பஜகோவிந்தம் 2

பஜகோவிந்தம் என்ற இந்த உபதேச நூல் முதலில்  மோஹமுத்கரா என்ற பெயரில்த்தான் அறியப்பட்டு வந்தது. 

பிற்காலத்தில்த் தான் பஜகோவிந்தம் என்ற பெயர் ஏற்பட்டது. முக்தர என்றால் சம்மட்டி (Hammer)

என்று பொருள். மோகத்திற்கு கொடுக்கும் சம்மட்டி அடிகள் என்ற பெயர் மிகவும் பொருத்தமானது என்று 

முதல் மூன்று  சுலோகங்களை பார்க்கும்பொழுது தெரிந்து விடுகிறது.

முதல் சுலோகம்  வீண் லௌகீக சம்பந்தமான கல்வி எதற்கும் உதவாது; அது ஞானாமன்று; வெறும் 

ஏட்டுச்சுவடி சுரைக்காய்; அதன் பின்னால் ஓடி நாட்களை வீணாக்காமல் ஆத்ம விசாரித்ததில் ஈடுபட்டு 

பரமனில் ஐக்கியமாவாதற்கான வழியைத் தேடு என்று நெற்றியில் அடித்தது போல் கூறிய ஜகத்குரு 

சங்கராச்சாரிய பகவத் பாதாள் இரண்டாவது சுலோகத்தில்  பொருளாசைக்கு கொடுக்கிறார் சவுக்கடி.

                              மூட ஜஹீஹி தனாகமா திருஷ்ணம்

                              குரு ஸத்புத்திம் மானஸிவிதிருஷ்ணம்

                                யத்லபாஸே நிஜகர்மோபாத்தம்

                                வித்தம் தேனா விநோதயா சித்தம்

மூடா———-அஞ்ஞானி

ஜஹீஹி ——-விட்டு விடு

தனாகமா திருஷ்ணம்——– பொருள் ஈட்டுவதற்கான தாகத்தை

குரு——————–உருவாக்கு,உளவாக்கு

ஸத்புத்திம்—————ஸத்தியமான உணர்வு, நினைப்பு

மானஸி——————மனதில்

விதிருஷ்ணம்————–இச்சை இல்லாமல்,பற்றற்று

யத்——————–கிடைப்பதை வைத்துக்கொண்ட

லபதஸே நிஜகர்மோபாத்த—————-கடந்த கால கர்ம பலன்கள்

வித்தம்———————–பொருள் தனம்

தேனா————————/அதை வைத்துக்கொண்டு

வினோதயா—————–அனுபவிப்போம

சித்தம்————————-மனம்

பொருள்

ஏய் மூடர்களே, உங்களது பொருளாசையை விட்டொழியுங்கள்:;உங்கள் மனதை ஸத் விஷயங்களை 

நோக்கிய திருப்பங்கள், போதும் என்ற மனப்பாங்கை விருத்தி செய்யுங்கள்.அநித்தியமான பொருள்- லௌகீக 

சுகங்களுக்குப் பின் ஓடாதீர்கள்  அநித்தியமான, எல்லையில்லாத பரமனை நோக்கி திருப்புங்கள்.

நீங்கள் பெறுவதெல்லாம் உங்கள் முற்கால கர்மங்களின் பலன்கள் தான். அந்த பலன்களை மகிழ்சசியுடன் 

அனுபவியுங்கள்.

விளக்கவுரை

பாண்டித்தியம்- ஏட்டு கல்வியில் புலமை பெறுவது வீண் என்று முதல் சுலோகத்தில் அடித்துக் கூறிய 

ஆசாரியர் இந்த சுலோகத்தில் நிலையற்ற அழியக்கூடிய செல்வத்தை சேர்த்து வைப்பதிலுள்ள 

அர்ததமின்மையை சாடுகிறார் .

. வெளி உலகப் பொருள்களை நாடிச் செல்லும் மானிடர்கள்,ஸத் விஷயத்திலிருந்து விலகிப் போகிறார்கள். 

அதாவது அவர்கள் தங்களை விட்டே விலகிப் போகிறார்கள்.

