யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 98 தினமொரு சுலோகம்

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 98
தினமொரு சுலோகம்
நாள் 98

பிரம்மாவிற்கும் புழுவிற்கும் வேற்றுமையில்லை

யதா ஸம்பத்யதே ப்ரஹ்மா கீட: ஸம்பத்யதே ததா
கீடஸ்து ரூடபூதௌகவலனாத்துச்சகர்மக: !

य्था सम्प्ध्यते ब्रह्मा कीट: सम्पध्यते तदा
कीटस्तु रूडब्तौघवलनात्तुच्चकर्मक: !
வசிஷ்டர் தொடர்ந்தார்:’ சில பல காரணங்களால் மனோ விசாரங்களில்- சிந்தைகளில் ஒரு சலனம்- இளக்கம் தோன்றுகிறது. இம்மாதிரியான சலனத்தில் சிலர் ஒரே ஜன்மத்திலேயே விடுபட்டு விடுகிறார்கள்( முக்தியடைந்து விடுகிறார்கள்.).வேறு சிலர் ஆயிரமாயிரம் ஜன்மங்கள் எடுத்தாலும் விடுபட முடியாமல் தவிக்கிறார்கள். மனோ விருத்திகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்பொழுது ‘சத்திய தரிசனம்’ சாத்தியமில்லை. ஏனென்றால் மனம் செயல் படும்பொழுது அங்கு ‘நான் இருக்கிறேன்’, ‘ இது என்னுடையது’ ‘இது எனக்கு வேண்டும்’ என்ற நினைப்புக்கள் இருந்து கொண்டேயிருக்கும் ‘ நான்’ இருக்கும் வரை சத்-தை காண இயலாது.
காண்கின்ற பிரபஞ்சம் போதத்தின் ஜாக்ரத் அவஸ்தை- அதாவது விழிப்பு நிலை; அஹங்காரம் சொப்னாவஸ்தை; மனமென்கின்ற வஸ்து தான் அதன் சுஷுப்தி நிலை. சுத்த போதம் தான் நாலாவது- (அது துரீயம் எனப்படுகிறது). அந்த நிலையில் எந்த விதமான எதிர்மறைகள் கிடையாது அங்கு ஏகமான சத்தியம் மட்டும் தான் உண்டு. இது போதத்தின் பரம நிர்மலமான சத் அவஸ்தை.
இம்மாதிரியான சத் அவஸ்தையில் உறுதி பூண்டவனுக்கு துக்கம் என்பதே கிடையாது.
நாம் காண்கின்ற இந்த பிரபஞ்சத்திற்கு காரணம் பரப் பிரம்மம் என்று சொல்லப்படுகிறது. இது ஆகாயம் தான் ஒரு மரத்தின் உயரமான வளர்ச்சிக்குக் காரணம் என்பது போல் தான். ஆகாயம் மரத்தின் உயரமான வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதில்லை; அவ்வளவு தான். அதற்காக அது தான் காரணம் என்று சொல்வது தவறு. ஆழ்ந்து சிந்தித்தால் பிரம்மம் உண்மையில் யாதொன்றின் தோற்றத்திற்கும் ஆக்கபூர்வமாய் உதவுவதில்லை. பூமியில் குழித்துக் கொண்டே போனால் கடைசியில் மிஞ்சுவது சூன்னியமான ஆகாயம் தான். அதே போல் விசார மார்க்கத்தின் வழியாக சிந்தித்தோமென்றால் எல்லாமே அவபோதமே என்பது புரியும்.. வேறு ஒன்றும் அங்கு கிடையாது.
இராமன் வினவினான்:” இந்த சிருஷ்டி ஜாலங்கள் இவ்வளவு பிரம்மாண்டமாய் வளர்ந்ததெப்படி என்று சற்றே விளக்கிச் சொல்வீர்களாக.’
வசிஷ்டர் சொன்னார்:” நமது போதத்தில்=புத்தியில் உண்டாகும் கொந்தளிப்பும் அவபோதத்தில் உண்டாகின்ற அசைவுகளும் வித்தியாசமானவை அல்ல. எப்படி அவபோதத்திலுண்டாகின்ற அசைவுகளிலிருந்து ஜீவன் உருவாகின்றதோ அதே போல் ஜீவனில் உண்டாகின்ற சிந்தைகளிலிருந்து மனம் தோன்றுகின்றது. மனம் தானாகவே,’தான் பஞ்ச பூதங்கள் தான்’ என்று நினைத்து அவையாகவே மாறுகிறது. மனம் எதை சிந்திக்கின்றதோ அதை மட்டும் காண்கிறது. அதற்குப் பின் ஒன்றொன்றாய் கண், காது, நாக்கு, நாசி, த்வக்கு என்கின்ற இந்திரியங்களை பெறுகின்றது. இந்த தோற்றங்களில், இந்திரியங்களுக்கும் மனத்திற்கும் இடையே எந்த வித மான காரிய காரண பந்தமும் கிடையாது. இது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல்த் தான். இரண்டு சம்பவங்களும் ஒரே நேரத்தில் யதேச்சையாக நிகழ்ந்தவை தான். அதே தொடர்பு தான் சிந்தைகளின் தோற்றத்திற்கும் இந்திரியங்களின் தோற்றத்திற்கும் இடையிலுள்ளது.. இவ்வாறு தான் முதல் விசுவ ஜீவன் தோன்றியது.
இராமன் மீண்டும் வினவினான்:’ ‘அவித்யை’ என்பது உண்மையில் இல்லாத ஒன்று; பிறகு ஏன் நாம் முக்தியைக் குறித்தும் ஆத்மவிசாரத்தைக் குறித்தும் யோசித்து கஷ்டப்படவேண்டும்?”
வசிஷ்டர் சொன்னார்:” இராமா, இந்தக் கேள்வி எப்பொழுது எழும்ப வேண்டுமோ அப்பொழுது எழும்பணும். இப்போழுது அதற்கான நேரமல்ல மலர்கள் மலருவதும் காய்கள் பழமாவதும் அதாது காலத்தில்த் தான் நிகழும்.
இந்த விசுவ ஜீவன் ‘ஓம்’.என்று உச்சரித்து சுத்தமான இச்சையால் இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கின்றது.
‘பிரம்மாவை எவ்வாறு தன் இச்சையால் சிருஷ்டித்ததோ, அதே போல்த் தான் ஒரு புழுவையும்சிருஷ்டித்துள்ளது. புழுவில் மாசு படிந்துள்ளதால், அதால் சிறிய கர்மங்களைத் தான் ஆற்ற முடிகிறது.’
இவைகளுக்கு- பிரம்மாவிற்கும் புழுவிற்கும் இடையிலுள்ள வேற்றுமை வெறும் கற்பனை மட்டும் தான் .ஏனென்றால் உண்மையில் சிருஷ்டியே கிடையாது. அது வெறும் சங்கல்பம் மட்டும் தான். ஆகவே வேற்றுமையும் சங்கல்பமே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s