யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 55

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 55

 தினமொரு சுலோகம்

                            நாள் 55

                     பஞ்ச புதங்களின் கலவை பிரபஞ்சம்

                               ஜகத: பம்சகம் பீஜம் பம்சகஸ்ய சிதவ்யா

                              யத் பீஜம்தத்ப

                             जगत: पम्चकम् बीजम् पम्चकस्य चिदव्या

                              यद् बीजम् तत्प

வசிஷ்டர் தொடர்ந்து சொன்னார்: “ அந்த பரம புருஷனில் உளவான சலனம்- அசைவு-ஒரே நேரத்தில் ஆக்ரோஷமாகவும் , நிதானமாநதாகவும் இருந்தது. அதன் காரணமாக ஆகாயமும் வெளிச்சமும் ஜட்த்தன்மையும் ஒரே நேரத்தில்  உளவாயின. அவை சிருஷ்டிக்கப் படவில்லை.போத தலத்தில்-புத்தியில் தோன்றியதால் இவைகளுக்கு ‘அறியப்படுகின்ற’வைகளின் குணாதிசயங்கள் சுயமாக உண்டாயிற்று. அதே நேரத்தில் அதை ‘அறிந்து கொள்பவனும்’ உருவானது.  எல்லாவற்றையும் தெரியப்படுத்துதல் – வெளிச்சத்திற்கு கொண்டுவருதல் என்பது புத்தியின் குணமாயிற்றே. ஆகவே அதை விசுவ சாக்ஷி என்று அழைக்கிறோம். இவ்வாறு அந்த ‘போதம்’ எனும் புத்தி ‘அறிவும் அறிகின்றவனு’ம்’ ஆயிற்று.

இப்படியொரு தொடர்பு ஏற்படும்பொழுது “ நான் ஜீவன், ஜீவாத்மா” என்கின்ற நினைப்பு புத்தியில்-போதத்தில் உளவாயிற்று. எதையெல்லாம் அறிகின்றதோ அவைகளுடன் சொருமிப்பு உண்டாவதால் சுத்த போதத்தில் ‘ அஹங்காரம்’ என்ற உணர்வு உண்டாயிற்று. பிறகு பிரித்துப் பார்க்கின்ற குணமும் –அதாவது நான் , நீ என்கின்ற வேற்றுமை உணர்வும் உளவாயிற்று.  பகுத்தறிவு தோன்றியது. மனதும் மற்ற மூலப்பொருட்களும் உதயமாயின. மூலப்பொருட்களான பஞ்சபூதங்களின் இடைவிடாத கலர்ப்பினால்- சேர்க்கையினால் உலகம் உருவாயிற்று. கனவில் காணும் நகரங்களைப் போல் இவை  யதேச்சையாகவோ  முறையாகவோ நிகழ்கின்ற மாற்றங்களினால் நாம் காண்கின்ற சகல் பிரபஞ்ச வஸ்துக்களும் தோன்றின. அவைகளுக்கெல்லம் வெவ்வேறு உருவங்களும் தோன்றின.  இம்மாதிரியான உற்பத்திக்கு எந்த விதமான கருவிகளோ மண், நீர், நெருப்பு போன்ற பொருட்களோ சக்திகளோ தேவைப் படவில்லை. ஏனென்றால் இதெல்லாம் போதத்தின் சஹஜ குணங்களானதால்/  இவைகளையெல்லாம் போதம் நமது கனவுகளில் தோன்றுகின்ற காட்சிகள் போல் உருவாக்கின்றது. அதாவது இவையெல்லாம் சுத்த போதத்திலிருந்து அன்னியமானவையல்ல. அவைகளனைத்தும் போதமே”

“ பிரபஞ்சமெனும் விருட்சத்தின் விதைகள்  தான் .பஞ்ச பூதங்கள். பஞ்சபூதங்களின் விதை-மூலம் ஆதியும் அந்தமுமில்லாத போதம் தான்.

விதை எப்படிப்பட்ட்தோ அதேபோலிருக்கும் அதிலிருந்து முளைக்கும் விருட்சமும். ஆகையால் விசுவம் என்பது பரபிரம்மமேயன்றி வேறொன்றல்ல.”

விசுவாவபோதம் அதனுடைய எல்லையில்லா சக்தியால் விசுவாகாயத்தில் நிகழ்த்துகின்ற ஒரு இந்திரஜால காட்சி தான் இந்த பிரபஞ்சம் .இது சத்தியமல்ல/ இதொரு பொழுதும் சிருஷ்டிக்கப் படவில்லை.ப ஞ்சபூதங்களின் சேர்க்கையினால் பிரபஞ்ச வஸ்துக்கள் சிருஷ்டிக்கப்பட்டதாகத் தோன்றினாலும் அவையெல்லாம் வெறும் ஆகாயக் கோட்டைகள் தான்.,வெறும் கனவுக்காட்சிகள் தான். அவையெல்லாம் விசுவ மனதில் மட்டும் தான் உளது. விசுவ போதம் என்ற பிரம்மம் மட்டும் தான் சத்தியம்.

பஞ்சபூதங்கள் இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்துள்ளதாக   நினைக்கக் கூடாது. பரம்பொருளின் சஹஜ ப்ரபாவம் பஞ்சபூதங்களாக வெளிப்படுகிறது அவ்வளவு தான். பூமி முதலிய பஞ்ச பூதங்களும் கனவில் எழும்பி வருகின்ற பொருட்கள் போல் கற்பனையான வஸ்துக்கள் தான். அவித்யையின் காரணமாக அவை பரபிரம்மத்திலிருந்து உற்பத்தியானதாக நாம் நினைக்கிறோம். மகான்கள் இந்த சத்தியத்தை அறிந்ததால் சத்திய சாக்ஷாத்காரம் அடைந்தவர்களாகிறார்கள்.”

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s