யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 39

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 39

தினமொரு சுலோகம்

 நாள் 39            துர்முகி வருடம், வைகாசி 9 மே மாதம் 22, 2016

ஆத்ம நியந்திரணம்-சுயக் கட்டுப்பாடு

 

 

ஸ்திதோ பி ஸ்தித இவ ந ஹ்ருஷ்யதே ந க்ருப்யதி

ய சுஷுப்தசம: ஸ்வஸ்த்: ச சாந்த இதி கத்ய்தே !

स्थितो पि स्थिथ इव न ह्रुष्यति न क्रुप्यति

य: सुषुप्तसम: स्वस्थ: स श:न्त इति कथ्यते !

வசிஷ்ட முனிவர் தொடருகிறார்:’

சம்சார சாகரம் என்று சொல்லப்படும்  தொடர்கதையிலிருந்து வெளியே வர வேண்டுமென்றால், ‘மாற்றங்கள் எதற்கும் உட்படாத அனாதியான’ அந்த சத்திய வஸ்துவை கண்டறியணும். அதை சார்ந்து செயலாற்ற வேண்டும். என்றென்றும் அழியாத அந்த’ ஒன்றில்’ மனதை ஊன்றியிருப்பவனை மட்டுமே உத்தமன் என்று சொல்ல முடியும். ஏனென்றால் அப்படிப்பட்டவனுக்கு சுய அடக்கம்-கட்டுப்பாடு படிந்திருப்பதால் மனம் சாந்தமாகவிருக்கும். இன்ப-துன்பங்கள் தங்களுக்குள்ளேயே போராடி ஒரு சமன்  நிலைக்கு வந்து சேர்ந்திருக்கும்.அந்த அறிவின் நிறைவில் அவனுக்கு தன்னடக்கம் உண்டாகிறது. இந்த சத்தியத்தை தெரிந்து கொள்ளாதவன் ‘தீ பிடித்து எரிகின்ற வீட்டில் உறங்குகின்றவனைப்போல்’ கவலையால் பாதிக்கப்பட்டிருப்பன்,

இந்த இகலோக வாழ்விலேயே சாசுவதம்- அழிவில்லாதது எது என்று அறிந்தவன் அந்தக் கணமே முக்தனாகிவிடுகிறான்.அவன் அவித்யையால் மறுபிறவி எடுக்க வேண்டி வருவதில்லை.

அப்படியொரு சத்தியம் உண்மையிலேயே உளதா என்று சந்தேகம் வரலாம். அப்பொழுதும் ஆத்ம விசாரத்தை நிறுத்தக் கூடாது. ஏனென்றால், வாழ்க்கையைக் குறித்துள்ள பூர்ணமான தேடுதல் தான் துன்பங்களைக் எதிக்கொள்ளவும் வேதனைகளை குறைக்கவும் நமக்கு உதவும். அதே நேரத்தில் சாசுவதமான- என்றென்றும் உண்மையாக நிலை கொள்கின்ற சத்தியத்தைக் கண்டுவிட்டாலோ- உணர்ந்து விட்டாலோ பரம சாந்தியும் பந்த பாசங்களிலிருந்து விடுதலையும் கிடைக்கும்.

அழிவில்லாத அந்த உண்மையைக் கண்டறிவதற்கு, யாகம் முதலிய கர்மங்களோ, புண்ணிய ஸ்தல யாத்திரைகளோ பொருளோ உதவாது. சரியான அறிவின் ஒளியில் ஏற்படுகின்ற, மனோபக்குவமும் அதனால் கைவருகின்ற மனக்கட்டுப்பாடும் மட்டுமே அதற்கு உதவும்..

தபோதானம் ஜபஸ்தீர்தம் நாத்யந்தம் து:க்கசாந்தயே

தத்தாவத் து:க்க மோக்ஷார்தம் ஞானம் ப்ரகதயாம்யஹம்

तपोदानम् जपस्तीर्थम् नात्यन्तम् दु:खशान्तये

तत्तावद् दु:ख मोक्षार्थम् ज्नानम् प्रकथयाम्यहम् !

தவம், தானம், ஜபம், புண்ணியஸ்தல யாத்திரை இவைகள் ஒன்றும் நமது துன்பத்திற்கு அறுதி வருத்தாது. ஞானம் ஒன்றினால் மட்டுமே அது இயலும். இங்கு போத ஸ்வரூபமான ஒன்று மட்டும் தான் இருக்கிறது. பலதாக நமக்குத் தெரிவதெல்லாம் அந்த போதத்தின் மாயா விலாசங்கள் தான். இதை அறிந்து கொள்வது தான் ஞானம். நான் இந்த ஞானத்தை காலங்காலமாய் இந்த உலகிலுள்ளோருக்கு தெரியப் படுத்திக்கொண்டுள்ளேன்.

