யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 43

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 43

       தினமொரு சுலோகம்

                            நாள் 43

முக்திமார்க்கம்

 

யுக்தியுக்தமுபாதேயம் வசனம் பலகாதபி

அன்ய்த்யணமிவ த்யஜ்யமப்யுக்தம் பதுஜன்மனா !!

 

வசிஷ்டன் தொடருகிறார்:

“வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விஞ்ஞானத்தின் விதை விதைப்பவனுக்கு, அதிகம் தாமதியாமல் ஆத்ம சாக்ஷாத்காரம் எனும் பலன் கிடைத்தே தீரும். மனிதர்கள் சொன்னதானாலும் சத்தியம் வெளிப்படுமென்றால்,சர்வாத்மனா அதை அங்கீகரிக்கத்தான் வேண்டும் .குழந்தைகள் சொன்னாலும் வேத சாஸ்திரங்களின் படியிருந்தால் நாமேற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். அதே நேரத்தில் பிரம்மாவே கூறினாலும் அது சாஸ்திரப்படி சத்தியத்தை வெளிக்கொணராதென்றால் அதை திருணம்( புல் ) போல் ஒதுக்கித் தள்ள வேண்டும்.

நான் கூறப்போகின்ற சாஸ்திரோக்தமான உபதேசங்களைக் கேட்டு, ஆழமாகச் சிந்தித்து, அளவில்லாத அறிவின் வெளிப்படுதலும், மன உறுதியும்  அசைக்க முடியாத மன அமைதியும், பெறுவாய்,இராமா !

அம்மாதிரி விவரிக்க இயலா மஹத்துவம் பெற்ற ஒரு சாதகன் தாமதமில்லாமல் தானே முனி ஸ்ரேஷ்டனாய்த் தீருவான். மாயை எனும் அவித்யை, மாயாஜாலத்தைக் கண்டறிந்து, அவன் எண்ணிக்கையற்ற பிரம்மாண்டங்களுக்கெல்லாம் ஆதாரமாகவிருக்கின்ற, அவிச்சின்னமான—பலதாய் பிரிக்க முடியாத- ஏகமான-ஈடு இணையற்ற, அந்த பரப் பிரம்மத்தை- எக்காலமும் சத்தியமாக இருக்கும் போதத்தை, பிரம்மத்தை காண்பதால், சாக்ஷாத்கரிக்கிறான்.

அவன் எல்லாவற்றிலும் எல்லையற்ற முடிவில்லா பிரம்மத்தை தரிசிப்பதால் பிரபஞ்ச வாழ்வில் சாமானியர்கள் காணும் ஏற்றத் தாழ்வுகளை காண்பதில்லை.ஆகவே தேடாமலையே வந்து சேருபவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறான். கை விட்டுப் போனதின் பின்னால் அவன் ஓடுவதுமில்லை. இழந்ததை நினைத்து அவன் வருந்துவதும் இல்லை.

சுவையான கதைகளால் நிரம்பியுள்ள யோக வாஸிஷ்டம் என்ற இந்த நூல் படித்து அறிவை அடைவதற்கு சுலபமான வழிகாட்டுகிறது.இதை படித்து இதில் அடங்கியுள்ல கருத்துக்களை மனனம் செய்து மனதில் உறுதிப்படுத்திக்கொண்டுவிட்டால் ஒருவனுக்கு தவமோ ஜபமோ மந்திரங்களோ தேவையில்லை. அவைகளின் உதவியில்லாமலையே முக்தியை அடையலாம் .நாம் காண்கின்ற பிரபஞ்சம் எனும் மாயா ஜால வலையில் நாம் அகப்படுவதில்லை. சித்திரத்தில் வரையப்பட்டுள்ள பாம்பைக்கண்டு யாருக்காவது பயம் தோன்றுமா? இந்தப் பிரபஞ்சம் வெறும் ஒரு மாயத்தோற்றமே என்ற உண்மையைப் புரிந்துகொண்டவனுக்கு- உணர்ந்து விட்டவனுக்கு, எதிலும் மகிழ்ச்சியோ துன்பமோ உளவாகாது.

“ இராமா, சத்தியம் என்பதை சுய அனுபவத்தால் உணருவது தான் சாலச் சிறந்தது. அது இயலவில்லையென்றால், மற்றவர்களது அனுபவ கதைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆகவே தான், நான் நிறைய உதாரணங்களும் கதைகளும் முக்தியைப் புரிய வைப்பதற்காக, பரமமான சத்தியத்தை, பிரம்மத்தை உணர வைப்பதற்காக கூறுகிறேன். அந்த இலட்சியத்தை மறந்து கதைகளின் வார்த்தைகளின் வியாக்கியானத்தில் அகப்பட்டுக்கொண்டால் நமது நோக்கம் நிறைவேறாது. சம்பவங்களின் தோலை உரித்து எறிந்து விட்டு கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் முக்தி நிச்சயம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s