன-மரணங்களை தொடர் சங்கிலியாக்குகின்றன.

சுத்த வாசனைகள் வலுப்பெற்று நம்மிலிருந்து அன்னியமாக ஒன்றுமில்லை; அல்லது நம்மிலும் மற்றவையிலும் இருப்பது ஒன்றே என்ற வெளிப்பாடு உண்டாகிவிட்டால் நித்திய நிரந்தரமான ஆன்மாவை  புரிந்து கொண்டு விட்டால் பரமானந்தம் தான்; நாம் பெறுவதற்கு வேறொன்றுமில்லை.பின் ஏன் மறுபடியும் பிறக்க போகிறோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s