தாமரைச் செல்வனான பிரம்மதேவன் என்னை தன்னுடைய சங்கல்பத்தின் மூலம் உருவாக்கினார்.அவருடைய வாசஸ்தானமன தாமரையிலேயே ருத்ராக்ஷம் அணிந்து கமண்டலம் ஏந்தி வணங்கி நின்றேன்.

என்னை அருகில் அழைத்து சற்று மேலேயுள்ள ஒரு (  தாமரை) இதழில் அமர வைத்து இப்படிக் கூறினார்:

“ மகனே, நீர்த் திவலைகள் படிந்த ஒரு கண்ணாடி போல் ஒரு சிறிது நேரத்திற்கு உன் மனதை அஞ்ஞானத்தினால் மூடி வைக்கிறேன்; உன் மனம் குரங்கு போல் சஞ்சல மாகட்டும்.”

அந்த பித்ரு வசனங்களின் பலனாக எனது நிர்மலமான ஸ்வரூபத்தை மறந்தேன்.எல்லையற்ற துன்பம் என்னை அலட்ட ஆரம்பித்தது. புத்தியின் சிந்தனா சக்தி முழுவதும் இழந்தேன்.

அப்பொழுது தந்தை கேட்டார்,” மகனே, நீ துன்பத்தினால் வருத்தமுற்றுள்ளாய். எப்படி இந்த துன்பத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா? நித்திய சாந்தி கிடைக்கும் வழி தெரிந்து கொள்ள வேண்டுமா?”

தந்தையின் இந்த வசன்ங்களைக் கேட்ட நான் இந்த துன்ப அனுபவங்களிலிருந்து எப்படி முக்தி நேடுவது என்றும் எப்படி நிரந்தர-முடிவில்லாத சாந்தியையும் ஆனந்த்ததையும் பெற முடியும் என்று கேட்டேன். இந்த துன்பங்கள்  நிறைந்த சம்சாரம்-பிரபஞ்சம் எப்படி உருவானது என்றும் எவ்வாறு இது நசிக்கும் என்றும் கேட்டேன்.

மஹானான எனது தந்தை ஆத்ம ஞானோபதேசம் செய்தார். நான் முக்தியடைந்து பழைய நிலையை அடைந்தேன்.

அப்பொழுது தந்தையான பிரம்ம தேவன் கூறினார்,” நான் ஏன் உன்னை அஞ்ஞானத்தில் மூழ்கடித்து பின் ஞானோபதேசம் செய்தேன் தெரியுமா? ஞானம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத்தான் உபதேசம் செய்யலாம் துன்பத்தை அனுபவித்த நீ முக்தியை வேண்டினாய். அதனால் உபதேசம் பயனுள்ளதானது.  நீ இனி பிரபஞ்சம் உள்ள காலம் வரை ஞானம் வேண்டும் என்று யாசிக்கின்றவர்களுக்கு அதை தானம் செய்து அவரகளை கரை சேர்ப்பாயாக” என்று அருளினார் என் தந்தை. அதை நான் இன்று வரை செய்து வருகிறேன் “ என்றார் வசிஷ்டர்.

பிறகு வசிஷ்டர் தொடர்ந்தார்:” தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை உபதேசம் அருளுகின்ற குருவின் அறிவையும் அறிவின்மையும் தெரிந்து கொண்டு கேள்வி கேட்கின்றவன் தான் உத்தம்மான மாணாக்கன். அதே போல் உண்மையான அறிவு தாகத்தோடு வார்த்தைகளை அளந்து சரியான கேள்விகளுக்கு மட்டும் உபதேசம் செய்வது தான் சிறந்த ஞான குருவின் மகிமை. அறிவின் மதிப்பு தெரியாதவனுக்கு உபதேசிப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஆகவே உனக்கு, ஸ்ரீராமா, உபதேசிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”

வசிஷ்டர் தொடர்ந்தார்,”மனிதராயிருந்தாலும்  தேவர்களாயிருந்தாலும் தேவதைகளாயிருந்தாலும் எப்பொழுதும் உணர்ந்திருக்கும்பொழுதும், உறங்கும்பொழுதும் படுக்கும்பொழுதும் நடக்கும்பொழுதும் உட்காரும்பொழுதும்  இடைவிடாத –முடிவில்லாத இந்த மனதை கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். அறிவின்-ஞானத்தின் அடையாளம்- வெற்றிச்சின்னம் இந்த மனோ  நியந்த்ரணம்-மனக்கட்டுப்பாடு தான்.

