யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 71

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 71

தினமொரு சுலோகம்

நாள் 71

 

ஏது ‘மேலே’? ஏது ‘கீழே’?

உத்பதோத்பத்யதே தத்ர ஸ்வயம் சம்வித்சவபாவத:

ஸ்வசங்கல்பை: சம்ம் யாதி பாலசங்கல்ப்பஜாலாவத் !

 

उत्पधोत्पध्यते तत्र स्वयम् सम्वित्सवभावत:

स्वसन्कल्प्पै: शमम् याति बालसन्कल्प्पजालवत् !

 

வசிஷ்டர் தொடர்ந்தார்: ‘ சரஸ்வதி தேவியுடன் லீலா ஆகாயத்தின் மிக ‘உயரத்தில்’ சஞ்சரிக்கலானாள். அங்கு அவர்கள் துருவ நட்சத்திரத்தைக் கண்டார்கள்; உத்தமர்களான மாமுனிகள் அமர்ந்திருக்குமிடத்தைக் கண்டார்கள்; தேவதைகளின் வாசஸ்தலங்களைக் கண்டார்கள்; பிரம்ம லோகத்தையும்; சிவ லோகத்தையும் கோ லோகத்தையும் பித்ரு லோகத்தையும் கண்டார்கள்;  அங்கிருந்து பார்க்கும்பொழுது சூரிய சந்திர்ர்கள் மிகவும் ‘கீழே’ இருப்பதாகக் கண்டார்கள்.

தேவி சொன்னாள்: ‘ குழந்தாய், இதற்கு ‘மேல்’ சிருஷ்டியின் மிகவும் உன்னதமான பீடம் அமைந்துள்ளது அங்கு நீ செல்வாய்’  நீ இதுவரைக் கண்டதெல்லாம் அங்கிருந்து பறந்து வந்த தூசுகள் மட்டும் தான்’

உடன் அவர்கள் அந்த கொடுமுடியில் சென்று சேர்ந்தார்கள். அங்கு சென்றடைவர்களின் இச்சாசக்தி வைரம் போல் சக்தி வாய்ந்ததும், மற்றொன்றும் இல்லாத சுத்த போதமுமாக –நிர்மலமாக- மாசு படியாததாக இருக்கிறது.

லீலா அங்கு ஜலம் வாயு, அக்னி ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களின் மூலஸ்தானத்தை தரிசித்தாள். அதை கடந்து போனால் சூன்னியம் மட்டும் தான் மிஞ்சியது.

தன்னுடைய சுயசக்தியால்  சுயமாகவே தோன்றியுள்ள அந்த அனந்தமான அவபோதம் மாசில்லாததும் பிரமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதும் பரம சாந்தியுடையதாகவும் இருந்தது. அந்த போதத்தில்த் தான் லீலா சிருஷ்டியின் அனேகம் ஜீவஜாலங்களையும் சிருஷ்டியின் மூலப்பொருட்களையும் தரிசித்தாள். அந்த உலகில்- நிலையில் வழ்வபவர்களின் சுய ஆற்றலால் தோன்றியது தான் அவர்களது உருவமும் சுபாவங்களும்.

ஒரு குழந்தை யதேச்சையாக  விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல்  அனந்தமான அவபோத்த்தின் இயற்கை சுபாவம் காரணமாக இதெல்லாம்  தோன்றியுள்ளது; அவைகளின் சுய சிந்தனையால்- அவைகளுக்குத் தோன்றும் பொழுது மீண்டும் அனன்த போதத்திலேயே-  அந்திம- பூரண சாந்தியிலேயே லயித்து விடுகின்றன.’

இராமன் கேட்டான்: ‘ உள்ளது எல்லையில்லா ஆகாசம் மட்டும் தான் என்கின்றபொழுது மேலே’ ‘கீழே’ என்பவை எங்கிருந்து வருகின்றன? அவையின் பொருள் தான் என்ன?’.

வசிஷ்டர் சொன்னார்:’ சிறு எறும்புகள் ஓர் உருண்டையான பாறாங்கல்லின் மீது ஊர்ந்து செல்லும்பொழுது, அவைகளின் காலுக்கடியிலுள்ள இடங்களெல்லாம் ;கீழே’; அவைகளின் முதுகிற்கு அப்புறம் உள்ளவையெல்லாம் ‘மேலே’.அதே போல் தான் திசைகளும்.  எண்ணிக்கையில்லாத பிரபஞ்சங்களில் சில இடங்களில் செடிகொடிகள் மட்டும் காணப்படுகின்றன; சில இடங்களில் பிரம்மா , விஷ்ணு போன்ற அதி தேவதைகள் மட்டும் வாழ்கின்றன; சில இடங்களில் உயிரினங்கள் எதுவுமே காணப்படுவதில்லை. வேறு சில இடங்களில் பறவைகளும் மிருகங்களும் மட்டும் வாழ்கின்றன. சில இடங்களில் கடல் மட்டுமுள்ளது. வேறு சில இடங்களில் பாறைகள் மட்டும் .உள்ளன.  சில இடங்களில் புழு பூச்சிக்கள் மட்டும் உள்ளன. சில இடங்களில் கும்மிருட்டு மட்டுமுள்ளது. சில இடங்கள் எப்பொழுதும் ஒளிமயமாகவுள்ளன. இன்னும் சிலது  பிரளயத்தை நோக்கி பயணிக்கின்றன; மற்றவை நாசத்தை நோக்கி பயணிக்கின்றன. எது எப்படியிருப்பினும் எல்லாயிடத்திலும் எப்பொழுதும் இருப்பது ‘போதம் ‘ மட்டும் தான். அது மட்டும் தான் உண்மை. அது நாசமில்லாததாகையால் சிருஷ்டியும் பிரளயமும் இடைவெளியில்லாமல் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அதை இயக்கி நிகழ்த்துகின்ற அறியமுடியாத சக்தி தான் ‘போதம்’.

இராமா, எல்லாமே உண்டாகின்றதும் லயிக்கின்றதும் நில்கின்றதும் அந்த அனந்தமான அவபோதத்தில் தான். அது மட்டும் தான் சத்தியம் என்பதை உணர்வாயாக.’

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s