யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 113

தினமொரு சுலோகம்

நாள்113


மஹாதேவதாமேவ ஸம்பர்ககாத்புனர்துக்கம் ந பாத்யதே

கோ ஹி தீபஶிகாஹஸ்த ஸ்தமஸா பரிபூயதே !

महातामेव संपर्क्कात्पुनर् दुखम न बाध्यते

को हि दीपशिखाहस्थस्तमसा परिभूयते ।

வஸிஷ்டர் தொடர்நதார்: ” மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட கார்கடி பரம் சாந்தியடைந்தாள்.அவளுடைய அரக்கியுருவம் அவளை விட்டு போயிற்று.அவள் சொன்னாள்,’ஞானிகளே,நீங்கள் இருவருமே பூஜைக்கு பட வேண்டிய மகான்கள்.உங்களுடைய ஸத்ஸங்கத்தால் நான் விழித்துக்கொண்டு விட்டேன்.
‘மகான்களுடைய ஸத்ஸங்கம் கிடைக்கப் பெற்றவர்கள்,அதை அனுபவிக்க முடிந்தவரகள்,இகலோக துன்பங்களுக்கு ஆளாவதில்லை. கையில் விளக்க வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு  இருளினால் என்ன கஷ்டமாகத்தான் நேரப்போகிறது ? ‘

சொல்லுங்கள் .உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அரசன் பதிலிறுத்தார்:  பெண்களிலோ இரத்தினம் போன்றவளே, எங்கள் ஆண்டில் நிறைய மனிதர்கள் வாதம், மற்றும் இதய நோயினாலும் அவதிப்படுகிறார்கள்.வயிற்றுப்போக்கு முதலியவையும் ஜனங்களைப வதைக்கின்றது. அவைகளுக்கு பரிகாரம் காண்பதறகாகத மான் நாங்கள் வெளியே கிளம்பி வந்துள்ளோம்.என்னுடைய வேண்டுகோள் இது மட்டும் தான்,’ என் பிரஜைகறளின் உயிரை நீ பறிக்கக்  கூடாது.. , கார்கடி மன்னனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதும் ன்னன் கேட்டான், ‘ நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் பசியை எப்படி தீர்த்து வைக்க முடியும்?’

கார்கடி சொன்னாள், ‘ கடந்த காலத்தில் நான் இமயத்திற்குச் சென்று கடுமை தவமிருந்தேன், இந்த தேக்கத்தை  விடுவதற்காக. ஆனால் இப்பொழுது எனக்கு அந்த ஆசை கிடையாது. நான் ஆரம்பத்தில் பீமாகாரமான உருவத்துடன் ஓர் அரக்கியாக இருந்தேன்.எனக்கு மனிதர்களை தின்பதற்கான ஆர்ததியிருந்ததால் அதற்கான வரம் வேண்டி தவமாய் இருந்தேன். பிரம்மா எனக்கு அளித்த வரித்தின் உதவியுடன் நான் விஷூசிகாவாக மாறினேன்.மனித இனத்திடையே எல்லா கொடும் வியாதிகளை உண்டு பண்ணினேன்.பிரம்மனின் வரத்தால் ஒரளவிற்கு என்னைத் கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்தது. அந்த மந்திரத்தை உங்களுக்கு சொல்லித்தருகிறேன் அதன் உதவியுடன் நீங்கள் இந்த வியாதிகளை உங்கள் நாட்டில் மட்டும் படுத்த முடியும்.

மூன்று பேரும் பேசிக்கொண்டே ஒரு ந்திக்கரையை அடைந்தார்கள். அங்கு கார்கடியிடமிருந்து மன்னனும். மந்திரியும் மந்திரோபதேசம் பெற்றார்கள்.

மன்னர்கள் சொன்னார்,’ தயாவதியான கார்கடி, நீ  நல்ல நண்பனும் குருவுமாகிவிட்டாய். நீ ஏன் அழகிய உருவத்தைக் கைக்கொண்டு எங்களை அஅரண்மனையிலேயே வந்து தங்கம் கூடாது ? ஸத் ஜனங்கள்  நட்பை மதிக்கிறார்கள்.ஸத் ஜனங்களைப பாதிக்காமல்,பாபிகளையும் கொள்ளையரகளையும் உண்டு வாழ்வாயாக.,

கார்கடி ஒத்துக் கொண்டு ஒரு அழகிய உருவத்தை எடுத்துக் கொண்டு மன்னனுடன் சென்று அலரண்மனையிலேயே வசிக்கலானாள்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s