யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 97

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 97

தினமொரு சுலோகம்

நாள் 97

மனமே பிரபஞ்ச காரணமும் கர்மமும்

 

சித்கனேனைகதாமேத்ய யதா திஷ்ட்தி நிச்சல:

சாம்யன்வயவஹரன்வாபி ததா ஸம்சாந்த உஸ்யதெ!

चिद्घनेनैकतामेत्य यदा तिष्तति निश्चल:

शम्यन्वयवहरन्वापि तदा सम्शान्त उच्यते !

வசிஷ்டன் தொடர்ந்தார்: ‘ இராமா, அந்த ‘ஒன்று’ ஒரு நாளும் பலதாவதில்லை. ஒரு தீபத்திலிருந்து வேறு திரிகளைக் கொளுத்தி மற்ற தீபங்களை ஒளிவிடச் செய்யும் பொழுதும், அவையெல்லாம் ஒரே தீபம் தான். ஒரே பிரம்ம்ம் பலதாக அஞ்ஞானிகளின் கண்களுக்குத் தென்படுகிறது; அவ்வளவு தான். இந்த ‘நானாத்வ’த்தின் பொய்மையை உணரும்பொழுது ஜீவாத்மா துன்பத்திலிருந்து விடுபடுகிறது.. ஜீவாத்மா என்பது சில வரையறைகளுக்குள் அடைக்கப்பட்ட ‘போதம்’ தான். அந்த வரையறைகள் இல்லாதாகும்பொழுது நித்திய சாந்தி வந்தடைகின்றது.

இந்த உலகம் அல்லது பிரபஞ்சம் என்பது தான் என்ன? அது ஒரு வெளித்தோற்றம் மட்டும் தான்- அல்லது நிழல் மட்டும் தான்.வாழையின் தண்டு என்பது இலைகள் தானே? மது அருந்தியவன் ஆகாயத்தில் மாயா வினோதங்களைக் காண்கிறான்.அதே போல் மனம் ஒன்றை’ பலதாகக் காண்கிறது. மதுவின் மயக்கத்தில் உயர்ந்து நிற்கின்ற கம்பம் அசைவது போல் தோன்றும். அஞ்ஞானி பிரபஞ்சத்தில் அசைவுகளைக் காண்கிறான். மனம் ‘இரட்டை’பாவத்தை ஸ்வீகாரம் செய்து கொண்டு, காண்பவன்’ காணப்படும் பொருள்’ என்று இரண்டாக பிரபஞ்சத்தைக் காண்கிறது.. ஆனால் எப்பொழுதும் ‘த்வந்த’ரூபங்களும் அதன் நிஜமான மூல ரூபமும் ஒரே நேரத்தில் இருக்கின்றது. இந்த ‘இரட்டை’ மன  நிலை’ அழியும்பொழுது ‘துவந்தமும்’ ‘ஏகமும்’ காணாமல்’ போய்விடுகிறது. ஒன்று மட்டும் இருக்கும்பொழுது அது எதை காண்பது?

“அன்ந்தாவபோதத்தின் ஏகாத்மத்துவத்தில் உறுதிப்பட்டுவிட்டால், ஒருவன் கர்மங்கள் ஏதும் ஆற்றாமல் நிஷ்க்ரியனாக, நிசப்தனாக இருந்தாலும், இல்லை கர்மங்களில் மூழ்கி செயலாற்றிக்கொண்டிருந்தாலும், அவன் சுயமாக சாந்தியுள்ளவனாக இருப்பான்’

அந்த மாதிரியான பரம பதத்தை எட்டிவிட்டவன் அனாத்மாவஸ்தையில் இருக்கிறான் என்று சொல்லலாம்.

அது சூன்னியம் என்பதும் இல்லை என்று அறியும் நிலை.

மனாதில் உண்டாகின்ற ‘ஆந்தோளனம்’ ‘அலைக்கூட்டம்’ –மனோ விருத்திகள் தான் ‘போத’த்தை பிரபஞ்ச ரீதியான அறிவிற்குட்பட்ட வஸ்துவாக்கிறது.அதுவே பிறகு ‘நான் பிறந்தேன்’ என்ற மாதிரியான எண்ண அலைய்களை உற்பத்தி செய்கின்றது. இந்த எண்ண்ங்கள் பொய்யானவை. அப்படிப்பட்ட அறிவு கூட மனம் தான். ஆகவே தான் அப்படிப்பட்ட அறிவை ‘அவித்யை’ அல்லது ‘பிரமை’ என்று சொல்லப்படுகிறது. சம்சாரம் எனும் பிரபஞ்ச வாழ்விலிருந்து முக்தி பெறுவதற்கு ஆத்ம ஞானம்’ ஒன்றே வழி.  இருட்டில் கயிறை பாம்பாகக் கண்ட பிரமை விலக வேண்டுமென்றால், அது பாம்பல்ல, வேறும் கற்பனை தான் என்ற ஞானம் வரவேண்டும். அந்த ஞானம் உளவாகின்றபொழுது இந்திரிய சுகங்களின் அர்த்தமின்மை புலனாகும், தானாக அவைகளில் விருப்பமில்லாமலாகும். ‘விருப்பு’ வெறுப்புக்கள்’ தான் அஞ்ஞானத்தை வளர்க்கின்றது. ஆசக்திகளை உரமிட்டு வளர்க்காமலிருந்தால், விருப்பு-வெறுப்புக்கள் தானாக அழிந்து விடும்; இதிலென்ன கஷ்டம்?

பிரபஞ்ச வஸ்துக்களில் பிடிப்பு இருக்கும் வரை மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டு தானிரு.க்கும்; அமைதி கிடைக்காது. விஷயங்களிலோ ஆசைகளிலோ பிடிப்பில்லாமலிருந்தால் மனதில் சலனமிராது, சாந்தியிருக்கும். பிரபஞ்சமெனும் மாயக்காட்சியும் அங்கு இராது. மனோ விசாரங்களின் ஒரு சேகரம் தான் ஜீவன். அதுவே காரணமும் கர்ம்மும். அது தான் பிரபஞ்சக் காட்சிகளின் விதை; அதிலிருந்து தான் சரீர சிருஷ்டி தோன்றுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s