யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 47

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 47

தினமொரு சுலோகம்

நாள் 47

                              ஆதிவாஹிக சரீரம் -ஆதி பொதிக சரீரம்-ஆத்ம சாக்ஷாத்காரம்

                                                ஆதிவாஹிகமேவாந்தர்விஸ்ம்ருத்யா த்ரிடரூபயா

                                                ஆட்ஜிபௌதிக போதேன முத்தா பாதி பிசாசவத் !

 

                                                आतिवाहिकमेवान्तर्विस्म्रित्या द्रिडरूपया

                                                आदिभौतिक बोधेन मुद्धा भाति पिशाचवत् !

 

“ சுத்த போதமான பிரம்மத்தால் படைக்கப்பட்ட ஜீவஜாலங்கள் சுத்த போத ஸ்வரூபங்கள் தானென்றாலும் தன்னுடைய சுய ரூபத்தை மறந்ததாலும் பௌதிக சரீர சிந்தனைகளில் மூழ்கியதாலும் எந்த உருவமெடுத்துள்ளதோ அதன் தாக்கத்திற்கு ஆட்பட்டு, செயல் புரிய ஆரம்பிக்கின்றன. இது எப்படியென்றால் பார்க்கின்றவனின் மன சஞ்சலங்களுக்கு ஏற்றார்ப்போல் உடலற்ற பேய்-பிசாசுக்கள் அவனவனது மனதில் உருவமெடுப்பது போல் நிகழ்கிறது.”

வசிஷ்டரின் மேற்படிக் கருத்து இராமனின் கீழ்க்கண்ட மூன்று கேள்விகளுக்கு பதிலாக கூறப்பட்ட்து தான்.

இராமன் கேட்டான்: “வணக்கத்துக்குரிய மாமுனிவரே !

பிரம்மம் எல்லாவற்றிற்கும் மூல காரணம்; முதலானது என்று கூறுகிறிர்கள்.

தானே பிறந்தது, சர்வ ஞானி எல்லா ஆன்மாக்களின் மொத்த உருவம் என்றும் கூறுகிறீர்கள்.

எப்படி முத்து மாலையில் முத்துக்கள் கோர்க்கப்பட்டிருக்கின்றனவோ அப்படி.பிரம்மத்தில் உலகங்கள் கோர்க்கப்பட்டிருக்கின்றன என சொல்கிறீர்கள்.

மனத்துக்கும் உலகிற்கும் உலகிலுள்ள பொருள்களுக்கும் தொடர்பில்லை; மனமே பிரம்மத்தின் ஓர் அங்கம் என்றும் கூறுகிறீர்கள்.

எனக்கும் உங்களுக்கும் பழைய நினைவுகளே இப்பிறப்பிற்கு காரணமென்றால், ஏன் பிரம்மத்திற்கு பல கல்ப கால நினைவுகள் கிடையாது?”.

வசிஷ்டர்  கூறுகிறார்: “  இராமா, உடம்பு உள்ளவர்களுக்கு  முன் செயல்கள் உண்டு. அதனால் மறு பிறப்பு உண்டு. பிரபஞ்ச படைப்பாளியான பிரம்மாவில் பழைய ஞாபகங்கள் எதுவும் எஞ்சி நிற்பதில்லை.ஏனென்றால் அவருக்கு பூர்வகாலமும் கிடையாது; பூர்வ கர்மங்களும் கிடையாது. பௌதிக சரீரம் என்று ஒன்றில்லாமலிருப்பதால் பிரம்ம்ம் கர்மங்கள் எதுவும் ஆற்றுவதில்லை. அது ஒரு ஆன்மீகம் மட்டுமாக உளது. ஆதி வாஹிகம் என்பதன் பொருள் ஒரு பௌதிக சரிரத்திலிருந்து இன்னொரு சரீரத்திற்கு மாறக்கூடியது..

‘மர்த்த்யர்’( ம்ரித்த்யுவிற்கு ஆளாகிறவர்-மரணத்திற்கு ஆளாகிறவர்கள்) எனப்படும் மனிதர்களுக்கு பௌதிக சரீரம் மற்றும் ஆன்மீக சரீரம் என இரண்டு சரீரங்களும், மனிதன் என்பதாலையே மனதும் உள்ளது..

