யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 30

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 30

தினமொரு சுலோகம்

நாள் 30                       துர்முகி வருடம் சித்திரை 30 மேமாதம் 11 2016

முமுக்ஷு பிரகரணம்

 

                        யதாயம் சவிகல்போத்தா: சவிகல்பா பரிக்ஷயாத்

                        க்ஷீயதே தக்த்த ஸம்ஸாரோ நிஸ்ஸார இதி நிச்சய:

இராமனின் வைராக்ய  வெளிப்பாடைக் கேட்ட விசுவாமித்திரர் சொன்னார்,” இராமா, உனக்கு இன்னும் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமேயில்லை. நீ அறிவின் நிறை குடம். ஆனால் உனது அறிவை உறுதிப்படுத்தக் கொள்ள வேண்டியுள்ளது. ஆக்வே தான் நீ இந்தக் கேள்விகளைக் கேட்கின்றாய். இதே நிலைமை தான் வியாசமுனிகளின் புதல்வர் சுகருக்கும் ஏற்பட்டது. அந்தக் கதையைச் சொல்கிறேன் கேள்.”

சுக முனிவர் ஸகல ஞானத்தையும் பெற்று விவேகத்திற்கே அதிபதியாக இருந்தார். வாழ்வின் நிலையற்ற தன்மையையும் நித்தியம் எது என்பதையும் தீவிர தவத்தின் மூலம் பெற்ற ஞானம்  அனுபவத்தால் உறுதிப்படுத்தப் படாத ஞானமாக இருந்ததின் காரணமாக  இது தான் ஞானத்தின் கடைசிப் படி என்பதில் அவருக்கு உறுதியேற்படவில்லை. தன் தந்தையும் குருவுமான வியாசரிடமே தன் சந்தேகத்தை கேட்டார் சுகர்.

“ தந்தையே, இந்த உலகம் எப்படியுண்டாயிற்று? எப்படி அமைதி பெறுகிறது? இந்தக் கொந்தளிப்பிற்கும் அமைதிக்கும் மூலகாரணம் என்ன? சற்றே விளக்கிக் கூறவும்.” என்றார் சுகர்.

வியாசர் குமாரனனின் கேள்விக்கு விளக்கமான பதிலை அளித்தார். சுகருக்குத் திருப்திய்ற்படவில்லை.. இதெல்லாம் தானும் சிந்தித்து உணர்ந்த ஞானம் தான்; இதற்கு மேலும் ஏதாவது இருந்தால் கூறும்படி சுகர் கேட்டார். தான் இச்சையேது மில்லாதவனும் விராகதையின் உச்சியிலிருக்கின்றோம் என்றாலும் சுகருக்கு இது தான் உண்மை-நித்திய சத்தியம் என்று உறுதியேற்படவில்லை.

வியாசர் பெருமான் ‘இதற்கு மேல் நான் சொல்வதற்கொன்றுமில்லை; நீ ராஜ ரிஷியன சகரவர்த்தி ஜனகரைப் போய்ப் பார்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

சுகர் ஜனகரின் அரண்மனையை வந்தடைந்தார்/ அரண்மனை சேவகர்கள் அவரை  அரண்மனை வாயிலிலேயே நிறுத்திவைத்து விட்டு ஜனகரிடம் சென்று சுகரின் வருகையை அறிவித்தார்கள். ஜனகர் பதிலொன்றும் கூறவில்லை..

சேவகர்கள் அரண்மனை வாயிலில் நின்று கொண்டிருந்த சுகரிடம மன்னரின் அழைப்பு வரும் வரை காத்திருக்கச் சொன்னார்கள்.

சுகர் காத்திருக்க ஆரம்பித்தார்.ஒருனாள் போயிற்று; இரண்டு நாள் போயிற்று.ஏழு நாட்களுக்குப் பின் அழைப்பு வந்தது. அரசவைக்கல்ல; அரண்மனை முற்றத்திற்கு .அங்கு மீண்டும் காத்திருக்கும்படி சொன்னார்கள். மீண்டும் ஏழு நாட்கள் போயின.

