ஹரி நாமகீர்தனம் 3 ഹരിനാമ കീര്ത്തനമ് 3 Harinama kIrththanam 3

ஹரி நாமகீர்தனம் 3 ഹരിനാമ കീര്ത്തനമ് 3 Harinama kIrththanam 3

ഒന്നായ നിന്നെയിഹ രണ്ടെന്നു ക്ണ്ടള്വി-
ലുണ്ടായൊരിണ്ടല് ബത,മിണ്ടാവതല്ല മമ
പണ്ടേക്കണക്കെ വരുവാന് നിന്ക്രുപാവലിക-
ളുണ്ടാകയെന്ഗലിഹ, നാരായാണായ നമ:

ஒன்னாய நின்னெயிஹ ரண்டென்னு கண்டளவி-
லுண்டாயொரிண்டல் பத, மிண்டாவதல்ல மம
பண்டேக்கண்க்கெ வருவன் நின்க்ருபாவலிக-
ளுண்டாயெங்கிலிஹ;நாராயணாய நம: !

பொருள் சுருக்கம்

‘பூரணமான அத்துவைதானுபவம் மட்டுமே மனதிற்கு நித்திய சாந்தியையும், பரமானந்த்த்தையும் அளிக்கும்’ என்று நமது வேதங்களும் உபனிஷத்துக்களும்
கூறுகின்றன. மேலும் அவைகள் கூறுகின்றன,’த்விதீயாத்வைபயம் பவதி ‘ –இரண்டு என்று நினைப்பால்த்தான் பயம் உளவாகின்றது என்று உபனிஷத்துக்கள்
கூறுகின்றன.
ஆகவே துஞ்சத்தாச்சாரியன் ,
‘இந்த பயம் இல்லாதவதற்கு நீ கருணை காட்டவேண்டும், ஹரி நாராயணா’ என்று இரண்டாவது சுலோகத்தில் பிரார்த்திக்கிறான்.
ஒன்றன்றி-இரண்டில்லாத,உன்னை பலதாகப் பிரித்துப் பார்த்த்தினால் உளவான துக்கம்-துயரம் சொல்லிமாளாது .என்னே கஷ்டம்!
எனக்கு பலதாக தோன்றுவதற்கு முன் எப்படியிருந்தியோ அதே போல் ஒன்றாகவே அனுபவப்படுவதற்கு,உன் கருணாவர்ஷம்
என்னுடைய இந்த பிறப்பிலேயே உண்டாவதற்கு அருளவேண்டும்.அதற்கு உதுவுகின்ற, எல்லா பாபங்களையும் ஹரிக்கின்ற, நாராயணா,
உனக்கு என் நமஸ்காரம்.