பிரம்ம்மோ பிறவாதது என்பதால்( தானே தோன்றிய ஒன்று )அதற்கு பௌதிக சரீரம் கிடையாது; ஆன்மீக சரீரம் மட்டும் தான். யாராலும் படைக்கப்படாத அவன் ஒரு படைப்பாளி.

ஏற்கனவே சொன்னது போல் தங்க ஆபரணங்களின் மூலப்பொருள் தங்கதான் என்பது போல் எல்லா படைப்புக்களின் மூலமும் படைப்பாளி தான்.அவனே எல்லா படைப்புக்களிலும் குடியிருக்கிறான்.

பிரபஞ்ச சிருஷ்டிகளோ பிரம்மத்தில் ஏற்பட்ட ஒரு ஸ்பந்தனத்திலிருந்து உருவானவை. ஒரு சிறு –தாற்காலிகமான சித்த விருத்தியின் மூலம் உருவானதால் படைப்புக்களெல்லாம் சித்தவிருத்தியால் ஆட்சி செய்யப் படுகின்றன. சிறு சித்த விருத்தி வளர்ச்சியடைந்து பரவி விசுவமாக உருவெடுத்துள்ளதால்,விசுவத்திலுள்ள எல்லா சிருஷ்டிகளும் தாற்காலிகமானவையே; நிரந்தரம் அல்ல.

இந்த சித்த ஸ்பந்தனம் தான் ஜீவராசிகளின் சூக்ஷ்ம சரீரம்..பௌதிக அனுபவங்களெல்லாம் சித்த விருத்தியினால் ஏற்படுகின்ற- ஏற்படுவதாக தோன்றுகின்ற- கற்பனையே. கண நேரத்தில் தோன்றி மறையக்கூடியவையே. கனவில் அனுபவிக்கின்ற சிற்றின்ப-லைங்கிக-சுகத்தைப் போன்றது.

படைப்பாளிக்கு பௌதிக சரீரமில்லையென்றாலும் இரண்டு விதமான சஹஜ சுபாவங்கள் உண்டு; ஒன்று- சுத்த போதம்-ஆன்ம சொரூபம்; இரண்டு- சிந்தாசொரூபம்.

ஆன்ம சொரூபம் எந்த வித மலினமுமில்லாமல் நிர்மலமாக இருக்கிறது.

சிந்தா சொரூபம் தெளிவில்லாமலிருக்கிறது; ஏதோ ஒரு வித ஸ்பந்தனம்- சலனம்- சஞ்சலம்.

அவ்வாறு ஜீவாத்மாக்கள் உருவாகின்றன. விசுவ போதத்தில் உளவாகின்ற ஒவ்வொரு சிந்தைகளும் ஒவ்வொரு சிருஷ்டியாக-படைப்பாக இந்த பிரபஞ்சத்தில் வெளிப்படுகின்றன.

ஆனால் இந்த ஜீவாத்மாக்கள் அவர்களது சுத்த போத சொரூபத்தை மறந்த்தாலும் பௌதிக வஸ்துக்களைப் பற்றி சிந்திப்பதாலும் அவித்யை எனும் மாயா வலயத்தில் சிக்கி சம்சாரக்கடலில் விழுந்து தத்தளிக்கின்றார்கள். பிரபஞ்சம் மனோமயமானது.

படைப்பாளிக்கு இம்மாதிரி மயக்கம் எதுவும் கிடையாது.அவர் தனது ஆன்ம சரீரத்திலேயே உறுதியாக நிலை கொள்கின்றார். ஜீவாத்மாக்களுக்கும் அந்த நிலையுள்ளது; ஆகவே அதை அடைய முடியும். கற்பனையிலுளவான பிரபஞ்ச சிருஷ்டிகளிலிருந்து விடுபட்டு தன் ஆன்ம சொரூபத்தை தரிசிப்பது- ஆன்ம சொரூபமாக ஆவதுதான் ஆத்ம சாக்ஷாத்காரம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s