யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 116

தினமொரு சுலோகம்

நாள் 116

ஐந்தவோபாக்கியானம்

ஐச்வர்யாணாம் ஹி ஸர்வேஷாமகல்பம் ந வினாசி யத்

ரோசதே ப்ராதரஸ்தன்மே ப்ரஹ்மத்வமிஹ நேதரத் !

अैश्वर्याणाम हि सर्वे षामकल्पम् न विनाशि यत् 

रोचते भ्रातरस्तनमे ब्रह्मत्वमिह नेतमत्

சூரிய தேவன் தொடர்ந்தான்: ‘தேவதி தேவா, கைலாச பர்வதத்திற்கருகில் உங்கள் புத்திரர்கள் ஸுவர்ண ஜாதம் என்றயிடத்தில் ஒரு ஜனபதம் உருவாக்கியுள்ளார்கள்.கஶ்யப முனியின்  வம்சத்தில் வந்த  இந்து என்ற பெயருடைய ஒரு மஹாத்மன் வாழ்ந்து வந்தார். அவரும் அவரது தர்ம பத்தினியும், சந்தான பாக்கியம் தவிர எல்லா ஐசவரியங்களும் பெற்றிருந்தார்கள்

சந்தான லப்திக்காக கயிலையில் அமர்ந்து கடின தவத்தில் ஈடுபட்டார்கள்.சிறிது நீரைத் தவிர வேறு எதுவும் உட்கொள்ளாமல் தவமிருந்தார்கள்.மரங்களைப்போல் அசையாமல் ஒரேயிடத்தில் அமர்ந்து தவம் செய்தார்கள்.பரம சிவன் அவர்கள் பக்தியில் மனமுருகி  , அவர்கள் முன் பிரத்தியடசமானார்.’என்ன வரம் வேண்டும்’ என்ற அவரது கேள்விக்கு அவர்கள் ,’எங்களுக்கு கடவுள் பக்தியும் தர்ம சிந்தனையுடன் உள்ள பத்து புத்திரர்கள் வேண்டும’ என்று வேண்டினார்கள்.பரமனும கேட்ட வரத்தை அருளினார்.

தாமதியாமல் அவர்களுக்கு தேஜஸுள்ள பத்து புத்திரர்கள் பிறந்தார்கள்.அவர்கள் ஏழு வயதிலேயே சகல வேதங்களையும் கற்றுத் தேர்ந்து விட்டார்கள். காலப்போக்கில் இந்துவும் அவரது மனைவியாரும் இறந்து போனார்கள்.அவர்கள் முக்தியும் அடைந்தார்கள்.

புத்திரர்களால் தாய்தந்தையின் இழப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.அவர்கள் பத்து பேரும் ஒரு நாள் கலந்தாலோசித்தனர்.’இனி நமக்கு நல்ல ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிக்கணும்? எதைநேடுவது உசிதமானது? எது நம்மை துக்கத்திற்குஇழுத்துச் செல்லாது? எந்த மார்ககத்தில் சென்றால் நமக்கு அப்படிப்பட்ட வாழ்வு கிடைக்கும்? அரச பதவி, சக்கரவர்ததி பதவி, ஏன் தேவேந்திர பதவி கூட அம்மாதிரியான வாழ்வை நமக்குத் தராது.ஸுவர்ககத்தை ஆளுகின்ற இந்திர பதவி பிரம்மாவின் ஒன்றரை மணி நேரத்திற்கு மட்டுமே நிலைக்கின்ற தாற்காலிகமான பதவி.

அதனால் சிருஷ்டாவான பிரம்ம பதவி தான் நாம் நேட வேண்டும். ஒரு யுகம் முழுவதுமே பிரம்மாவிடம் ஆயுள் நீடித்திருக்குமல்லவா?’ அவர்கள் இவ்வாறு தீர்மானித்து, அதற்கான வழியைத் தேட ஆரம்பித்தார்கள்

அப்பொழுது அவர்களில் மூத்த சகோதரன் சொன்னான்’ ‘ இன்றிலிருந்து நாம் ஒரிடத்தில் அமர்ந்து , ‘ நான் மலர்நத தாமரையில் அமர்நதிருக்கும் பிரம்மா.நான் தான் விசுவத்தை சிருஷ்டிக்கின்ற  பிரம்மா.மாமுனிகளும், சரஸ்வதீ தேவியும் தங்கள் சகதிகளுடன் என்னில் குடிகொள்கிறார்கள்,;

ஸுவர்கமும் அங்குள்ள தேவர்களும் என்னிலடக்கம்;சமுத்திரங்களும், மலைகளும்,என்னில் நிலை கொள்கின்றன .

உபதேவதைகளும் ராட்சதர்களும் என்னில் அடக்கம். என்னில்ததான் சூரியன பிரகாசிக்கிறான். இதோ, இப்பொழுதே சிருஷ்டி ஆரம்பித்து விட்டது. இதோ சிருஷ்டி தொடர்கிறது.இதோ சிருஷ்டி இல்லாதாவதற்கு நேரம் வந்து விட்டது.அவ்வாறு ஒரு யுகம் முடிவிற்கு வந்து விட்டது.பிரம்மத்தின் இரவு வந்து விட்டது.எனக்கு ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டது.நான் முக்தன்.’ என்று நிரந்தரம் தியானம் செய்வோம்’.

அவ்வாறு அவர்கள் தியானிக்கும் செய்தார்கள்.அப்படி அவர்கள் தியானம் செய்த வஸ்துவாகவே ஆகிவிட்டார்கள்.’ இவ்வாறு சொல்லி சூரியன் சிறிதே நிறுத்தினான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s