ஒன்னாய நின்னெ— ஒன்றான உன்னை

ஓங்காரமான பொருளில் ஆங்காரங்கள்- அஹந்தைகள் தோன்றுவதோடு, ஒன்றான சத்தியத்தை நாம் பலதாக பாவிக்க ஆரம்பிக்கிறோம்.
மாயையின் சூக்ஷ்ம ரூபமான அந்தக்கரணத்தில் பிரதிபலிக்கின்ற போதத்தின் அம்சங்களே அஹந்தைகள்.
பிரபஞ்சானுபவம் என்பது சூக்ஷ்மங்களும் ஸ்தூலங்களுமான மாயாரூபங்களை அஹங்காரங்கள் அனுபவித்தறிவது தான்.
ஜீவாத்மாக்களுக்கு உண்டாகின்ற பிரபஞ்சானுபவம், அஹந்தை வடிவத்திலுள்ள ஜீவன், மாயையால் உருவாக்கப்பட்டசூக்ஷ்ம-ஸ்தூல-ஜடக்
காட்சிகளை உணர்ந்து அனுபவிக்கின்றது தான் .
அப்பொழுது ‘ அனுபவிக்கி ன்றவர்’ என்றும் ‘அனுபவிக்கப்படுகின்றவை’ என்றும் இரண்டாக பிரிகிறது பிரபஞ்சம்’ காண்பவர்-காட்சி,
கேட்பவர்-கேட்கின்ற ஒலி இப்படி எல்லாமே இரண்டு-இரண்டாக பிரிகிறது.
பிரம்மத்தின் சக்தியான மாயையால் தோற்றுவிக்கப்படுகின்றது தான் ஜீவாத்மாக்கள்.
மாயா சக்தி அந்தக்கரணத்தில் அசையும்பொழுது, ஸ்பந்திக்கும்பொழுது, உண்டாகின்றவை தான் ஜட திருசியங்கள்.. இவை சூக்ஷ்ம உருவத்திலுள்ள
பிரம்மாம்சங்களே. சக்தியில் ஸ்பந்தனம் உண்டாகின்ற வரை ஜீவன்களோ, ஜட- திருசியங்களோ கிடையாது. அப்பொழுது இருந்தது பிரம்ம்ம் மட்டும்
தான். .சக்தியும் பிரம்மத்தில் லயித்து தனித்துவம் இல்லாமல் மறைந்திருந்த்து.
இந்த வஸ்து இரகசியத்தைத் தான் சாந்தோக்ய உபனிஷத்தில் ‘சதேவ,சௌம்ய,இதமக்ர,ஆஸீதேகமேவாத்விதீயம்’
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் பிரம்ம்ம் மட்டும் தான் இருந்த்து. அதின்றி வேறொன்றிருந்த்தில்லை.அது தான் ‘சத்’.
ஒன்றுமட்டுமே ஆன பிரம்மத்திலிருந்து ‘ ஜீவாத்மாவான நான் வேறு’ என்ற எண்ணம் மாயையின் பாதிப்பால் நம்மில் என்றுண்டாயிற்றோ, அன்று முதல்
நமக்கு துக்க காலமும் ஆரம்பித்தது. ‘நான்’ எனும் அஹந்தை தலை தூக்கும்பொழுது துயரமும் பின் தொடருகிறது.
“பகவான், ஒன்றான உன் திருவடியை ‘ஜீவாத்மாகின்ற நான்’ என்கின்ற பாவனை- சங்கல்பம் மூலம் ‘நீ வேறு, நான் வேறு’ என்று நினைத்த்தின் பலனாக
நீங்காத் துயராக என் வாழ்வில் வந்து சேர்ந்த்து. ஆகவே முன்போல் எனக்கு ‘அபேத பாவம்’ உளவாக நீ கருணை புரிய வேண்டும், நாராயணா, “ என்று
துஞ்சத்தாச்சாரியன் இந்த சுலோகத்தில் வேண்டுகிறான்.
பிரம்மம் ஏகமும்; பிறப்பு-இறப்பு இல்லாத்தும் ஆக உள்ளது. இதைத்தான் முதல் சுலோகத்தில் ஆச்சாரியன், ‘ஓங்காரப்பொருள்’ என்று
குறிப்பிட்டுள்ளான்.பிரம்மத்தின் மாற்றுருவம் தான் ஜீவாத்மா
காபாலிக பிரிவைச் சேர்ந்தவர்கள் ‘அவ்யக்தமான’ பிரகிருதியின் செயல்கள் தான் எல்லா பிரபஞ்ச வஸ்துக்களும் என்று நம்பினார்கள்.. இப்படி பிரபஞ்ச
வஸ்துக்களாக மாற்றுருவம் கொண்டதாக ஏற்படுகின்ற சங்கல்பத்திற்கு காரணம் சத்-ரஜோ- தமஸ் எனும் முக்குணங்கள் தான். இந்த முக்குணங்களும்
பிரகிருதியில் லயித்து-மறைந்து உள்ளடங்கியிருக்கின்றன..
மூலபிரகிருதியில் உள்ளடங்கியிருக்கும் முக்குணங்கள் ஏதோ ஒரு கணத்தில் பல விதமான சேர்க்கைகள் காரணம் பலதரப்பட்ட ஸ்தூல பதார்த்தங்களாக
உருவாயிற்று என்று சொல்கிறார்கள் சாங்கிய பிரிவை சேர்ந்தவர்கள்.
பிரகிருதி சாம்யாவஸ்தையிலிருக்கும்பொழுது அசைவில்லாத்தும், சர்வ வியாபியுமாக இருக்கிறது. அது நம் போதத்திலிருக்கும் சைதன்யமாகின்ற புருஷனுடன்
