பஜகோவிந்தம் 8

                      கா தே காந்தா: கஸ்தே புத்ர: 

                      ஸம்ஸாரோயமதீவ. விசித்ர:

                      கஸ்ய த்வம் க: குத: ஆயாத:

                      தத்வம் சிந்திய:  ததிஹ ப்ராத:

வார்த்தைகளின் அர்த்தம் 

க:                      யார்

தே.                  உன்னுடைய

காந்தா:            மனைவியோ

புத்ர:                  மகனோ

ஸம்ஸார ஆயா:        இந்த ஸம்ஸாரம்

அதீவ.                      மிகவும்

விசித்ர:                     விசித்ர மானது

கஸ்ய.                    யாரிடமிருந்து

த்வம்.                        நீ

க:                              யார்

குத:                         எங்கிருந்து

ஆயாத:                  வந்திருக்கிறாய் 

தத்த்வம்.                  அந்த உண்மையை

சிந்திய.                      யோசித்துப் பார்

தத் இஹ.                  இங்கேயே

ப்ராத:                      சகோதரா

பொருள் சுருக்கம்

யார்உன் மனைவி? யார் உன் புத்திரன் ? இந்த சம்சார பந்தம் என்பது மிகவும் விசித்திரமானது .

நீ யாரிடமிருந்து வந்தாய்? எங்கிருந்து வந்தாய் ? சற்றே இதன் பின்னால் உள்ள உண்மையை சிந்தித்துப் பார்.

மேற்கண்ட கேள்விகளுக்கு மிகவும் எளிதான பதில்,’நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பத்தைக் சேர்நதவர்கள்’.

குடும்பம் எப்பொழுது உருவாயிற்று ? யாருடையோ மகளாக இருந்த ஒரு பெண்ணும் யாருடையோ மகனாக 

இருந்த ஆணும் திருமணம் என்ற சடங்கினால் ஒன்று பட்டு வாழத் துவங்கும் பொழுது குடும்பம் 

உருவாகிறது. அந்த பந்தம் பரஸ்பர அன்பினாலும் திருமணம் என்ற சமூக அங்கீகாரத்தினாலும் 

வலுப்பெறுகிறது. அந்த பந்தத்தில் ஒரு உன்னதமான அர்ததம் இருக்கிறது. ஒருவரிடமிருந்து மற்றவர் நிறைய 

தெரிந்து கொள்கிறார்கள். விட்டுககொடுக்கும் பண்பும், பகுத்துண்டு வாழ்கின்ற குணமும் 

வளர்கிறது. அவர்களுக்கு சந்ததி  உண்டாகின்ற பொழுது அவர்கள் செலுத்துகின்ற அன்பும்,செய்கின்ற 

தியாகங்களும் அந்த சந்ததிகளின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அவர்களிடம் திருமணத்திற்கு முன் காணப்பட்ட சுயநலம் குடும்பப்பற்றாக உருமாறுகிறது. தனி மனிதன் என்ற

நினைப்பிலிருந்து ‘தான் ஒரு தந்தை, தாய’,என்ற உணர்வு மேலோங்குகிறது. அவர்களது பந்தம் தருகின்ற 

நெருக்கம் பல நன்மைகளை அவர்களுக்கத் தருகிறது. ஆனால் கண்மூடித்தனமான பாசமும் பந்தமும் பல 

நேரங்களில் விபத்தாகவும் முடிகிறது. ஆகவே நமது ஆச்சாரியர்கள் ‘ நெருக்கத்திலும் இடைவெளி வேண்டும்’ 

என்று சொல்லியுள்ளார்கள்.

இருவருமே பிறந்தது வெவ்வேறு காலங்களில். ஆகவே மரணமும் வெவ்வேறு காலங்களில் 

நிகழ்க்கூடும்.ஒருவர் இந்த உலகத்தை விட்டு பிரிந்து போன பின்னும்  மற்றவர் வாழ்ந்து தான்ஆகவேண்டும் 

அப்பொழுது உண்டாகும் பிரிவின் துயரம் குறைவதற்கு அந்த இடைவெளி உதவும்.

நாம் எங்கிருந்து வந்தோம்?  ஆண்பெண்ணின் ஜனனேந்திரியங்களிலுள்ள உயிரணுக்களில்இருந்து நாம் 

உருவாகிறோம். அந்த உயிரணுக்கள் நாம் உண்ணும் உணவிலிருந்து உருவாகிறது. அந்த உணவு மண்ணில் 

வளரும் செடிகொடிகளிலிருந்து கிடைக்கிறது. செடிகொடிகளோ சூரிய ஒளி, மற்றும் மழை நீர் 

இவைகளின் உதவியுடனும் வளருகிறது.ஆக, நாம் எல்லோரும் இயற்கையின் சந்ததிகள். நமக்குத் எப்படி 

வேறு உறவு முறைகளை இருக்க முடியும்?

