யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 95

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 95

தினமொரு சுலோகம்

நாள் 95

போதமும் சித் சக்தியும்

 

அஸ்தீஹ நியதி ப்ராஹ்மீ சிச்சக்தி: ஸ்பந்த ரூபிணீ

அவஸ்யபவிதவைட்யகசத்தா சகலகல்பகா !

अस्तीह नियति ब्रह्मी चिच्चक्ति: स्पन्द रूपिणी

अवश्यभवितवैट्ट्यकसत्ता सकलकल्पगा !

 

இராமன் வினவினான்: ‘குருவே, நீங்கள் சொல்வது நிச்சயம் உண்மை தான். பிரம்மம் மட்டும் தான் நித்திய சத்தியம் என்பதை உணருகிறேன்.. மஹர்ஷிவரியா, ஆனால் பிரபஞ்சத்தின் உண்மையை அறிந்த ஞானிகளும்  முனிசிரேஷ்டர்களும் எல்லாம் தெய்வ நியோகம் என்று சொல்கிறார்களே? அது ஏன்?’

வசிஷ்டர் சொன்னார்: ‘ “இராமா, அன்ந்தாவபோத்த்தின் சைதன்னியம்- ஊர்ஜ்ஜம்-சக்தி எல்லாயிடங்களிலும் எப்பொழுதும் ஆட்சி செய்துகொண்டேயிருக்கிறது. சகல தவிர்க்க முடியாத வருங்கால சம்பவங்களுக்கும் பின்னால் இந்த சக்தி செயலாற்றிக்கொண்டிருக்கிறது. அது தான் சத்தியம். அந்த சத்தியம் காலங்களைக் கடந்து, யுகங்களுக்கும் அதீதமாக நிலைகொண்டு கொண்டிருக்கிறது”.

அந்த சக்தியினால்த் தான் இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா பதார்த்தங்களின் குண விசேஷங்களும் தீருமானிக்கப் படுகின்றன. இந்த ‘சித் சக்தி’ ‘மஹா சத்’ என்ற பெயராலும் அறியப்படுகிறது.  ‘மஹாசிதி’, (மஹா புத்தி), ‘ மஹாசக்தி’, மஹா திருஷ்டி’. மஹா க்ரியை’,  மஹோத்பாவம்’, மஹாஸ்பந்தம்’ என்றெல்லம் இதை அழைக்கிறார்கள்.

இந்த சக்தி தான் எல்லாவற்றிற்கும் அவைக்கு தனித்தன்மையை நல்குகின்றது. இது பர பிரம்மத்திலிருந்து வேறல்ல.’ஆகாயத்தில் காணும் தோசை’ எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இதுவும்,.இது தான்  விவஹார சத்தியம் எனும் பொருள்.. மஹர்ஷி சிரேஷ்டர்கள் வார்த்தைகளில் மட்டும் பிரம்மத்திற்கும் இந்த மஹாசக்திக்கும் வேற்றுமை காட்டியிருந்தார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள்,’ இந்த சக்திதான் சகல சிருஷ்டிக்கும் காரணம்’ என்று.

சரீரமும் அதன் அவையவங்களும் என்று கூறும்பொழுது எவ்வளவு வேற்றுமையுண்டோ அவ்வளவு வேற்றுமை பிரம்மத்திற்கும் இந்த சித் சக்திக்கும் உண்டு.

எவ்வாறு ஒருவன் தன் சரீரத்தின் அவையவங்களை உணருகிறானோ, அதே போல் பிரம்மமும் தன் சஹஜமான மஹச்சக்தியை பாகுபடுத்தி உணருகிறது.

இந்த பகுத்து உணரும் ‘அறிவிற்கு’ ’நியதி’ என்று கூறுகிறார்கள்.இது தான் பரம்பொருள். இது தான் எல்லா வஸ்துக்களின் குண்விசேஷங்களையும் தீருமானிக்கின்றது. இதை ‘தெய்வம், ‘தெய்வ நியோகம்’  என்றெல்லாம் கூறுவார்கள். நீ இந்த கேள்விகள் என்னிடம் கேட்பதும் அந்த நியதியின் பொருட்டுத் தான். நான் சொல்வதை கேட்டு நீ கர்மானுஷ்டான்ங்களில் மீண்டும் அக்கறையுள்ளவனாவதும் இந்த நியதியின் பாகமாகத் தான். ஒருவன் ‘எனக்கு கடவுள் உணவைக் கொண்டுத் தருவார்’ என்று வேலை எதுவும் செய்யாமல் இருப்பதும் அந்த சக்தியின் நியோகம் தான்.

ருத்ரனும் இந்த நியதிக்கு விலக்கல்ல.ஆனால் விவேகம் பெற்ற மனிதனை இது  சுய முயற்சியிலிருந்து பின் வாங்க வைப்பதில்லை. ஆனால் இந்த நியதி வெற்றியாக மாற வேண்டுமென்றால் சுய முயற்சி அவசியம் வேண்டும்.

இந்த நியதிக்கு இரண்டு நிலைகளுள்ளது: ஒன்று மானுடம்; இன்னொறு அதி மானுடம். சுய முயற்சியால் நியதி நடைமுறையில் வருவதும் வெற்றி பெறுவது மானுட நிலையில். அப்படி நடைபெறாமல் போவது அதி மானுடம் –அல்லது மனிதனுக்கு மேற்பட்ட நிலை. எல்லாம் ‘ தெய்வ கடவுளின் தீருமானம்’ என்று வேலை எதுவும் செய்யாமல் இருந்தால் அதி விரைவாக ஜீவன் சரீரத்தை விட்டு போய் விடும்.  ஏனென்றால் ஜீவன் என்றால் ‘கர்மம்’  என்று பொருள். மூச்சை அடக்கிப் பிடித்தால் மேலான போத தலத்தில் சென்று முக்தியை அடையலாம். ஆனால் அதற்கு கடும் முயற்சி தேவை. அனந்தாவ போதம் ஒரு இடத்தில் ஒன்றாகவும் இன்னோரிடத்தில் மற்றொன்றாகவும் காணப்படுகிறது. போத்த்திற்கும் அதன் சக்திக்கும் வேற்றுமை ஏதுமில்லை. கடல் நீரிற்கும் கடலலைகளுக்கும் என்ன வித்தியாசம்? சரீரமும் அவையவங்களும் வெவ்வேறல்லவே? அப்படி வேற்றுமை காண்பவர்கள் அஞ்ஞானிகளே !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s