சேரும்பொழுது சூகஷ்ம உருவத்தில் பிரகிருதியில் உள்ளடங்கியிருந்த முக்குணங்களும் ஒளிபெற்று பல விதமான வஸ்துக்களாக உருப்பெறுகின்றன.
இந்த ஒளிபெறுதல் தான், ஒன்றான வஸ்து இரண்டாக-பலதாக தோன்றல்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி,சாந்தோக்ய உபனிஷத்தில்,ஆறாம் அத்தியாயத்தில், உத்தாலக மஹரிஷி தன் மகனும் சீடனுமான ஸ்வேத கேதுவிற்கு பிரம்மவித்யை
உபதேசிக்கின்ற விவரம் வருகிறது. அப்பொழுது அவர் சொல்வார் சதேவசௌம்யேதமக்ர ஆஸீத்’ என்று. அதாவது ஆதியில் ‘சத்’ ஒன்று மட்டுமே
இருந்த்து. அது ‘அத்விதீயமும்’ ஆக இருந்த்து.அதற்கு ஸமானமாக இன்னொன்று இல்லாமல் இருந்த்து. அப்புறம் ஒன்றெப்படி பலதாகும்? பலதாகவில்லை;;
பலதானதாகத் தோன்றுகிறது. இது நமது மனதில் மாயையினால் உளவாக்கப்பட்ட மன விப்ராந்தியே. அதே உபனிஷத்தில் அதே அத்திய்யத்தில் மேலும்
கூறப்பட்டுள்ளது,’
’ யதா ஏகேனைவ ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருண்மயமவிஞாதம் ஸ்யாத்வாசாரம்பணம் விகாரோ நாமதேய:”
பானை, குடம், சட்டி, என்று பல உருவங்கள் காணப்பட்டாலும் எல்லாமே மண்ணு தான். மண் வெவ்வேறு உருவமும் நாமமும் பெற்று பலதாக நமக்குத்
தோன்றுகிறது. இதெப்படியென்றால் குழைந்தைகள் பலமரத்து இலைகளால், மாடு, வண்டி, சட்டி, பானை, அம்மா, அப்பா என்று பல உருவங்களை உண்டாக்கி
அவைகளை நிஜமாகவே அந்த உருவங்களாக பாவித்து விளையாடுவது போன்று தான்.
அபேத பாவம் என்று மேலே குறிப்பிட்டேனல்லவா? அபேத பாவம் என்றால் என்ன?
பிரபஞ்ச வஸ்துக்களில் மூன்று விதமான பேதங்கள், வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
முதலாவது ஸ்வகத பேதம்.
ஒரு மரத்தில் உள்ள வெவ்வேறு பாகங்களை வேறு வேறு பெயரிட்டு அழைக்கிறோமல்லவா? இலை, பூ, காய், கனி, என்பது போல்.
இரண்டாவது ஸஜாதீய பேதம்
மரங்கள் வெவ்வேறு பெயரில் அறியப்படுகின்றன. பலா, மா, வாழை, என்று
விஜாதீய பேதம் மூன்றாவது வகை
மரமும் கல்லும் ஒன்றல்ல; வேறு பொருட்கள். அவை இரண்டும் ஜட வஸ்துக்கள். இருந்தாலும் வேற்றுமைகள் உண்டு.
ஒன்றன்றி வேறில்லை; அது தான் சத் என்று வேதங்களிலும் உபனிஷத்துக்களிலும் கூறப்பட்டுள்ள பிரம்மத்தில் இந்த மூன்று வித பேதங்களும் கிடையாது.
அஹந்தையும், மாயா ஜட திருசியங்களும் உருவாவதற்கு முன்னால் பிரம்மத்திற்கு கை, கால் எந்த என்ற அவையவையங்களும் கிடையாது. ஒரு
மரத்திலிருந்து பிரித்துப் பார்க்க்க்கூடிய இன்னொரு மரம் உள்ளது போல் இரண்டாவது ஒரு பிரம்மம் கிடையாது.ஆகவே சஜாதீய பேதமும் கிடையாது.
சரி. விஜாதீய பேதம் ஏதாவது உண்டா.?
‘எப்பொழுதும் இருக்கின்ற’ உண்மையான பிரம்மத்திற்கு விஜாதீய பேதம் ‘எப்பொழுதும் இல்லாத’.கத்தான் இருக்கமுடியும். இது சுத்த அபத்தமே. ‘எப்பொழுதும்
இல்லாத; ஒன்று எப்படி இருக்க முடியும்? ஆகவே பிரம்மத்திற்கு விஜாதீய பேதமும் கிடையாது
ஒன்று என்பது மூலம் பிரம்மத்திற்கு ஸ்வகத பேதம் கிடையாது. ‘மட்டும்’—வேறில்லை என்பது மூலம் ஸஜாதீய பேதம் கிடையாது. இரண்டில்லை
என்பதானால் விஜாதீய பேதமும் கிடையாது.
இப்படி சர்வ பேதங்களும் இல்லாத, பிரபஞ்ச உற்பத்தியின் மூலமும் சுத்த போதமும் ஆன பிரம்மத்தைத் தான் ஆச்சாரியன் ‘ஒன்றான உன்னை’
என்றழைக்கிறான்.

