யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 18

யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 18

 

தினமொரு சுலோகம்

 

நாள் 18                                  துர்முகி வருடம் சித்திரை 18 மேமாதம் 1 2016

அஞ்ஞானமும் செல்வமும்—பொதி சுமக்கும் கழுதையும்

                                    பாரோ அவிவேகின:சாஸ்த்ரம் பாரோ ஞானம் ச ராகிண:

                                    அசாந்தஸ்ய மனோபாரோ பாரோஅனாத்மவிதோவபு:!

                                    भारो अविवेकिन:शास्त्रम् भारो ज्नानम् च रागिण: !

                                    अशान्तस्य मनोभारो भारोनात्मविदोवपु: !!

சத்தியம் எது என்பதை உணராதவனுக்கு வேதங்களைக் குறித்துள்ள அறிவும் பாரமாகத்தான் இருக்கும். எது நித்தியம், எது சத்தியம், என்று பகுத்தறியாதவன் எத்தனை வேத-வேதாந்தங்களைப் படித்தாலும் பயன் கிடையாது. எது சத்தியம் என்று பகுத்தறிய முடியாதவன் அவித்யை எனும் மாயையின் பிடியில் அகப்பட்டு ராக-துவேஷாதிகளுக்கு ஆளாகிறான்.அப்படி விருப்பு-வெறுப்புகளுக்கு ஆளாகிறவர்களுக்கு சாஸ்திர அறிவு- புத்தக அறிவு பாரமாகத்தான் இருக்கும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதென்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் மனக் கொந்தளிப்பிற்கு ஆளாகியிருப்பார்கள். அவர்கள் மன அமைதி நஷ்டப் பட்டவர்களாகிறார்கள். அவர்களுக்கு சாந்தி என்பதே அரிதாகி விடுகிறது. ஆகவே அவர்களுக்கு மனமே பாரமாகத் தோன்றும். நம்மில் பலரும் அடிக்கடி சொல்லுவோம்’ ஏதோ பாரமாக இருக்கிறது” என்று. இந்த பாரம் அஞ்ஞானத்திலிருந்து உளவாகிறது.அவர்களுக்கு மனம் மட்டுமா பாரம்? உடலும் பாரமாக-ஒரு சுமையாகத் தெரியும். அவர்கள் அழகு, ஆயுள், மனம், புத்தி, அஹங்காரம்,என்பவையெல்லாம் துன்பத்தையளிப்பவையாக உணருவார்கள். அதனால் மேலும் துன்பம் அதிகரிக்கும்..

அஞ்ஞானிக்கு மோஹத்தை உளவாக்கி அவனை மாயாலோகத்தில் சிக்கவைக்கும் பொருளாசை மிகவும் அபாயகரமானது.சேர்க்கப்படும் பொருளினால் எந்த வித பயனும் இல்லை.எல்லாவித துன்பங்களுக்கும் பொருளாசை அடிப்படை காரணமாகிறது.அது –அந்த ஆசைக்கு எல்லையே கிடையாது.ஒருனாளும் அது பூர்த்தியடைவது இல்லை.செல்வம் நல்லவர்களிடமும் இருக்கும்; கெட்டவர்களிடமும் இருக்கும். ஆகவே செல்வம் ஒருவனின் மேன்மைக்கு அடையாளம் அல்ல..பொருளாசைக்கு அடிமையாகிவிட்டால் அவனது மனதிலிருந்து பர ஜீவி பிரேமம் என்பது மறைந்து விடுகிறது. இதயம் கருணை வற்றி கடினமான பாறையாக மாறிவிடுகிறது.

இராமன் மேலும் கூறுவான்:” சத்கர்மங்களகின்ற தாமரை மலருக்கு செல்வம் இரவை உளவாக்குகின்றது; இரவு வந்தால் தாமரை மலர் இத்ழ்கள் கூம்பி மொட்டாக மாறி அதன் அழகை இழப்பது போல் செல்வம் சேரச் சேர சத்கர்ம வாஞ்சை வற்றி மனம் வெறுமையடைந்து விடுகிறது. அதே நேரத்தில் துன்பம் எனும் வெண்தாமரைக்கு அது நிலவு போல் வெஞ்சாமரம் வீசுகின்றது.இதயங்களில் ஒளிர்விட்டுக் கொண்டிருக்கின்ற தீபத்தினை-சத் கர்ம வாஞ்சையை காற்றாக வந்து செல்வம் அணைத்து விடுகிறது.

செல்வம் மன சஞ்சலங்களை விசிறிவிட்டு அதிகமாக்குகின்றது. துன்பமாகுமின்ற நஞ்சிற்கு அது வலுவூட்டுகின்றது.

செல்வம் துர்வாசனைகளாகின்ற நாகப் பாம்பு; அது மனதில் பயத்தை உண்டு பண்ணுகின்றது. பாதுகாப்பின்மையை அதிகப்படுத்துகின்றது.

செல்வமானது நமது கண்ணில்க் காணப்படும் கருவிழிகள் போன்று ஒரிடத்தில்  நில்லாமல் நகர்ந்துகொண்டேயிருக்கும்.

அஞ்ஞானமும் செல்வமும் சேர்ந்துவிட்டால் ஒருவன் பொதி சுமக்கும் கழுதை போல் ஆகி விடுகிறான். பாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் பாரமாகவே உணருவான்.

இவ்வாறிருக்க இந்த பிரபஞ்ச வாழ்வு தான் எதற்கு?”.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s