யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 32

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 32

தினமொரு சுலோகம்

 

நாள் 32                       துர்முகி வருடம் வைகாசி 2 மே மாதம் 15 2016

முமுக்ஷு பிரகரணம் 3 ஜனன ரகசியம்

                                                யச: ப்ரப்யுதினா யஸ்மை ஹேதுனைவ வினா புன:

                  புவி போகோ ந ரோசந்தே ஸ ஜீவன்முக்த்ச் உஸ்யதே !

                  यश: प्रभ्युतिना यस्मै हेतुनैव विना पुन:

                  भुवि भोगो न रोचन्ते स जीवन्मुक्त उच्यते !!

அரசவையில் வீற்றிருக்கும் மற்ற முனிவர்களிடம் மஹிரிஷி விசுவாமித்திரர் கூறினார்:” இராமன் சுகரைப் போலவே ஆத்ம ஞானம் பெற்றிருக்கிறான்.சூக்ஷ்மமான வாசனைகள் கூட அற்றுப் போயிருப்பதால் லௌகீக விஷயங்களில் விரக்தி தோன்றுவது சகஜமே. இந்த வைராக்யம்-பற்றின்மை தான் ஞானத்தின் இலக்கணம். வாசனைகள் அதிகரிக்கும்பொழுது  பந்தனமும், அவை இல்லாதாகும் பொழுது முக்தியும் உளவாவது உங்களுக்கெல்ல்லாம் தெரிந்தது தானே? புகழோ மற்ற விஷயங்களின் பால் ஈர்ப்போ ஆத்ம ஞானம் உண்டானவனுக்கு –முக்தனான ஒரு முனிவருக்கு பொருட்டேயல்ல என்பது சுகரின் கதை தெளிவாக்குகிறது. எந்த வித இந்திரிய சுகங்களும் அவனை அசைப்பதில்லை.”

“ இந்த முக்தியை அடைந்துள்ள இராமனுக்கு வேண்டிய உபதேசங்களை வசிஷ்டர் அளிக்கட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால் அது எங்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும் அவர் சொல்லப் போகும் ஞானபாடங்கள் ஆத்ம ஞானத்தின் பரமோன்னதமான அறிவையும் வேதங்களில் காணுகின்ற அறிவின் சாரமாகவும் அமையும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் ஒரு அதீவ ஞானியான முனிவர் மிகவும் பொருத்தமானவனும் விராகதையின் உச்சியில் நின்றுகொண்டிருக்கும் ஒரு சீடனுக்கல்லவோ உபதேசிக்கப் போகின்றார்.”

வசிஷ்டர் சொன்னார்:” தங்களின் விருப்பத்தை நான் மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். செல்வா, இராமா, பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவிடமிருந்து எனக்கு கிடைத்த அறிவை உனக்கு அளிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”

இந்த சந்தர்ப்பத்தில் இராமன் கேட்டான்:” தங்கள் உபதேசங்களை கேட்க மிகவுமாவலுள்ளவனாக இருக்கிறேன். இருந்தாலும் முதலில் நீங்கள் எல்லா விதத்திலும் மேன்மையுடைய வேத வியாசரை முக்தனாக சொல்லாமல்,அவர் மகன் சுகரை முக்தன் என்று கூறுகிறீர்கள்? அது ஏன்?”

வசிஷ்டர் சொன்னார்: “ ராமா நீ ஒரு விஷயத்தை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.. எண்ணற்ற பிரம்மாண்டங்கள் கல்பாந்தரங்களாக உண்டாகி அழிந்து போயிருக்கின்றன .இப்பொழுது நாம் காணும் இந்த பிரம்மாண்டத்தை-பிரபஞ்சத்தை புரிந்து கொள்வதே மிகவும் கஷ்டமான காரியம். ஆகாயத்தில் கட்டப்பட்ட கோட்டைகள் போல் இந்த ஜகத்தும் ஆசைகளின் விளைவாக, நமது சித்தவிருத்தி காரணமாக, கற்பனையில் உளவாகின்ற அசத்தியமான தோற்றமே. உயிரினங்கள் தங்களது சித்தத்தில் இந்த உலகை கற்பனையால் உருவாக்கின்றன. உயிருள்ளவரை இந்த கற்பனை வலுவடைந்து கொண்டே போகிறது. மரணத்திற்குப் பின் இதற்கப்பாலுள்ள பிரபஞ்சத்தை அனுபவிக்கிறார்கள். வழைமட்டை போல் உரிக்க உரிக்க வந்து கொண்டேயிருக்கும் இந்த பிரபஞ்சங்கள்..பிரபஞ்சமோ அதிலுள்ள வஸ்துக்களோ அல்லது அது உருவாவது போல் உளவாகின்ற தோற்றமோ எதுவுமே உண்மையல்ல. எல்லாமே கற்பனை தான். ஆனால் நமக்கு அவை உண்மை என்று தோன்றுகிறது; நாம் நம்புகின்றோம். இந்த அஞ்ஞானம் உள்ளவரை பிரபஞ்சங்களும் தோன்றிக்கொண்டேயிருக்கும்.

இந்த பிரபஞ்சங்களில் ஜீவாத்மாக்கள் ஒரே போல் உருவத்திலும், வேறு வேறு தோற்றங்களிலும் பிறக்கின்றன. வேத வியாசன் சிருஷ்டியெனும் இடைவிடாத நீரோட்டத்திந்  இருபத்தி மூன்றாவது அருவியாக வந்துள்ளார். அவரும் அவரைப் போன்ற மேன்மைதங்கிய முனிவர்களும் மூர்த்தி உருவமாக—பௌதிக சரீரம் எடுத்து பிரபஞ்சத்தில் தோன்றி பிறகு உருவற்ற பிரம்மத்தில் லயித்து விடுகிறார்கள். சில பிறவிகளில் அவர்கள் மற்ற்வர்களுக்கு சமானமானவர்களாகவும் மற்று சில பிறவிகளில் ஈடு இணையற்றவர்களாகவும் இருப்பார்கள். இந்த ஜன்மத்தில் வேத வியாசர் முக்தியடைந்த ரிஷி வரியன் தான் சந்தேகமில்லை.ஆனால் அவரைப் போன்ற முனிவர்கள் பல பிறவியெடுத்து பலரோடும் பந்தனத்தில் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள். எல்லாப் பிறவியிலும் அவர்கள் எல்லோரையும் விட மேன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.இந்த உண்மையை நீ புரிந்து கொள்;”

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s