யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 48

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 48

தினமொரு சுலோகம்

நாள் 48

மனம்

நத்ரிஸ்யமஸ்தி சத்ரூபம் ந த்ரிஷ்டா ந ச தர்சனம்

ந சூன்யம் ந ஜடம் நோ சிச்சாந்தமேவேதமாததம் !

नद्रिश्यमस्ति सद्रूपम् न द्रिष्ता न च दर्शनम्

न शून्यम् न जडम् नो चिच्चान्तमेवेदमाततम् !

மறு  நாள் அரசவை கூடியதும் இராமன் கேட்டான்: “ மதிப்பிற்குரிய குரு நாதரே இந்த பிரபஞ்சமே மனோமயமானது; மனம் இருப்பதால்த் தான் நாமெல்லாம் மனிதர்கள்; கனவில் காண்பது, மனதில் ஆசைப்படுவது, கற்பனையில் தோன்றுவது, எண்ணங்கள், மனப்பதிவுகள், ஞாபகங்கள் எல்லாமே மனம் என்றீர்கள். அப்படிப்பட்ட மனம் தான் என்ன?”.

வஸிஷ்டன் தொடர்ந்தார்:

சூன்யமாக இருக்கும் இடத்தை ஆகாயம் என்று சொல்கிறோம். அதுபோல் மனமென்பது ‘எதுவுமே’ இல்லாத நிசூன்யமானது .. மனம் என்பது உண்மையோ இல்லையோ. அது பிரபஞ்ச வஸ்துக்களைக் குறித்துள்ள போதம் அல்லது அறிவு தான்..மனம் என்பது தான் சிந்தைகள்- இரண்டும் வேறு வேறல்ல. ஆன்மீக சரீரத்தால் மூடப்பட்டிருக்கும் ஆன்மா தான் மனம் என்பது. பௌதிக சரீரத்தின் இருப்பே இந்த மனம் இருப்பதால்த் தான். மனம் தான் இது ஆபரணம், இது பாத்திரம் என்பன போன்ற பொருள்களை நமக்கு போதிப்பது..மனம் தான் இது என் வீடு, என் தாய் தந்தையர், சகோதர்ர்கள், நண்பர்கள் என்ற பந்தத்தை உண்டு பண்ணுவது. மனம் தான் அவித்யை, சம்ஸ்காரம்,மனோ-வஸ்து, பந்தனம் இருட்டு, ஜடம் என்றெல்லாம் பெயரில் அறியப்படுவது. இன்னொரு விதத்தில் சொல்லப் போனால் அனுபவமே மனம் தான். மனமில்லையென்றால் அனுபவமில்லை. இது இன்பம், இது துன்பம், இது இனிப்பு, இது கசப்பு என்ற அனுபவங்களெல்லாம் மனம் சொல்லித் தருவது தான். . மனம் இல்லையென்றால் இந்த அனுபவங்கள் எதுவும் கிடையாது. பஞ்சேந்திரியங்கள் வழியாக ஏதொன்று எல்லாவற்றையும் தரிசிக்கின்றதோ அறிந்துகொள்ளுகின்றதோ அது தான் மனம்.

மனம் என்பது சூன்யாகாயத்தில் உயர்ந்து வருகின்ற ஒலிகளின் சேர்க்கையே.அதற்கு உருவம் கிடையாது.  அது உடலினுள்ளிலும் கிடையாது; வெளியிலும் கிடையாது. ஆனால் அது எங்கும் நிறைந்து நிற்கின்றது; எப்பொழுது நிறைந்து நிற்கின்றது. விஷயானுபவத்திற்கு ஒரு நிமித்தம்- ஒரு காரணம் தான் மனம். மனத்தை பார்க்க இயலாது. அது கற்பனையே. எதையும் சங்கல்ப்பிக்காமல் இருந்தால் மனமும் இராது. அது இருதயத்திலும் இல்லை; மூளையிலுமில்லை. உடலின் எல்லா பாகத்திலுமுள்ளது..கைவலிக்கிறது, கால் வலிக்கிறது, வயிறு பசிக்கிறது என்று சொல்வதெல்லாம் மனம் தான். சங்கல்பமும் மனமும்  இரண்டல்ல; ஒன்றே தான். இந்த சங்கல்பங்கள் நசித்துவிட்டால் அங்கு சுத்த சைதன்யம் மட்டும் தான் இருக்கும்.

இந்த பிரபஞ்சமே ஒவ்வொரு அணுவிலும் குடியிருக்கின்ற போதம் அல்லது மனம் தான். மனமில்லையென்றால் பிரபஞ்சமில்லை

தங்கத்தில் ஆபரணங்கள் உண்டாவதற்கான சத்தியக் கூறு எப்பொழுதும் குடியிருக்கின்றது; ஆனால் மறைந்திருக்கின்றது. அது போல் பிரபஞ்ச வஸ்துக்கள் எல்லாம் காண்பவனில் மறைந்திருக்கிறது. ‘விஷயியில்’ இருந்து ‘விஷயத்தை’ பிரிக்க இயலாது.அப்படி பிரித்து விட்டால் அங்கிருப்பது சுத்தபோதம் மட்டும் தான்; அதாவது ஆன்மா மட்டும் தான்.அப்படிப்பட்ட சுத்த ஆன்மாதான் பிரம்மம்; அதில் கடுகளவு கூட ‘விஷயம்’ இராது; இருக்க முடியாது.அது தான் சாக்ஷாத்காரம். அந்த நிலையில் விருப்பு வெறுப்புக்கள் கிடையாது.ராக-துவேஷங்கள் இராது; நன்மை-தின்மை, நான் ,நீ,பிரபஞ்சம் என்ற அவித்யை இராது.வஸ்துக்களைக் குறித்துள்ள அறிவு ஒரு வாசனையாகக் கூட இராது. அது தான் பரமமான முக்தி.

அப்பொழுது இராமன் வினவினான்:” மாஹான்மாவே, விஷய வஸ்து சத்தியமானால் அதற்கு நாசம் கிடையாது. ஆனால் அது அசத். அப்படியிருக்கையில் அதை தெரிந்து கொள்ளாவிட்டால் எவ்வாறு  அதை மீறி நாம் போக முடியும்?”

வசிஷ்டர் சொன்னார்:” இராமா, இதற்கான விடையை நம் முன்னோர்களான மஹாத்மாக்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.ஆகாயம் முதலிய வெளி வஸ்துக்கள்-அன்னியமானவை, ‘நான்’ முதலிய மனோ விஷயங்கள் என்பவையெல்லாம் நிலைகொள்ளுவது அவைகளின் ‘நாமங்களில் மட்டும் தான். உண்மையில் பாஹ்ய பிரபஞ்சமோ அதிலுள்ளதாக நாம் காணும் பொருள்களோ, காணுகின்ற நாமோ அதைக்குறிதுள்ள அறிவு எனும் மாயையோ, எதுவுமே இல்லாத சூன்னியமோ, ஜடமோ எதுவுமே உண்மையில் இல்லவே இல்லை. இருப்பது மனம் ஒன்று மட்டும் தான். மனமெனும் இந்திர ஜாலக்காரன் காட்டும் விசித்திரமான மாயக்காட்சிகள் தான் விஷய வஸ்துக்களும், அதிலிருந்து நாம் பெறுவதாக தோன்றுகின்ற அனுபவங்களும், நாம் பந்திக்கப் பட்டிருக்கிறோம் என்ற உணர்வும் பந்தனத்திலிருந்து முக்தி வேண்டும் என்ற ஆசையும் எல்லாம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s