மனம் சாந்தமாகவும் தெளிவாகவும் நிர்மலமாகவும்-அழுக்கில்லாத்தாகவும் மோகத்தால் அலைக்கழிக்கப்படாததாகவும்  எந்த விதமான ஆசக்திக்கும்- விருப்புக்களுக்கும் இடம் கொடாததாகவும் ஆகும்பொழுது அதில் வேறு ஒரு பொருளும் நுழைய முடியாது. ஆகவே எதையும் நேடவும் வேண்டாம்; விடவும் வேண்டாம். இது தான் முக்தி வாசலில் நிற்கும் நான்கு கவலாளிகளில் ஒருவனான ஆத்ம  நியந்த்ரணம் அல்லது சுயக்கட்டுப்பாடு.

ஆரம்பத்தில் இந்த சம்சாரக்கடலிலிருந்து கரையேற, வேதாந்தங்களைக் கற்றறிந்து அது குறிந்து சத் ஜனங்களுடன் விவாதித்து தன்னைத் தெளிவு படுத்திக்கொண்டு,ஒருமித்த மனதுடன், புலனடக்கம் பயின்றால் ஸ்த்திய வேட்கை பூர்த்தியாகும். நாம் அந்த பரமோன்னதமான சத்=சித்-ஆன்ந்த்த்தை அனுபவிக்க முடியும்.

பொறுக்க முடியாத இந்த சம்சார விஷ பாதிப்பு, மனவடக்கம் என்ற யோகம் மூலம் தீரக்கூடிய ஒன்றே. யோகம் எங்கின்றபொழுது ஜீவாத்மா-பரமாத்மா யோகத்தை அறிந்து அவை இரண்டல்ல ஒன்றே தான் என்ற சத்தியத்தை உணர்ந்து மனதில் உறுதிப் படுத்திக்கொள்ளவேண்டும்,

விஷய விஷத்தினால் உண்டாகின்ற மோகம் என்கின்ற வியாதி சரியான முறையில் அணுகவில்லையென்றால்  பரவி சர்வ நாசத்திற்கு வழி வகுக்கும். துன்பத்தை இன்பமென்று ஒத்துக்கொண்டு அவதிப்பட வேண்டிவரும்.

அக்னி யினால் ஏற்படும் தாகம் நீர்வீழ்ச்சி போல்,கைகால் போன்ற அவையவங்களை முறித்தெடுப்பது உடலில் சந்தனம் பூசுவது போல்,தலை வெட்டி உயிர் போவது  பன்னீரபிஷேகம் போல்,வாயை மூடி கட்டிப் போடுவது சுகமான உறக்கம் போல் தொடர்ந்து ஏற்படும் துன்பங்களை இன்பானுபவங்கள் என்று அங்கீகரிக்க வேண்டி வரும்.

ஆகவே இராமா, விஷய சுகங்களை நாடகத்தில் காண்கின்ற பொய்யான அனுபவங்கள் போல் உதறித் தள்ள வேண்டும். அதற்கு வேத சாஸ்திரங்களின் அடிப்படையிலான அத்வைத சத்தியத்தை கண்டறிந்து மனதில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆகவே முக்தி யடைய வேண்டுமென்றால் ஆத்ம நியந்திரணம், எதிலும் சம்திருப்தி—போதும் என்ற மனோ பக்குவம், சத் சங்கம், எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையை கண்டறிய வேண்டுமென்ற உத்வேகம் இந்த நான்கு துவார பாலகர்களின் நட்பு வேண்டும்.”

யாரொருவன் பிரியமானதோ பிரியமில்லாததோ எப்படிப் பட்ட வார்த்தைகளையும் அனுபவங்களையும் அதீவ சந்தோஷமோ அதீவ துக்கமோ இல்லாமல் கேட்கவும், காணவும், முகரவும், உண்ணவும், செய்கின்றானே அவன் தான் ஆத்ம-சுயக் கட்டுப்பாடு உள்ளவன் .சுஷுப்தியில் யாருடனும் விருப்பமோ வெறுப்போ ஏற்படாதது போல் எப்பொழுதும் யாராலும் எதாலும் பாதிக்கப்படாமல் இருக்க அவனால்த் தான் முடியும். அவன் பரமானதத்திற்கு அதிகாரியாகிறான்.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s