இஹ ரண்டென்னு கண்டளவில்—இங்கு இரண்டு என்று காண்பதால்

பிரபஞ்சம் சத்தியம் என்று நாம் நினைக்கின்ற வரைத் தான், துவைதத்திற்கு இடமுள்ளது. பிரபஞ்சத்தின் மூலகாரணத்தை தேடுவது தான் சத்தியத்தை
தேடுதல்.. பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற, உணாடாகி-மறைகின்ற, பிறந்து- இறக்கின்ற பல பொருட்களைக் கண்டு இவை எங்கிருந்து வருகின்றன என்று
தேடுதல் தான் சத்த்யான்வேஷணம். இவைகள் ஏன் பிரபஞ்சத்தில் இருந்து கொண்டிருக்கின்றது, ஏன் இவை ஒரு நாள் திடீரென்று இல்லாதாகிறது என்று
விசாரித்தலே சத்திய விசாரம். இதைத்தான் உபனிஷத்துக்களின் சத்திய ஜிஜ்ஞ்சாசுக்கள் அறிய ஆசைப்பட்டார்கள். ஏதோ ஒன்று இருந்து கொண்டேயிருப்பதால்
பிரபஞ்சம் இருந்து கொண்டிருக்கிறது; அந்த ஏதோ இல்லாதாகிவிட்டால் பிரபஞ்சம் இல்லாதாகி விடும். அந்த ‘ஏதோ’ தான் என்ன? இது தான்
உபனிஷத்துக்களின் விஷயம்.
அவர்களின் தேடலின் முடிவில் அவர்கள் உணர்ந்தது “பிரிக்க முடியாத்தும், அசைக்க முடியாத்துமான போதம் தான் பிரபஞ்ச சிருஷ்டி அல்லது பிரபஞ்சம்
தோன்றுவதற்கான காரணம்” என்பது தான்.
போதம் இருந்தால் பிரபஞ்சம் உண்டு; போதம் இல்லையென்றால் பிரபஞ்சம் இல்லை. இந்த சத்தியம் மிகவும் எளிதும் நிராகரிக்க முடியாத்துமாக உள்லது.
எல்லா ஆபரணங்களும் தங்கத்தின் உரு மாற்றங்கள் தான்; பெயர் மாற்றங்கள் தான். அவை மாற்றத்திற்குட்பட்டது.அது போல்த்தான் போதமும் பிரபஞ்சமும்.
பிரபஞ்சம் தோன்றி மறையக்கூடியது; போதம் என்றுமுள்ளது..மாற்றத்திற்குள்ளாகதது.
ஆனால் ஜீவாத்மாக்கள் தோன்றி மறைகின்ற மாயையிலினாலூளவாகின்ற பல ரூப-நாம பேதக் காட்சிகளை சத்தியம் என்று நம்புகிறார்கள்.இது அஞ்ஞானம்-
அல்லது அவித்யை காரணம் ஏற்படும் மயக்கம். அவித்யையினால் ஏற்படும் துவைதானுபவத்தைத் தான் துஞ்சத்தாச்சாரியன் ‘இஹ ரண்டென்னு கண்டளவில்’
என்று குறிப்பிடுகிறார்.
உண்டாயொரிண்டல் மிண்டாவதல்ல—உண்டாகின்ற துயரங்கள்- துன்பங்கள் சொல்லி மாளாது
வாழ்வில் நமக்குண்டாகின்ற துயரங்கள் ஐந்து விதம். அவித்யா, அஸ்மித, ராகம், துவேஷம், அபினிவேசம். பதஞ்சலி தனது யோக சாஸ்திரத்தில் இந்த ஐந்து
விதமான துயரங்களையும் விளக்கமாக கூறியுள்ளார்.
பிரம்ம்ம் என்பதை அறியாமல் இருப்பது அவித்யை. அதாவது சத் என்பது என்ன என்று அறியாமல் இருப்பது. அசத் வஸ்துக்களை சத் வஸ்துக்கள் என்று
நம்புவது அவித்யை.
அவித்யை ‘நான்’ நீ என்கின்ற வேற்றுமை மனோ பாவத்தை ஜீவாத்மாக்களில் உளவாக்கின்றது. இந்த வேற்றுமை மனோபாவம் ‘நான்; என்ற அஹந்தைக்கு
