யோக வாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 57

யோக வாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 57

தினமொரு சுலோகம்

நாள் 57

ஜீவனும் போதமே!

சேத்யசம்வேதனாஜ்ஜீவோ பவத்யாயாதி சன்ஸ்யதிம்

                        த்தசம்வேதனாத்ரூபம் சமயாதி சமம் புன: !

 

                        चेत्यसज्जीवो भवत्यायाति सम्स्य्तिम्

                        तदसम्वेदनाद्रूपम् समायाति समम् पुन: !

வசிஷடர் தொடருகிறார்: “ இராமா ! அறிந்துகொள்கின்றவை.யைக் குறித்துள்ள தவறான நினைப்பின் காரணமாக போதம்  ஜீவ ரூபத்தில் சம்சார சக்கரத்தின் சுழற்சியில் திரும்பத் திரும்ப உழன்று கொண்டிருக்கின்றது. எப்பொழுது அறிவும் அறிகின்றவனும் இரண்டல்ல; ஒன்று தான் என்ற ஞானம் உதிக்கின்றதோ அப்பொழுது அது தனது சுய ரூபத்திற்குத்  திரும்புகின்றது; சமன் நிலையை அடைகின்றது.

சில  நேரங்களில் முறைப்படியும் மற்ற சில நேரங்களில் அப்படியில்லாமலும் இந்த மஹாஜீவன் முன் ஜன்மத்தில் சேர்த்துவைத்த இரட்டை ( த்வைத ) மனப்பாங்குடனுன் தனித்துவத்தவும் காரணமாக மனிதனாக, மிருகமாக, ஆணாக, பெண்ணாக ஜீவரூபம் கைக்கொள்கின்றது

சுத்த போதத்தின் விளக்க இயலாத மாயா சக்தியால் அஹங்காரமென்ற ( நான் என்ற) நாம ரூபங்கள் உண்டாகின்றன.

அதே போதம் எப்பொழுது சுய ரூபத்தை அனுபவிக்க வேண்டுமென்று இச்சிக்கின்றதோ அப்பொழுது விசுவ போதத்த்தின் ஸ்வரூபத்திற்கு திரும்புகிறது.

பக்குவம் கைவராதவர்கள் இதை ஒரு மாயக்காட்சியெனவும், ‘ மாற்றம்’ எனவும் எண்ணுவார்கள். ஏனென்றால் ‘போதத்தை’ தவிர வேறெதுவும் உண்மையில்லை; ஆகவே ‘மாற்றம்’ நிகழ்வது என்பது இயலாத செயல்.

சுமுத்திரமும் ஜலம்; அலைகளும் ஜலம். அலைகள் சுமுத்திரத்தின் மேல்ப் பகுதியில் காணும்பொழுது நீரொழுக்குத் தென்படுகிறது. அதுவும் ஜலம் தான். அதே போல்த் தான் விசுவ போதமும்.

சமுத்திரம் அலைகளை தனக்கு அன்னியமாக காண முடியுமா?  அதே போல் விசுவ போதமும் ஜீவனை தன்னிலிருந்து அன்னியமாக்க் காணமுடியாது.

அப்படிக்காணும் பொழுது ‘ நான்’ (அஹம்) உதயமாகிறது.

தானாகவே அஹங்காரம் (  நான் எனும் பாவம்) ஜீவனில் உதயமாகின்ற பொழுது, ஜீவன் விசுவ போத்த்திலிருந்து அன்னியமில்லையென்றாலும் பிரபஞ்ச வஸ்துக்களுடன் ஒருமிப்பு ஏற்பட்டு பல பல வஸ்துக்களும் பெயர்களும் அடைகின்றது.

‘ஒன்று’ என்ற கோட்பாட்டிலிருந்து ‘ பலது’ என்ற தத்துவம் உதிக்கின்றது.

ஆகவே, இராமா, ‘நான்’ ‘நீ’ என்கின்ற எண்ணங்களையும் ஜீவனின் உற்பத்தி ஏற்பட்ட விதத்தையும் மறந்து விடு. அந்த எண்ணங்கள் மரைந்து விட்டால், நீ யதார்த்தத்திற்கும் அயதாற்த்த்த்திற்கும் இடையில் சத்தியம் ஒளிந்து கொண்டிருப்பதை உணர்வாய்; நீ சத்யசாக்ஷாதரம் அடைவாய்.

இந்த மேகக் கூட்டங்கள் இல்லாமலானால்  அவிச்சின்னமான விசுவ போத்த்தின் ஒளிவெள்ளத்தில் ஆறாடலாம். அந்த ஒளிவெள்ளம் எப்பொழுதும் இல்லாமலிருந்ததில்லை. அவித்யையினால் அசத்தியத்திற்கும் சத்தியத்திற்கும் உள்ள வேற்றுமையை உணரமுடியாமலுள்ளது; அவ்வளவு தான்.

‘போத’ த்தை அறிய முடியாது; உணரத்தான் முடியும். அதாவது விசுவ போதத்திற்கு இச்சைத் தோன்றும்பொழுது அது விசுவமாகிறது; இல்லையென்றால் மனம், புத்தி, அஹங்காரம், பஞ்சபூதங்கள்,உலகம், என்று எண்ணற்ற பெயர்களால் அறியப்படுகிறது. அவையெல்லாம் போதமே.

மனிதனையும் அவனது செயல்களையும் தனியாக பிரித்துப் பார்க்க முடியாது; ஒன்று அசைவற்ற தன்மையும் இன்னொன்று அசைவுள்ள செயல்த் தன்மையும் தான்.

ஆனால் உண்மையில் மனம், உலகம் ஜீவன் எல்லாமே போதம் தான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s