யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 126

தினமொரு சுலோகம்

நாள்126

ஆகாசங்கள் மூன்று

மன ஏவ விசாரேண மன்யே விலயமேஷ்யதி

மனோவிலயமாத்ரேண தத: ஸ்ரேயோ பவஷ்யதி !

मन ऐव विचारेण मन्ये विलयमेष्यति

मनोविलयमात्रेण तत्: ऋेयो भविष्यति ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” மனம் இருக்கிறதென்ற திட புத்தியால் போதம் மறைக்கப்படுகிறது . போத ஒளி 

தான் மனம்.இந்த மனம் மனிதன்,தெய்வங்கள்,ராட்சதர், உபதேவதைகள்,சுவர்க்க வாசிகள் இப்படி பல பல 

நாமங்களையும் பெயர்களையும் தனதாக்கிக் கொண்டு பிரத்தியட்சப்படுகிறது.பிறகு அது பற்பல 

குணநலன்களாகவும் கிராமங்களாகவும் பட்டணங்களாகவும் வளர்சசியடைகின்றன. உண்மை 

இப்படியிருக்கையில் வெளித்தோற்றத்தில் மட்டும் உண்மை போல் தோற்றமளிகின்ற சத்தியத்தைத் தேடுவதில் 

என்ன பொருள் இருக்கிறது?மனதை மட்டும் கவனத்தில்க் கொண்டால் போதுமே! அப்பொழுது நமக்கு 

புலனாகும் , சிருஷ்டிக்கப் பட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கின்ற எல்லா வஸ்துக்களும்,எல்லா 

காட்சிகளும் மனதால்- மனதில் உருவகப்படுத்தப்பட்டவை தான் என்று.அனந்தாவ போதம் மட்டும் தான் 

மனதால் சிருஷ்டிக்கப படாதது.

 ஆழ்ந்து நோக்குங்கால், மனம் தனது  உற்பத்தி ஸ்தானத்திறகு பின்வாங்குயது புலனாகும்.அவ்வாறு 

பூர்ணமாக முக்தியடைந்துவிடுவார்கள் மனதில் சதா சர்வ காலமும் ஆனந்தம் நடனமாடிக்கொண்டிருப்பது 

தெரிய வரும்”

மனம் இல்லாதாகின்றன நிலை தான் முக்தி நிலை. அப்படிப்பட்டவர்களுக்கு  மறு பிறவியென்பது 

இல்லை.ஏனென்றால் மனம் தானே  பிறப்பும் இறப்பும் ஆக மாறிக் கொண்டிருக்கிறது.

இராமன் கேட்டான்:” பகவான்,அனந்தாவபோதத்தில் இதெல்லாம் எப்படி நிகழ்கிறது? எப்படி ‘ஸத் ‘உம் 

‘அஸத்’ உம் கலர்நத மனம் போதத்திலிருந்து உத்பூதமாயிற்று- உதயமாகிறது?’

வஸிஷ்டர் சொன்னார்:” ஆகாயம் மூன்று வகைப் படும்.அவிச்சின்ன ஆகாயம் அல்லது 

அனந்தாவபோதம்,எல்லைக்குட்பட்ட ஆகாயம்அல்லது நாநாத்துவமான போதம், பிரபஞ்ச வஸ்துக்களின் 

உலகமான பௌதிக ஆகாயம்.

முதலாம் ஆகாயம் ‘சிதாகாசம்’ என்ற பெயரில் அறியப்படுகிறது.அது உள்ளேயும் வெளியேயும், ஸத்திலும் 

ஜடத்திலும் ஒருபோல் சுத்த சாக்‌ஷியாக நிலைகொள்கின்றது.

இரண்டாவதை ‘ சித்தாகாசம்’ என்பார்கள்.இது ஒரு வரையறைக்குடபட்டது. இது  எல்லையுடையது.இது 

கால வரையறைக்குட்பட்டது். ஆனால் ஸர்வ வியாபியாகவுமாக எங்கும் நிறைந்தும் காணப்படுகிறது.இது 

ஜீவஜாலங்களின நலன் விரும்பியாகவும் இருக்கிறது.

மூன்றாவதான பௌதிக ஆகாயத்தில பஞ்சபூதங்கள் முதலிய மூலப்பொருட்கள் நிலை கொள்கின்றன. 

சித்தாகாசமும் ,பௌதீக ஆகாசமும் அனந்தாவபோதமெனும் முதலாம் ஆகாசத்தில்இருந்து  

சுதந்திரமானதல்ல..

உண்மையில் இரண்டாவதும் மூன்றாவதும் ஆகாசங்கள் கிடையவே கிடையாது.அஞ்ஞானிகளுக்கு விவேகம் 

உண்டாக்குவதற்கு இவை -மூவாகாசம் என்ற தத்துவம்-  உபயோகிக்கப்படுகின்றது.அவ்வளவு 

தான்.ஞானமடைந்தவர்களுக்குத் தெரியும் , ‘ஒரேயொரு உண்மை ‘ தான் உண்டு என்று.அந்த உண்மை தான் 

அனந்தாவபோதம்.அந்த போதம் ‘ நான் புத்திசாலி’ என்றோ, ‘ நான் ஜடம்’ என்றோ சிந்திக்க ஆரம்பிக்கின்ற 

பொழுது அது ‘மனம்’.இந்த ஒரு தவறான புரிதலால்த் தான் பௌதீகமும், மனம் சம்பந்தப்பட்ட எல்லா 

பொருட்களும் ஸங்கலபத்தின் வாயிலாக வெளிப்படுகின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s