வழி வைக்கின்றது. ‘நான்’, ‘எனது’ என்ற எண்ணங்கள் தான் பிரபஞ்ச துக்கங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். இதை பதஞ்சலி முனிகள் அஸ்மித
என்கிறார்.
‘நான்’ ‘எனது’ என்ற எண்ணங்கள் நம்மை சில வஸ்துக்களை விரும்பவைக்கிறது.சிலவற்றை வெறுக்க வைக்கிறது. இது தான் ராக துவேஷம். இதைத்
தொடர்ந்து ‘இன்று எனக்குள்ள தேகம் என்றும் எனதாகவே இருக்க வேண்டும்’ என்ற அதியாசை- அபினிவேசம் உண்டாகின்றது.. அது தான மரண பயமாக
மாறி தீராத் துன்பத்தை அளிக்கிறது. இந்த தேஹத்தை விட்டு நான் விலகி விட வேண்டி வருமோ என்ற பயம் நம்மை வாட்ட ஆரம்பிக்கின்றது. .
இவ்வாறு உண்டாகின்ற பயத்தின் காரணமாக ஜீவாத்மாகளுக்கு மூன்று விதமான கஷ்டங்கள் நேரிடவேண்டி வருகிறது. இவை ஆத்தியாத்மிகம்,
ஆதிபௌதிகம், ஆதிதைவீகம் என்று பிரித்து குறப்படுகிறது.
பிறப்பு, இறப்பு, ஜரா,நரை, வியாதி,என்கின்ற தவிர்க்க முடியாத துன்பங்களும், காமம், குரோதம்,லோபம்,மதம், மாத்சரியம் போன்ற, தாங்களாகவே
தேடிக்கொள்கின்றவையும் ஆத்யாத்மிகம் என்ப்படும் வகுப்பில்ப் படும். இவையெல்லாமே ஸ்தூல- சூக்ஷம சரீர சம்பந்தப்படட்து. பிறப்பு-இறப்பு, ஜரா-நரை
வியாதி மரணம் எல்லாம் பௌதிக- ஸ்தூல சரீர சம்பந்தப்பட்ட்து.
காமக்ரோதம், லோபம், மோஹம் என்பன சூக்ஷ்ம சரீரசம் சம்பந்தமானது. அந்தக்கரணத்தை பாதிக்கின்றவை.
உறக்கத்திலிருக்கும் பொழுது காரண சரீரமுளவாக்கும் ஆத்யாத்மிக துக்கம் தான் அஞ்ஞானம்.
பூகம்பம், புயல், தீ விபத்து, வெள்ளம் இவையெல்லாம் தான் ஆதிபௌதிக துன்பங்கள்.இவையெல்லாம் பஞ்ச பூதங்களை ஆதாரமாக்க் கொண்ட துன்பங்கள்.
ஆதிதைவீக துன்பங்கள் யதேச்சையாக, விதியின் விபரீத விளையாட்டால் வருகின்ற துன்பங்கள்.மனிதர்கள் ஒருவருக்கொருவர் விளைவித்துகொள்ளும் போர்,
கொள்ளை, கொலை போன்ற துன்பங்கள் வினைப்பயனின் காரணமாக வந்து சேருகின்ற ஆதி தெய்வீக துன்பங்கள்.
இந்தத் துன்பங்களைக் குறித்துள்ள நிரந்தர பயம் தீராத துன்பம்.
சதா சர்வகாலமும் மாறிக்கொண்டேயிருக்கும் இகலோக பௌதிக வாழ்க்கை இவ்வாறு துன்பங்கள் நிறைந்த்தாக உள்ளது.
ஆத்மவிசாரம் வழியாக சத் என்பதை அறிய முயலாதவர்கள் இந்த துயரங்களின் தாக்கத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத் என்ன என்பதைக்
குறித்துள்ள ஞானம் இல்லாதவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இருந்தும் சத்தியத்தை தேட முயலுவதில்லை.இவர்களைப் பார்த்து துஞ்சத்து ஆச்சாரியன் ; என்னே
கஷ்டம் !’ என்றல்லாது வேறு என்ன சொல்ல?’ என்கிறான்.