சந்தேகமே இல்லை;குடும்பம் ஒரு கலாசாலை தான்;;நமக்கு சகிப்புத் தன்மையையும் தியாக 

மனப்பான்மையையும் அது கற்றுத் தருகிறது.அங்கே கற்றவைகளை பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிருள்ள 

உயிரில்லாத வஸ்துக்களிடமும் காண்பிக்க வேண்டும்.வெறும் வேத-வேதாங்கங்களை படிப்பதால் மட்டும்

பிரயோஜனம் இல்லை. அவைகளிலுள்ள உபதேசங்கள் நம் நடைமுறை விவகாரத்தை மேம்படுத்த வேண்டும். 

அது அவ்வளவு சுலபமில்லை. மனித மனம் குடும்பத்தில் நமக்குண்டாகும் பற்று பாசம் மிகவும் எளிதாக 

ஏற்றுக் கொள்கிறது. அதீதமான பற்றில்லாமல் நமக்கான கடைமையையும் ஆற்ற வேண்டுமென்றால் 

மனம் சிரமப்படுகிறது. 

அதறகுத்தான் சங்கரர் வழி காட்டுகிறார். ‘ நாம் யார்?’ ‘நாம் எங்கிருந்து வந்தோம்?’ என்ற கேள்விகளுக்கு 

யுக்தி பூர்வமாக யோசித்து பதில் கண்டால்  ‘யாரும் யாருக்கும் சொந்தமில்லை, ஆகவே பந்தமும். இல்லை’ 

அல்லது ‘ எல்லோரும்  எல்லோருக்கும் சொந்தம் தான், எல்லோரும் ஒரே மண்ணிலிருந்து உருவானவர்கள் 

தான; சகோதர்ர்களே தான்;ஆகவே சமமான பாசம் வைத்து செயலாற்றினால் வாழ்வில் துன்பமில்லை, 

துயரமில்லை.’ என்று விளங்கும்.ஆகவே தானே என்னோட சங்கரர் ‘ சகோதரா’ என்று அழைத்து யோசிக்கச சொல்கிறார்.

ஒரு விதத்தில் பார்த்தால் மனிதன் ஒரு சமூக ஜீவி. ‘அவனுக்குச் குடும்பம் வேண்டும், சமூகமும் 

வேண்டும்என்பதெல்லாம்’ அவனது ஜாக்ரத் அவஸ்தையில் மட்டும் தான்.ஜாக்ரத் அவஸ்தையோ அவனது 

வாழ்வின் நாலில் ஒரு பங்கு தான்.மீதி நேரமெல்லாம் அவன் உறக்கத்திலும் -ஸ்வப்னாவஸ்தையிலோ, 

ஸுஷுப்தியிலோ இருக்கிறான்.அந்த அவஸ்தைகளில் அவனுக்கு யாருடைய சங்காத்தமும் வேண்டாம்.யாருமே 

ழஇல்லாத உலகத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக வர்ததிக்கிறான்.அங்கு அவனுக்கு 

பந்தமும் கிடையாது;பாசமும்கிடையாது.கால்பங்கு வாழ்க்கையில் உண்டாகின்ற பந்த-பாசங்களுக்காக  

லௌகீக சுகப்பிராபதிக்காக செல்வத்தின் பின்னால் ஓட வேண்டுமா?

மற்றொரு விதத்தில் பார்த்தால் -தான், தன்குடும்பம், தன்கிராமம், தன் மாநிலம், தன் நாடு, விசுவப் பிரபஞ்சம் 

என்று விரிவடைந்து ஸர்வ பிரபஞ்ச சகோதரத்துவம் மலருவதற்கு சமூக அமைப்பு வழி வகுக்கிறது என்றும் 

கூறலாம்.

ஆனால் நிகழ்ந்த காலத்தில் அப்படி நடக்கிறதா? இல்லை என்று தான் கூற வேண்டும்.

காவிரியில் தண்ணீர இல்லையென்றால் வருந்துவதும் போராடுவதும் காவிரி டெல்டா பிரதேஏசத்தில் 

வசிக்கும் மக்கள்-அது கூடத் தவறு-விவசாகள் மட்டும் தான்; முல்லைப் பெரியாறு பிரச்சினை 

என்றால் கவலை கம்பம் பள்ளத்தாக்கில்ல் வசிப்பவர்கள் மட்டும்தான்; பாலாற்றின் குறுக்கே 

அணை கட்டப்படுகின்றதென்றால் அதனால் பாதிக்கப் படிகின்ற மாவட்டத்து மக்கள் மட்டும்தான்

குரலெழுப்புகிறார்கள்; தமிழ நாட்டு விவசாயிகள் வரட்சியால் பாதிக்கப் படும்பொழுது அண்டை 

மாநிலத்தவர் உதவிக்கு வருவதில்லை. 2004 ல் தமிழகம் சுனாமியால் பாதிக்கப் பட்ட பொழுது மும்பை 

வாசிகள் கவலை ஏதுமின்றி புது வருடக்  கொண்டாட்டத்தல் ஈடுபட்டனர்.;மும்பையில் வசிக்கும் தமிழர்கள் உட்பட. 