உண்மையான சந்தோஷம் ஒருவனுக்குள்ளேயே தான் இருக்கிறது. அதை வெளியே தேடுகிறவர்கள் 

மூடர்களே.அவர்கள் தேடும் பெயர், புகழ்,பணம்,பௌதிக போகப்பொருள்கள் அவர்களுக்கு நிலையான 

சந்தோஷத்தை நல்கமாட்டா.இந்த தேடலில் நேடுவதெல்லாம், -எதிரக்கொள்வதெல்லாம் போட்டி, 

பொறாமை,மோகம்,காமம்,அதிகாரம் எல்லாம் துன்பம் தரக்கூடியவையே.அவர்கள் இந்த தேடலில் மூழ்க, 

மூழ்க, சந்தோஷம் கானல் நீர் போல் அவர்களை விட்டு அகன்று போய்ககொண்டேயிருக்கும் தாற்காலிகமான 

சந்தோஷம் தான் அவர்களுக்கு கிடைக்கும்.ஆகவே தான் அதை சிற்றின்பம் என்கிறோம். எரிகிறது நெருப்பில் 

விறகைப் போடப் போட  நெருப்பு அணையாது. அது இன்னும் வேகத்துடனும் எரியும்.தாகம் அதிகரிக்கும்.

இந்த ஓட்டத்திறகிடையே அவர்கள் தங்களது சொரூப சுபாவத்தை மறந்து விடுகிறார்கள்.ஆத்மாவின் சுபாவம் 

சாந்தியும்,சந்தோஷமும் தான்.அவர்களது அன்பு சுயநலமற்றது்

செல்வம் ஈட்டுவது பாபமன்று.ஆனால் அந்தத் தேடல் ஒரு முடிவில்லாத தேடலுக்கான  ஓட்டம் ஆகக் 

கூடாது.அதுவே வாழ்வின் இலட்சியமாகி விடக்கூடாது.

தணியாதவனாக அந்த தாகத்தைத் தான் ஜகத்குரு கண்டிக்கிறேன்.

நாம் ஏறபடுத்திக்கொள்கின்ற பந்தம் தான் கண்டிக்க வேண்டியது.நாம் அந்த பொருள்களுடன் 

பாசக்கயிற்றால் கட்டப்பட்டு விட்டால் விடுபடுவதற்கு மிகவும் சிரமம்.

ஸத் சிதானந்தனை நாடிப் போகின்ற பொழுது நமக்கு விவேகம்- எது நித்தியம், எது அநித்தியம் என்ற 

பகுத்தறிவுக்கு உண்டாகிறது.அது தான் ஞானம் அந்த ஞானம் உண்டாகிவிட்டால் நாம் தாராளமாக நமக்கு 

கிடைக்கும் பௌதிகப்  பொருள்களை அநுபவிக்கலாம். கிடைக்காத பொருளுக்காக வருந்தவும் வேண்டாம்.

ஆகவே பிரச்சினை மனதில்தான் குடி கொள்கிறது.மனதை வெளிப் பொருள்களிலிருந்து விலக்கி 

உள்நோக்கித் திருப்பி விடவேண்டும்

மனம் ஆத்ம விசாரத்தில்  ஈடுபடுத்தப் பட்டு விட்டால், புலன்கள் சம்பந்தப்பட்ட பொருள்களிலுள்ள ஈர்ப்பு 

குறைந்து விடும்.

வெளிப்பொருள்கள் மனதிலிருந்து வெளியேறிவிட்டால் மனம் வெற்றிடமாகி விடும் அந்த இடத்தில் பரமன் 

இருப்பது தெரிய வரும் ஆகவே மனதை உள்நோக்கித் திருப்பி விடுவதும் பௌதிகப் பொருள்களின் பாலுள்ள 

ஈர்ப்பு இல்லாதாவதும் ஒரே நேரத்திலே நிகழ வேண்டும்.

மனதிலிருந்து காமம்,பௌதிகப் பொருள்களுக்கான மோஹம் , பொருள்சேர்பபதிலுள்ள ஆர்வம்,செல்வத்தின் 

பாலுள்ள ஈர்ப்பு,அதிகார மோகம்,பதவி ஆசை, என்பன போன்ற அழுக்குகளை மனதிலிருந்து களைய 

வேண்டும்.இந்தப பயணம் முடிவுற்றது சாந்தியும் அளிக்க இயலாதாகவும் இருக்கிறது. முழு திருப்தி என்பதை 

கட்டவே முடியாது. இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று ஆசைதீர தீ எரிந்து கொண்டேயிருக்கும் 

இது ஒரு புதைகுழி. காலை வைத்து விட்டால் வெளியே வரவே முடியாது. உள்ளே உள்ளே 

புதைந்து போய்விடுவோம்.திருப்தி கிடைக்காததால் மன சாந்தியும் இழந்து தவிக்க நேரிடும்.

ஆகவே 

           கோவிந்தனை தேடு, கோவிந்தனை நேடு

         கோவிந்தனாக ஆகிவிடு; இல்லை, இல்லை, நீயே கோவிந்தன்,கோவிந்தனை நீ.

          எல்லாமே கோவிந்தன்; ஈசாவாசாமிதம் சர்வம்

        பஜகோவிந்தம்,பஜகோவிந்தம்

         கோவிந்தம் பஜ மூடமதே

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s