அதற்குப் பின்னால் அரண்மனை சேவகர்கள் சுகரை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சுகருக்கு பிரமாதமான விருந்தோம்பல் காத்திருந்தது

அழகிய பெண்மணிகள் சுகரை சுசுரூஷித்து அவருக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்தார்கள். வித வித மான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

இருபத்தியோரு நட்கள் ஓடிமறைந்தன.. சுகரில் எந்த விதமான அதிருப்தியின் நிழலோ, மகிழ்ச்சியின் ரேகைகளோ வெளிப்பட வில்லை. வேத வியாசனின் புத்திரன் இமயமலை போல் உறுதியாக் ஜனகரின் தரிசனத்திற்கு காத்திருந்தார். அவர் எப்பொழுதும் போல் சாந்தியுடனும் நிஷ்களங்க முகத்துடனும் மௌனமாகவும் காத்திருந்தார்..

மறு நாள்- அதாவது இருபத்தியிரண்டாவது நாள் ஜனகரிடமிருந்து அழைப்பு வந்தது. ஜனகரின் முன்னால் வந்து சேர்ந்த சுகருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சுகரை சாஷ்டாங்கம் நமஸ்கரித்து ஜனகர் கேட்டார், “ இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு கர்மவும் மீதியில்லாத தங்களுக்கு, எதையும் தேடிப் பெறவேண்டியதில்லாவருமான தங்களுக்கு என்னால் என்ன ஆகவேண்டும்? செய்யக் காத்திருக்கிறேன்.”

சுகர் சொன்னார்,”இந்த சம்சார கோலாஹலம் எப்படி உருவானது?இதெப்படி முடிவிற்கு வரும்?இதன் உண்மைகளை விளக்கினால் நல்லது.”

தன் தந்தை சொன்னவையே ஜனகரும் சொல்வதைக் கேட்ட சுகர் ,’என் தந்தையும் இதையே கூறினார்; தாங்களும் அதையே கூறுகிறீர்கள்; சாஸ்திரங்களும்( வேதங்களும்) இதையே சொல்லுகின்றன. உண்மை இவ்வளவு தானா?”.

அப்பொழுது சுகருக்கு வெளிவானது: “நம்முடைய போத ஸ்வரூபத்திலிருந்து உளவாகும் சங்கல்ப்பங்களால்- கற்பனைகளால் இந்த சம்சாரம்- பிரபஞ்ச0 பௌதிக உலகம் உளவாகிறது; அந்த சகல்பங்கள் எப்பொழுது அடங்குகிறதோ அந்தக் கணம் இந்த பிரபஞ்சம் அஸ்தமனமாகும். இப்படிப்பட்ட பிரபஞ்ச வாழ்க்கை அர்த்தமில்லாதது. இது சாஸ்திரங்களால் உறுதிப்படுத்தப் பட்ட சத்தியம்”

யதாயம் சவிகல்போத்தா: சவிகல்பா பரிக்ஷயாத்

                        க்ஷீயதே தக்த்த ஸம்ஸாரோ நிஸ்ஸார இதி நிச்சய:

அயம்—               இந்த சம்சார கோலஹலம்

யதா ஸவிகல்போத்தா::——போத சொரூபமான ஆத்மாவில் தோன்றும் கர்பனைகளிலிருந்து உயிர்த்தெழுகின்றது

சவிகல்ப பரிக்ஷயாத் —–தன்னுடைய கற்பனைகள் நசித்தால்

க்ஷீயதே— நசிக்கும்

துக்த சம்சாரோ நிஸ்ஸார:—இகலோக வாழ்விலுள்ள பிரமம் (பிரியம்) அர்த்தமில்லாதது.

இதி நிச்சயம்———————— சாஸ்திரங்களால்(வேதங்களால்) தீருமானிக்கப்பட்ட விஷயமிது.

இந்த வெளிச்சம் வந்ததும் சுகர் நிர்விகல்ப சமாதி நிலைக்கு சென்று விட்டார்.

..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s