யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 123

தினமொரு சுலோகம்

நாள்123

ஸர்வ ஏதா: ஸமயாந்தி ப்ராஹ்மணோ பூதஜாதய:

கிஞ்சித் ப்ரசலிதா போகாத்பயோராஶோரிவோர்மய:

सर्व्व एता: समयान्ति ब्राह्मणों भूतजातय:

किन्चित्प्रचलिता भोगात्पयोराशोरिवोर्मय: ।
வஸிஷ்டர் தொடர்நதார்:” இப்பொழுது நான் ஆதி முதல் இருக்கின்ற சிருஷ்டிகளில் உள்ள மூன்று 

பிரிவுகளைக்குறித்து கூறுகிறேன். இந்த மூன்று பிரிவுகள். முறையே உத்தமம், மத்திமம்,அதமம் 

என்பவையாகும்.உத்தம ஜீவன்கள் ஸத்கர்மங்களின் பலனாக உண்டானவை.அவர்கள் இயற்கையிலையே 

நல்லவர்களாகவும் ஸத்கர்மங்கள் ஆற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.அவர்கள் மிகக் குறைந்த ஜன்மங்களே 

எடுப்பார்கள். அதற்கு பின் முக்தியடைந்துவிடுவார்கள்.அவர்கள் நற் குணங்களுள்ளவர்களாக 

இருப்பார்கள்.இதறகு எதிர்மறையாக உள்ளவர்கள் அதமர்கள்.இவர்கள் மாசு படிந்து 

குணங்களையுடைவர்களாக இருப்பார்கள்.லௌகீகத்திலுள்ள பிடிப்பு இவர்களில் பலமாக 

வேரூன்றியிருப்பதைக் காணலாம்.அவர்களுடைய சுபாவம் பலதரப்பட்டதாக இருக்கும்.இவர்கள் 

முக்தியடைவதற்கு ஆயிரமாயிரம் ஜன்மங்கள் எடுக்க வேண்டி வரும்.இவர்கள் நன்மையின் பாதையில் 

செல்வது மிகவும் அரிது.அவரகளில் சிலர் முகதியடைவார்களா என்பதே சந்தேகம். அவர்கள் தாமஸிகர்கள். 

கூரிருளில் அகப்பட்டு வழி தெரியாமலே தவிப்பவர்கள-வழி தேட வேண்டும் என்ற எண்ணமே 

உதிக்காதவர்கள்.

இந்த இரண்டு பிரிவினருக்கும் இடைப்பட்டவர்கள தான் மத்திம பிரிவில் உள்ளவர்கள்.இவர்கள் எப்பொழுதும் 

ஊக்கமுடையவர்களாகவும் உத்சாகமுடையவர்களாகவும் இருப்பார்கள்.எப்பொழுதும் எதையாவது நேட 

வேண்டும என்று ஆசையுடையவர்களாக இருப்பார்கள்.ராஜஸீக குணமுடையவர்கள் எனலாம். அவர்கள் சுய 

முயற்சியால முக்தி பதத்தை நெருங்கும்பொழுது அவர்களது ராஜஸீக குணங்கள் சாத்விக குணங்களில் 

லயித்துவிடுகிறது.ஆனால் ரஜோ குணங்கள் மிகவும் திவீரமாக இருப்பவர்கள் இந்த லயனம் நிகழ்ந்து முக்தி 

கிடைப்பதற்கு சிறிது தாமதமாகலாம்.சில ஜீவன்களில் ரஜோ  குணங்கள் தமோகுணங்களாக மாறுவதற்கும் 

வாய்ப்பு உண்டு.அப்படி நிகழ்நதால் அவர்கள் அவர்களை அறியாமலேயே அதமர்களாகிவிடுகிறார்கள்.அப்படிப் 

பட்டவர்கள் ஆயிரம் ஜன்மங்கள் எடுத்தாலும் அஞ்ஞானம் எனும் இருட்டிலிருந்து வெளிவருவது 

கஷ்டம்.அவர்கள் முக்தியடைவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டி வரும்.

ஆனால் கடுமையான முயற்சியினால் முக்தி பதத்தை நெருங்கும்பொழுது அவர்களது தமோ குணங்கள்  

சாத்விக குணங்களில் கரைந்து சாத்விகர்களாகவே மாறுகிறார்கள்.அப்பொழுது அவர்களும் 

முக்தியடைகிறார்கள்.

ஆகவே எக்குணமுடையவர்களாயினும் முக்தி கிடைக்காது என்பதில்லை.எல்லோருக்கும் முக்தி கிடைக்கும்

எத்தனை ஜனமங்களுக்குப் பிறகு என்பதில்த்தான் வேற்றுமை.

“சமுத்திரத்தில் மேல்நிலையில் உண்டாகும்அலைகள் போல் , இந்த சகல ஜீவராசிகளுக்ககும் 

உண்டானது பரப்பிரம்மத்தின் சமன் நிலையில் ஏற்பட்ட ஒரு சிறு சலனத்தால்த் தான்”

“ஒரு பானையிலுள்ள ஆகாயம், ஒரு அறையிலுள்ள ஆகாயம்,ஒரு சிறு துளையின் உள்ள ஆகாயம் 

எல்லாம் ஒரே ஆகாயம் தானே!”

அதுபோல், எல்லா ஜீவராசிகளும் அந்த அனந்தமான-எல்லையற்ற பரம்பொருளே!அவை வெறும் 

பரம்பொருளின் அம்சங்களல்ல. அனந்தத்திலிருந்து உத்பூதமானதால் -உயிர்ததெழுந்ததால் அவை ஆடி 

அடங்குவதும் பரம்பொருளிலேயே தான்.ஆகவே பரப்பிரம்மத்தின் இச்சையின்படி இவை உண்டாகி 

மறைகின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s