யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 51

                           யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 51

                                                தினமொரு சுலோகம்

                                                          நாள் 51

                          ஆத்ம சாக்ஷாத்காரம்

த்ரிஷ்ட்யதர்சனத்ரிஸ்யானாம் மத்யே யத் தர்சனம் ஸ்திதம்

சாதோ ததவதானேன ஸ்வாத்மானாமவபுத்த்யசே !

द्रिष्ट्यदर्शनद्रिश्यानाम् मध्ये य्द् दर्सनम् स्थितम्

साधो तदवधानेन स्वात्मानामवबुद्ध्य्से !

இராமன் மீண்டும் கேள்வியெழுப்பினான்:” பகவான்; எனக்கு சரியாக புரியவில்லை. தாங்கள் கூறிய அவ்ஸ்தை எனக்கு எவ்வாறு கிடைக்கும்?”

வசிஷ்டர் சொன்னார்:” முக்தியென்றால் எவ்வித கட்டுப்பாடுமில்லாத பிரம்மம். ‘நான்’ ‘நீ’ என்கின்ற நினைப்புக்கள் வெறும் நினைப்புக்கள் மட்டுமே; அந்த நிலைமை என்றுமே உளவானது இல்லை. பிரம்மம் தான் நாம் காண்கின்ற இந்த பிரபஞ்சமாக பரிணமித்துள்ளது.அதை எப்படிக் கூற முடியும் என்று நீ கேட்கலாம். இராமா, நான் எல்லா ஆபரணங்களிலும் தங்கத்தை மட்டும் தான் காண்கிறேன்; எல்லா அலைகளிலும் நீரை மட்டும் தான் காண்கிறேன்.

வாயுவில் சலனத்தை மட்டும் தான் காண்கிறேன்.ஆகாயத்தில் சூனியத்தை காண்கிறேன். கானல் நீரில் உஷ்ணத்தை மட்டும் காண்கிறேன். அதைப் போல் நான் பிரபஞ்சத்தை காணவில்லை; பிரம்மத்தை மட்டும் காண்கிறேன்

பிரபஞ்சம் என்ற மனப் பிரமை ஆதியிலிருந்தே இருந்து வருகிறது..அது ‘அவித்யை’ அல்லது ‘அஞ்ஞானம்’ தான். சத்தியத்தைத் தேடி போகின்றவர்களால் இந்த அவித்யை ஒழித்துக் கட்ட முடியும். எது ஒன்று ஆரம்பிக்கின்றதோ அதற்குத் தான் முடிவும் உள்ளது. இந்த உலகம் என்பது உருவாகவே இல்லை;அப்படி உண்டானதாகத் தோன்றுகிறது; அவ்வளவு தான்.

கடந்து போன விசுவப் பிரளயத்திற்கு முன் இருந்தவையெல்லாம் பிரளயத்தில் காணாமல் போய்விட்டது. அப்பொழுது முடிவில்லாத ‘ அது’ மட்டும் எஞ்சியிருந்தது. ‘அது’ சூன்னியமும் அல்ல; எந்த உருவத்திலும் உள்ளதல்ல. அது காண்பவனோ காணப்படுவையோ அல்ல.அது இருக்கிறது என்றோ அல்லது இல்லை என்றோ. கூற இயலாது. அதற்கு கண்ணோ, மூக்கோ, நாவோ, காதோ எதுவும் இல்லை; ஆனால் அது எல்லாவற்றையும் காண்கின்றது, கேட்கின்றது, ருசிக்கிம்றது.அது தோன்றுவதற்கு காரணம் எதுவும் இல்லை. அது பிறவாதது. ஆனால் அது தான் எல்லாவற்றின் மூல காரணம். எப்படி நீர் தான் அலையாக மாறுகின்றதோ அது போல் அது பல உருவங்களில் தோன்றுகிறது.

எல்லாவற்றின் உட்பொருளாக இருப்பது இந்த முடிவில்லாத, அழிவில்லாத ஒளிப்பிழம்பு தான். இந்த ஒளிபிழம்பின் காரணமாக பிரபஞ்ச வஸ்துக்கள் எல்லாம் ஒளிமயமாக காட்சியளிக்கிறது.

இந்த மூலசக்தி அசையும்பொழுது உலகம்-பிரபஞ்சம் வெளிப்படுகிறது. அது சலனத்தை= தனது அசைவை நிறுத்தும்பொழுது உலகம் காணாமல் போய்விடுகிறது. தீப்பந்தத்தை அதி வேகமாக சுழற்றும்பொழுது அக்னிவலயம் உண்டாவதும் சுழற்சியை நிறுத்தும்பொழுது அந்த அக்னி சக்கரம் காணாமல் போவதும் போலத்தான் பிரபஞ்சத்தின் தோற்றமும் மறைவும். அது வெளிப்பட்டாலும் இல்லையென்றாலும் அது எல்லாயிடத்திலும் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த சத்தியத்தை அறியாத பொழுது மோகமயக்கமும், அறியும்பொழுது ஆசைகளற்ற முக்தியும் –விடுதலையும் கிடைக்கின்றது.

அது தான் காலம்; அது தான்  நாம் காண்கின்ற பொருள்கள், அது தான் அந்த;வஸ்துக்களின் தோற்றம்; அது தான் நமது கர்மங்கள்; நமது உருவம்; ருசி; மணம்;; ஸ்பரிசம்; விசார-விகாரங்கள் ;நாமறிவதெல்லாம் அது தான். நாமறிவதும் அதனால்த் தான்.” அது தான் காண்பவன். காணப்படும் பொருள், காணுதல் எல்லாம்’ இந்த உண்மையை நீ அறிந்து கொள்ளும்பொழுது ஆத்மசாக்ஷாத்காரமடைகிறாய்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s