யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 45

                               தினமொரு சுலோகம்

                                                      நாள் 45                                  

                                                உத்பத்தி பிரகரணம்

யதா ரஸ: பதார்த்தேஷு யதா தைலம் திலாதிஷு

குஸுமேஷு யதா மோதஸ்ததா த்ருஷ்டரி த்ருச்யதீ:

 

यथा रस्: पदार्त्थेषु यथा तैलम् तिलादिषु

कुसुमेषु यथा मोदस्तथा द्रुष्रटरि द्रुश्यधी: !

வசிஷ்டர் தொடருகிறார்:

இப்பொழுது  நான் பிரபஞ்ச சிருஷ்டியைக் குறித்தும் அதன் இரகசியத்தையும் விளக்குகிறேன், இராமா ! கவனமாகக் கேள்.

லௌகீகப் பொருள்களை சத்தாக—உண்மையென நினைக்கின்ற வரை மட்டுமே பந்தம் என்பது நிலைக்கும்.

அந்த தவறான நினைப்பு நீங்கிவிட்டால் பந்தம் என்பதும் முடிவிற்கு வந்து விடும்.

பந்தம் என்பது என்ன? பார்ப்பவனுக்கும் பார்க்கப்படும் பொருளுக்கும்  உள்ள நெருங்கிய தொடர்பு-‘பற்று’ பந்தம் எனப்படுகிறது.

காரணம்    — பார்க்கப்படும் பொருளில் பார்ப்பவனின் மனம் லயிப்பதால் பற்று உண்டாகிறது.

மனதில் பார்க்கப்படும் பொருள் இல்லையென்றாகும்பொழுது அதன் மூலம் ஏற்படும் பந்தமில்லாததால் முக்தி எளிதாகிறது.

யாதொன்று ‘சிருஷ்டிக்க’ப் படுகிறதோ அது தான் வளரும் தளரும், நாசமடையும்.அவைக்கு மட்டுமே சொர்க்கம்-நரகம், முக்தியும் வேண்டும். சிருஷ்டிக்கப் பட்டவையெல்லாம் விசுவப்பிரளயத்தில் அனந்தமான பிரம்மத்தில் லயித்து காணாமல் போய்விடும். இந்த அநந்தமான- முடிவில்லாத—அந்த சக்தியை- அமைப்பைத்தான் பிரம்மா, ஆத்மா, பரமாத்மா   சத், சத்தியம்  என்றெல்லாம் அழைக்கிறோம். இதே பரமாத்மா தான், நம் எல்லோர் உள்ளிலும் ‘நான்’ நீ’ என்ற துவைத பாவத்தை உளவாக்குவதும்.

சாந்தமான- அமைதியான கடல் நீரில் காற்றின் சக்தியாலோ மற்ற ஏதோ காரணங்களாலோ அலைகள் உளவாவது போல் நம் அந்தக்கரணத்திலும் ‘மனம்’ என்ற ஒன்று தோன்றுகின்றது.

எல்லா தங்க நகைகளின் ‘சத்து’ தங்கம் தான் என்பது போல், சிருஷ்டிக்கப்படுகின்ற எல்லாப் பொருள்களின் குண-நலன்களும் தோஷங்களும், சிருஷ்டிப்பதற்கான வலிமையும் ஸ்ருஷ்டாவினுடையது தான்- பிரம்மத்தினுடையது தான். தங்க ஆபரணங்கள் தங்கத்தின் ‘சத்தை’ உள்கொள்வதால்த் தான் அதன் குணங்கள் அதில் பிரதிபலிக்கின்றது.. ஆனால் தங்கத்திற்கு ஆபரணங்களின் ‘சத்’ தேவையில்லை. அது தனித்து இருக்கக் கூடியது.

அது போல் நம் மனம் பரமாத்மாவிலிருந்து அன்னியமல்ல. மனம் பரமாத்மாவை சார்ந்தேயிருக்கிறது. மனம் இல்லாவிட்டாலும் பரமாத்மா தனித்து நிற்கும்.

