யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 65

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 65

தின்மொரு சுலோகம்

நாள் 65

மஹச்சித்ரூபமேவத்வம் ஸ்மரணம் வித்தி வேதனம்

கார்யகாரண்தா தேன ச சப்தோன ச வாஸ்தவ:

महच्छिद्रूपमेवत्वम् स्मरणम् विद्धि वेदनम्

कार्यकारणता तेन स शब्दो न च वास्तव: !

லீலா கேட்டாள்: ‘ முன்சன்ம வாசனைகள் ஏதுமில்லாமல் இந்த மஹாத்மாவும் அவரது மனைவியும் எவ்வாறு தோன்றினார்கள்?’

சரஸ்வதி கூறினாள்: ‘ கட்டாயம்  சிருஷ்டி கர்த்தாவான பிரமனின் சிந்தையின் காரணமாகத்தான் அவர்கள் தோன்றினார்கள். அதில் சந்தேகமே வேண்டாம் .பிரளயத்திற்கு முன்பே பிரமன் முக்தியடைந்து விட்டிருந்ததினால் அவனில் சிந்தையேதும் இருந்திருக்க முடியாது. நினைவுகளும் ( ஸ்ம்ரிதியும்)  இருக்க முடியாது.

இந்த யுகாரம்பத்தில், யாரோ ஒருவனில் இந்த சிந்தையுதித்திருக்கக் கூடும் : ‘ இனி நான் தான் பிரமன்.’

இது யதேச்சையாக உண்டான நிகழ்வு தான். காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல்.ஆனால் ஒன்றை மறக்கக் கூடாது; சிருஷ்டி என்று ஒன்று கிடையாது; அது வெறும் மனப்பிராந்தி தான்;

‘ அனந்தமான—ஆதியும் அந்தமும்  இல்லாத- எல்லைகளுக்கு உடபடாத –பிரம்மம் தான் சிந்தைகள்- மனோ விசாரங்கள்; அனுபவங்கள். ஆகவே காரியமும் காரணமும் எந்த விதத்திலும் தொடர்புடையவையல்ல. இரண்டும் இரண்டு வார்த்தைகள்; அவ்வளவுதான். அவை சத்தியமில்லை’.

லீலா சொன்னாள்: ‘ தேவீ, தாங்கள் சொல்வது ஞானம் உளவாக்குவதாகத் தான் படுகிறது. ஆனாலும், இதுவரை நான் கேள்விப்படாத அறிவாக இருப்பதால், அது என்னில் உறைக்க மாட்டேன் என்கிறது. திவ்யனான வசிஷ்டரின் வாசஸ்தானைக் காண விரும்புகிறேன்.’

சரஸ்வதி சொன்னாள்: ‘

நீ உன் சரீரத்தை விட்டுவிட்டு, நிர்மலமான ஆன்மாவை உன்முகமாக பார்க்க வேண்டும். நீ ஆத்ம சாக்ஷாத்காரம் அடையவேண்டும். நீ பிரம்மத்தில் லயித்து பிரம்மமாக வேண்டும். என் சரீரம் சுத்தப் பிரகாசமாக இருக்கிறது; அது சுத்த போதம். ஆனால் உனது சரீரம் பௌதிகமானது. இந்த பௌதிக உடலுடன் உன் சங்கல்பங்களைக்கூட பார்க்க முடியாது. அப்படியிருக்கும்பொழுது எப்படி வசிஷ்ட மகானின் சங்கல்ப உலகினுள் நுழைந்து அவரது சங்கல்பத்திலுள்ள வீட்டைக்காண முடியும்? ஆகவே நீ இந்த உடலைத் தியாகம் செய்ய்ய வேண்டும். அதற்காக, இவ்வாறு தியானித்து மனதில் உறுதி கொள்ள வேண்டும். ’’ நான் இவ்வுடலல்ல; இதை இங்கேயே விட்டு விட்டு போதமாக- பிராகாசமாக இருக்கிறேன். அந்த போத ஒளியுடன்-சாம்பிராணியில் உள்ள நறுமணம் போல் அந்த மஹாத்மாவின் வீட்டைக் காண வேண்டும்.’ அப்படித் தியானிப்பதன் மூலம் நீ போதத்துடன் லயித்துவிடுவாய். நீர் நீருடன் கலந்து எப்படி ஒன்றாகுமோ அது போல் பிரம்மத்துடன் லயித்து விடுவாய். இவ்வாறு தந்திர மந்திரங்கள் எதுவுமில்லாமல் தியானித்து உன் பௌதிக உடலை மட்டுமல்ல், சூக்ஷ்ம சரீரத்தையும் துறந்து சுத்த போத ஸ்வரூபமாய்த் தீருவாய்.

நான் என் சரீரத்தை சுத்த போதமாகத் தான் கருதுகிறேன். நீ அப்படியில்லை; கையிலிருக்கும் இரத்தினக்கல்லை வெறும் கூழாங்கல்லென்று எண்ணும் அஞ்ஞானி நீ.    நீயே பிரமம் என்று அறியாமலிருக்கிறாய். அந்த அஞ்ஞானமும் தானாகவே உண்டானது தான். இந்த அஞ்ஞானத்தை உறுதியான ஆத்ம விசாரம் மூலம்  இல்லாமலாக்க வேண்டும். இந்த அஞ்ஞானமும் சத்தியமில்லை;அவித்யையும் கிடையாது; அறிவின்மை என்ற ஒன்றும் கிடையாது. பந்தனம் கிடையாது; முக்தியும் கிடையாது. எங்கும் எப்பொழுதும் ஒரே நிர்மல போதம் மட்டும் தான் உள்ளது. மற்றவையெல்லாம் மனமயக்கம் தான். மனோ விருத்தியை ஒழித்துவிட்டால் நீ சுத்த போதமாகிவிடுவாய்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s