பண்டே கண்க்கே வருவான்—— முன்னால் எப்படியிருந்தாயோ அப்படியே தோன்றுவதற்கு

துயரங்களால் நிறைந்திருக்கும் வாழ்க்கையும் அதனாலுண்டாகின்ற துன்பங்களும் இல்லாதாக வேண்டுமென்றால் இவைகளெல்லாம் உண்டாவதற்கான
காரணத்தை கண்டு உணரவேண்டும்.அந்தக் காரணத்தை இல்லாதாக்க வேண்டும். மேலோட்டமான மாற்றங்கள் போதாது. அந்தக் காரணத்தை வேரோடு
பிழுதெறிய வேண்டும்.
இந்த துன்பங்களுக்கெல்லாம் ‘அவித்யை’ தான் மூல காரணம். ‘சத்’ தைக் குறித்து அறிவில்லாமல் இருப்பது- அஞ்ஞானம் தான்.இந்த அவித்யை. அஞ்ஞானம்
அழிய வேண்டும்.அது அழிய வேண்டுமென்றால் நம் ‘இருப்பிற்கு’ (அஸ்தித்துவத்திற்கு) யார் காரணம் என்று கண்டுணர வேண்டும்.
இன்று நவீன விஞ்ஞானம் இதை ஓரளவு தீர்த்துவைத்துள்ளது. ‘ஜடம்’ (Matter) என்று ஒன்று கிடையாது. எல்லாமே சக்தி பிரவாஹம் ( Energy) மட்டும் தான்
என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. இதையே தான் உபனிஷத்துக்களும் ஆயிரமாயிரம் ஆண்டுக்களுக்கு முன்னேயே சொல்லியுள்ளது. பிரபஞ்ச
வஸ்துக்கள் எல்லாம் மாயை உளவாக்கின அவித்யையிலிருந்து தோன்றியது தான். மாயை எப்பொழுது வேண்டுமானாலும் அந்த சங்கல்பங்களை அழித்து
விடும்.அதாவது ஒன்றுமே உருவாக்கப்படவுமில்லை அழிக்கப்படவுமில்லை. எல்லாம் அந்த மாயா சக்தியின் விளையாட்டு தான். நவீன விஞ்ஞானம்
கண்டுபிடிக்க வேண்டியதெல்லாம் அந்த சக்தி எங்கிருந்து வருகிறது, அதன் உறைவிடம் எது என்பது தான். ஆனால் அந்த உறைவிடத்தை வெளியே தேடினால்
காணமுடியாது. அந்தர்முகமாய் நமது பார்வையைத் திருப்பிவிட வேண்டும் என்று நமது ரிஷிகள் கூறியுள்ளார்கள். அந்த சக்தி எல்லோர் உள்ளேயும் உறைந்து
கிடக்கிறது. அது ஒரே சக்தி தான். அது தான் பிரம்மம்.. அந்த சக்தி பலதாக பிரிந்ததாக தோன்றுவதிலிருந்து தான் பிரபஞ்ச வஸ்துக்கள் தோன்றுகிறது.
அப்படி பலதாகப் பிரிவதான பாவனை உருவாவதற்கு முன் இருந்த உருவத்தை காண வேண்டும் என்று துஞ்சத்தாச்சாரியன் வேண்டுகிறான்.

நின் க்ருபாவலிக-ளுண்டாயெங்கிலிஹ;நாராயணாய நம—அது உன் கிருபையினால் மட்டும் தான் முடியும்

அவித்யை ஒழிந்து ஆத்ம ஞானம் பெறவேண்டுமென்றால் வெறும் முயற்சி மட்டும் போதாது. துன்பங்களையெல்லாம் இல்லதாக்கக் கூடிய சக்தியுடைய அந்த
நாராயணனின் அருள் வேண்டும் .’நின் கிருபை’ இருந்துவிட்டால், அவித்யையால் மூடப்படும் முன் உள்ள உன் சத் சிதானந்த சொரூபத்தை இங்கேயே- இந்த
பிறப்பிலேயே காண முடியும். அப்படிக் கண்டுவிட்டாலோ பிறப்பு- இறப்பு எனும் சக்கர சுழற்சியிலிருந்து விடுபட்டு விடுவேன். அதற்கு நீ அருள வேண்டும், ஹரி நாராயணா’
‘என்று ஹரி நாராயணனை வேண்டுகிறார் எழுத்தச்சன்.
:

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s