யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 91

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 91

தினமொருசுலோகம்

நாள் 91

சிருஷ்டியுமில்லை- சம்ஹாரமும் இல்லை

 

துக்கிதஸ்ய நிசாகல்ப: சுகிதசைவ ச க்ஷண:

க்ஷண ஸ்வப்னே பவேதல்ப: கல்பஸ்ச பவதி க்ஷண: !

 

दुखितस्य निशाकल्प: सुखितासैव च क्षण:

क्षण स्वप्ने भवेतल्प: कल्पश्च भवति क्षण: !

வசிஷ்டர் தொடர்ந்தார்:” மன்னனுக்கு எல்லா வரங்களையும் அருளிவிட்டு சரஸ்வதி தேவி அங்கிருந்து மறைந்து போனாள். மன்ன்னும் அரசியும் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து மகிழ்ச்சியில் திளைத்துப் போனார்கள். அரண்மனை சேவகர்களும் ஒவ்வொருவராக உறக்கத்திலிருந்து எழுந்து

உயிருடன் இருக்கும் மன்ன்னைக் கண்டு மகிழ்ச்சியுற்றார்கள். நாடு முழுவதும் மன்னன் திரும்ப உயிர்பெற்றதைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

லீலா ராணியின் வரவும் இரண்டு ராணிகளின் கதைகளும் ஊர் முழுவதும் பேச்சாயிற்று. மன்னனும் முதலாம் ராணியிடமிருந்து தன் பூர்வஜன்ம கதை முழுவதையும் கேட்டறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனான். பிறகு நீண்டகாலம் சகல ஐசுவரியங்களுடனும் அவன் நாட்டை செவ்வனே ஆண்டு வந்தான். எல்லோரும் இதெல்லாம் நடந்தது சரஸ்வதி தேவியின் கருணையால் என்று கூறினாலும் மன்ன்னின் சுய முயற்சியினால்த் தான் எல்லாம் மங்களமாக நடந்தேறியது என்று நாம் உணர வேண்டும்

இராமா ! இது தான் லீலோபாக்கியானம். இந்தக் கதையின் முக்கியமான த்த்துவம் என்னவென்றால் நாம் காண்கின்ற எதுவும் சத்தியமில்லை. அப்படி எண்ணுகின்ற அஞ்ஞானத்தை இல்லாமலாக்குவதற்கு இந்தக் கதையை நன்றாக ஊன்றிக் கவனித்தால் உனக்கு இயலும், இராமா. சத் ஆக இருப்பதை மட்டும் தான் மாற்றி அமைக்க முடியும்.  சத் அல்லாமலிருப்பதை எவ்வாறு மாற்றியமைக்க முடியும்? ஆனால் ஒன்றுமே மாற்றியமைக்கவோ இல்லாமலாக்குவதற்கோ இல்லை. நீ காண்பதெல்லாம் –இந்த பூமியும் பிரபஞ்ச வஸ்துக்களும் உன் கண் முன்னால் விரியும் ஒரு பிரமம் மட்டும் தான்- சங்கல்பம்-கற்பனை தான். எதுவும் நித்தியமில்லை. எல்லாமே சத் சிதானந்த்த்தின் உருவகங்களே. எல்லாம் அனந்தாவபோதத்தின் மறு உருவங்களே..ஒன்றை சிருஷ்டித்து விட்டு இன்னொன்றை அந்த இடத்திற்கு கொண்டு வந்தாலும் இரண்டுமே அந்த போதம் தான். ‘ஒன்றன்றி வேறில்லை’. .எல்லாம் எப்படியிருந்த்தோ அப்படியே இருக்கிறது. ஒன்றும் சிருஷ்டிக்கபடவில்லை;அழிக்கப்படுவதுமில்லை. விஷய பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது என்று தோன்றுவது மாயா சக்தியின் வைபவம் என்று சொல்லலாம்; ஆனால் மாயா சக்தியும் உண்மையல்ல என்பதை மறக்க வேண்டாம்.”

இராமன் வினவினான்: “ மாஹாத்மாவாகிய தாங்கள் பரம சத்தியத்தின் உண்மையான நிதரிசமான பார்வையை எனக்கு அளித்துள்ளீர்கள். ஆனால்  உங்கள் அமுத வாக்குகளை கேட்பதற்கான வேட்கை என்னில் இன்னும் உள்ளது.  நண்பர்களை எதிரிகளாக்குவும், எதிரிகளை நண்பர்களாக்கவும் நமது சித் சக்திக்கு இயலுகிறது என்று நன்றாகப் புரிகிறது. விஷயங்களால் ஏற்படுவதாகத் தோன்றுகின்ற அனுபவங்களும் நமது மனதின் கற்பனையிலால் உண்டாவது தான் என்று புரிகிறது, பவான்.

‘ துன்புற்றவனுக்கு ஒரு இரவு கூட ஒரு யுகம் போல் தோன்றும்; அதே நேரத்தில் மகிழ்ச்சியுற்றவனுக்கு, ஒரு இரவு ஒரு கணமாகத்தோன்றும். ஸ்வனாவஸ்தையில் ஒரு கண நேரத்திற்கும் ஒரு யுகத்திற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.’

மனுவின் ஆயுட்க் காலம் பிரம்மாவின் ஒன்றரை மணி நேரம் தான். பிரம்மாவின் வாழ்க்கைக் காலம் விஷ்ணுவின் ஒரு நாள் தான்.விஷ்ணுவின் ஆயுள் பரமசிவனின் ஒரு நாள். இதெல்லாமே அஞ்ஞானிகளின் கணக்குகள்தான். போத – ஆத்ம – சாக்ஷாத்காரம் அடைந்துவிட்டால் இந்த இரவு-பகல் வேற்றுமைகள் எதுவும் கிடையாது என்ற உண்மை இந்தக் கதை மூலம் தெளிவாகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s