யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 72

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 72

தினமொரு சுலோகம்

நாள் 72

யார் வீரன்? யார் கொடூரன்?

 

ப்ரஜோபத்ரவனிஷ்டஸ்ய ராஜ்னோராஞ்சேத வா ப்ரபோ:

அர்த்தேன யே ம்ருத்யா யுத்தே தே வை நிரயகாமின: !

 

प्रजोपद्रवनिष्तस्य राज्न्तोराज्न्तोथ वा प्रभो

अर्त्थेन ये म्रुता युद्धे ते वै निरयगामिन: !

வசிஷ்டர் தொடர்ந்தார்: “ இவ்வாறு சகல பிரபஞ்சத்தையும் பார்த்து விட்டு, லீலாராணி தனது அந்தப்புரத்தில் தன் கணவரின் பௌதிக உடல் வைத்துள்ள இடத்தை வந்தடைந்தாள். அவரது சரீரம் மலர்களால் மூடப்பட்டிருந்தது. அந்தக் காட்சி அவளில் அவளது கணவரின் மறு ஜன்ம வாழ்க்கையைக் காண தூண்டியது. கண நேரத்தில் அவள் விசுவத்தின் கொடுமுடியிலிருந்து தனது கணவர் நாடாண்டுகொண்டிருந்த ராஜ்ஜியத்திற்கு வந்து சேர்ந்தாள்.

அது சிந்து மாகாணத்தின் அரசன் , லீலாவின் கணவர் அரசாண்டு வந்த நாட்டை முற்றுகை இட்டு தன் வசப்படுத்தும் முயற்சியிலிருந்த நேரம்.

சரஸ்வதி தேவியும் லீலா ராணியும் போர்க்களத்தின் மீதாக ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு யக்ஷர்கள், கின்னரகள் மற்றும் ஏராளமானோர் யுத்தைத்தை காணக் கூடியிருந்தார்கள்.

இராமன் கேட்டான்: ‘ போரில் யார் வீரன்? யார் குரூரன் அல்லது போர்க்குற்றவாளி ?’

வசிஷ்டர் சொன்னார்: ‘ சாஸ்திரோக்தமான ரீதியில் அரசாண்டு வருபவனும், மாசில்லாதவனுமான அரசனுக்காக யார் போர் புரிகிறானோ, அவன் வீரன். போரில் வென்றாலும் தோல்வியடைந்து இறந்தாலும் அவன் வீரன் தான். அதே நேரத்தில் அதர்மத்தை கையாளுபவனும், யதேச்சாதிகாரியுமாக ஆள்பவனுக்காக—மக்களை துன்புறுத்துபவனுக்காக-யார் போர் புரிகிறானோ அவன் போர்க்குற்றவாளி. போரில் மற்றவர்களை அங்கஹீனர்களாக்குகிறானோ அவன் குற்றவாளி, யாரொருவன் ஒன்றுமறியா பசுக்களையும், சாது-சன்னியாசிகளையும் காப்பாற்றுகிறானோ, யாரொருவனிடம் சென்றால் சத் ஜன்ங்களுக்கு அடைக்கலம் கிடைக்குமோ, அவன் வீரன். அவன் ஸ்வர்க்கத்திற்கு கூட அலங்காரமாயிருப்பான்.

‘யாரொருவன் மக்களுக்கு துரோகமிழைக்கிறானோ, மக்களின் கஷ்ட்த்தில் மகிழ்ச்சியடைகிறானோ,அப்படிப்பட்ட அரசனுக்காக, யஜமானனுக்காக, போர் புரிகிறவன் நரகத்திற்குச் செல்வான்’

வீரமரணம் எய்கிறவன் சுவர்க்கத்திற்குப் போவான். அதர்மத்திற்காக போரிட்டு  மரணமடைந்தால் சுவர்க்கம் கிடைக்காது

இராமா, ஆகாயத்தில் நின்றுகொண்டே,  இரண்டு மாபெரும் படைகள் போருக்குத் தயாராகி அணிவகுத்து நிற்பதை அந்த நாரீமணிகள் பார்த்தார்கள்.

( என் குறிப்பு: இந்த இட்த்தில் போரைக் குறித்து ஒரு பெரிய வருணனை யோக வாசிஷ்டத்திலுள்ளது; போரினால் ஏற்படக்கூடிய நாச நஷ்டங்களைக் குறித்து மிகவும் அச்சத்தை உளவாக்கக் கூடிய . வருணனையை வசிஷ்டர் வழங்குகிறார்.) சந்தியாகாலம் ஆனவுடன் லீலாவின் கணவர் அன்றைய போரின் இலாப- நஷ்டங்களை கணக்கிடுவதற்கும் மறு நாள் பின்பற்ற வேண்டிய போர்த் தந்திரங்கள் குறித்து  ஆலோசிப்பதற்குமாக அரசவையை கூட்டினார். ஆலோசனை முடிந்தவுடன், பள்ளியறைக்கு சிரம பரிகாரத்திற்காக சென்றார். பெண்மணிகள் இரண்டு பேரும் காற்று போல் மிகவும் அனாயசமாக பள்ளியறைக்குள் நுழைந்தார்கள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s