மும்பையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பொழுது மற்ற மானிலத்தவர்ஒரு திரைப்படம் ்பார்பபது போல் 

தொலைக்காட்சி பெட்டி முன்உடகார்நதிருந்தார்களேயன்றி வேறு எந்த உணர்சசிகளாலும் 

பாதிக்கப்படவில்லை்.ஆட்சிக் கட்டிலில் அமர்நதிருப்பவர்களோ, என்ன செய்தால் இன்னும் அதிகமாக 

ஓட்டுக்கள் விழும் என்று கணக்கிட்டு செயலாற்றுகிறார்கள்.

நம் நாட்டு படை வீரர்கள் உயிரிழக்கும்பொழுது, கொதிக்கின்ற நம் மனம்  மற்ற நாட்டு 

வீரர்கள் உயிரிழக்கும்பொழுது கொதிக்க காணோம்.

எங்கே போயிற்று நமது வேதங்களும் வேதாங்கங்களும் கோஷிக்கின்ற  ‘ஈசாவாஸ்யம்இதம் 

சர்வம்,” வஸுதைவக குடும்பம்,’லோகோ ஸுகினோ பவந்து’ என்ற மஹா வாக்கியங்களின் 

படிப்பினைகள்?

ஒரு குளத்தில்-ஒரு நீர் பரப்பின் மீது ஒரு சிறு கல்லைப் போட்டால் ஒரு சிறு நீர் வட்டம் முதலில்் 

உண்டாகிறது,அந்த நீர் வட்டம் பெரிதாகிப் பெரிதாகி கடைசியில் அந்த நீர் பரப்பு முழுவதிலுமே 

பரவுகின்றன 

அது போல் குடும்பம் எனும் கோயிலில் நாம் கற்கின்ற சுயநலமின்மை,பகுத்துண்டு பல்லுயிரோம்புகின்ற

குணம், சுற்றத்தில் குற்றம் காணாமலே இருப்பது, பொறுத்துப்போகும் குணம் என்பவை குடும்ப 

எல்லையை தாண்டி, கிராமம், மாநிலம் நாடு, விசுவப் பிரபஞ்சம்என்று பரவினால் அந்த மஹா வாக்கியங்களின் 

பொருளை உள் வாங்கிக்் கொண்டதாக அர்த்த ம்.

லௌகீக சுகம் தரும் பொருள்களை சேகரிப்பதற்கான உத்திகளை கற்றுக கொடுக்கின்ற அதே நேரத்திலே 

மேற்கூறிய மஹா வாக்கியங்களின் உட்பொருளையும் குழைந்தை பருவத்திலிருந்தே ஊட்டி வளர்ககணும்.

உபதேசங்களுக்கும் நல்லுரைகளுக்கும் நம்மிடம் பஞ்சமில்லை.அதை கடை பிடிப்பார் தான் யாருமில்லை.

பகவத்கீதை  பன்னிரண்டாம் அத்தியாயம் பதிமூன்று-பதிநாலாம் சுலோகங்களைப பாருங்கள்

             அத்வேஷ்டா  ஸர்வபூதானாம் மைத்ர: கருண் ஏவ ச!

            நிர்மமோ நிரஹங்கார:ஸம துக்கஸுக:க்ஷமீ!!

             ஸந்துஷ்ட:ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஸ்சய:!

            மயிலாட அர்பிதமனோபுத்திர்யோ மத் பக்த: ஸ மே ப்ரியா:!!

உயிர்கள்அனைத்திடத்தும் வெறுப்பின்மை, நட்பும்,கருணையும்உடைவனாய்,எனது என்ற நினைப்பு 

இல்லாதவனாய்,அகங்காரம் அற்று,இன்ப-துன்பங்களை சம்மாக 

ஏற்றுக் கொளபவனாய்,பொறுமையுடையவனாய் எப்பொழுதும் சந்தோஷம் உடையவனாய்,யோகியாய், 

தன்னடக்கம் உடையவனாய்,,திட நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனம் புத்தியை 

அர்பித்தவனாய்,யார் இருக்கிறானோ, அவனே என் பக்தன், எனக்குத் பிரியமானவன் என்று  பகவானை 

கிருஷ்ணன் சொல்கிறான்.

எல்லோரும் கிருஷ்ணனை வணங்குகிறோம், கிருஷ்ணன் கோயில்களுக்கும் செல்கிறோம்;ஆனால் அவன் 

உபதகளை  மட்டும் பின்பற்ற மாட்டோம்.ஏன் இந்த இரட்டை வேடம்?

நீ விசுவ சாகரத்திலுள்ள நீரின் ஒரு துளி , நீ மாசு பட்டால் நீர் நிலை முழுவதுமே மாசு படும்.அடுத்தவன் மாசு 

பட்டால் நீயும் அழுக்காவாய்.

ஆகவே இந்த பிரபஞ்ச சத்தியத்தை விசாரித்தறி;நீயும் சுகமடைவாய், விசுவத்திலுள்ள எல்லோரும் 

   சுகமடைவார்கள்.

ஆகவே கோவிந்தனை நாடு, அவன் சொற்படி நட!

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

கோவிந்தம் பஜ மூடமதே !                          

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s