பாலைவனத்தில் காணப்படுகின்ற கானல்  நீர் எப்படி உண்மை என்று தோன்றுகிற்தோ அது போல் பிரபஞ்சத்திலுள்ல எல்லா வஸ்துக்களும் உண்மை என்றே தோன்றும். .’நான்’ ‘நீ’ என்பது உண்மை என்ற எண்ணம் உள்ளவரை முக்தியென்பது இயலாத ஒன்று. நாவால் அந்த எண்ணம் கிடையாது என்று சொல்வதால் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் அந்த மாதிரியான வாய் வார்த்தைகள் கூட ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு இன்றியமையாத மன ஒருமிப்பிற்கு (  ஏகாக்கிரதைக்கு ) தடையாக வந்து சேரும்.

இராமா, சிருஷ்டியென்பது உண்மையென்றால், அதற்கு முடிவு என்பது இருக்கவே முடியாது. இல்லாதது நிலைக்கவும் முடியாது; ‘இருப்பு’ என்பது கிடையாது. உண்மையில் உள்ளதை இல்லாமலாக்கவும் முடியாது.

தவம், தியானம், மற்றும் கர்மானுஷ்டானங்கள் இவைகளால் உண்மையை இல்லாமலாக்க முடியாது. சிருஷ்டி என்பது இருக்கின்ற வரை நிர்விகல்ப சமாதி சாத்தியமேயில்லை. அப்படியே நிர்விகல்ப சமாதி கைவந்தால்க் கூட ஒரு நிமிடம் அதிலிருந்து விலகினால் சிருஷ்டிகளும், அதனால் உளவாகின்ற   பந்தங்களும்  துன்பங்களும் மனதில் மேலோங்கிவரும்”..

சித்த விருத்திகளின் சேகரம் தான் சிருஷ்டிக்கு காரணம்.அதனால்த் தான் பதஞ்சலி முனிவர் அளித்துள்ள சூத்திரங்களில் கூறப்பட்டுள்ளது:

“ யோக: சித்த விருத்தி நிரோத:’ ( சமாதி பாதம்- சூத்திரம் 2) சித்தத்தின் விருத்திகளை அடக்குதலே யோகம்

“ததா த்ரஷ்டு ஸ்வரூபே அவஸ்தானம்” ( சூத்திரம் 3)-விருத்திகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட நிலையில், யோகியானவன் தன் உண்மையான இயல்பில் இருப்பான்

“ விருத்தி ஸாரூப்ய மித்ரத்ர:” ( சூத்திரம் 4) . விருத்திகள் ஒடுக்கப்படாஹ நிலையில், புருஷன் சித்த விருத்திகளோடு தன்னை ஒன்றாக எண்ணிக்கொள்கிறான். அதாவது மனிதனின் எண்ணங்களே ‘தான்’ என்று எண்ணுகிறான்.

பகவான் இரமணரும் இதையே கூறுகிறார்: “திருசியமாகிய ( பார்க்கப்படும்) ஜகம் நீங்கியவிடத்து , திருக்காகிய சொரூப தரிசனம் ( பார்ப்பவனின் உண்மை சொரூபம்) வெளிப்படும். ஜகம் உள்ளவரை சொரூப தரிசனம் வெளிவாகாது. சர்வ அறிவிற்கும் சர்வ தொழிலுக்கும் காரணமாகிய மனம் அடங்கினால் ஜகம் மறையும்.”.

வசிஷ்டர் கூறுகிறார்:

எள்ளில் எண்ணை போல், பூவில் நறுமணம் போல்,பொருள்களின் உணர்வு என்பது போத மனதின் சஹஜ சுபாவமே. காண்பவனின் அனுபவத்தில் மட்டும் தான் கனவுப் பொருள்களுக்கு இருப்பு உள்ளது. அதே போல் பிரபஞ்ச வஸ்துக்களும் மனிதனின் போததலத்தில் மட்டும் தான் உள்ளது. எப்படி விதையிலிருந்து செடி நேரம் வரும் பொழுது முளைத்து வெளியில் வருகிறதோ அது போல் சிருஷ்டி போதம் சந்தர்ப்பம் வரும் பொழுது வெளிப்படுகிறது.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s