யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 128

தினமொரு சுலோகம்

நாள் 128
துயரங்களுக்கு காரணம் மனம் தான்

 ஸ்வயம் ப்ரஹரதி ஸ்வாந்தம் ஸ்வயமேவ ஸ்வேச்சயா

பலாயதே ஸ்வயம் சைவ பஶ்யாஞானவிஜ்ரும்பிதம் !

स्वयम् प्रहरति स्वानतम् स्वयमेव स्वचचया

पलायते स्वयम् चैव पश्याज्ञानविज्रुम्भितम् !
வஸிஷ்டர் தொடர்நதார்: ” இராமா, இந்த காடு எங்கேயோ இருக்கிறது என்று நினைக்காதே.ஊரும் பேரும் 

இல்லாத இக்கதையில் வரும் மனிதன் வாழ்வதும் எங்கோ உள்ள பெயர் தெரியாத ஊருமல்ல. நாம் வாழும் 

இந்த பிரபஞ்சமும் அந்த ஊர்- காடு. பெரிய ஒரு வெற்றிடமாக- சூனியமாக காணப்பட்டாலும், 

விசாரணையின் ஒளியின் உதவியடன் தான் அந்த சத்தியத்தைத் காண முடியும்.அந்த வெளிச்சம் தான் ‘நான்’ 

என்ற அஹம் தத்துவம்.இந்த தத்துவத்தை- ஞானத்தை எல்லோரும் ஒத்துக்கொள்வதில்லை.அதை 

ஒத்துக்கொள்ளாதவர்கள் நிரந்தரம் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த அறிவை 

தனதாக்கிக் கொண்டவர்கள் தான் ஞானிகள்.எண்ணிக்கையில்லாத உணர்சசிகளின் வெளிப்படுதல்களுடைய 

மனம் தான் ஆயிரம்கைகளுள்ள அந்த மனிதன். மனம் அதன் வாசனைகளாலேயே தண்டிக்கப்

படுகிறது.சாந்தியில்லாமல் அலைபாய்கினளது. கதையில் வரும் பாழும் கிணறு பிரபஞ்சானுபவங்கள் 

தரும் துன்பானுபவங்கள் தான். வாழைத்தோப்புக்கள் இடையிடையே தமக்கு ஏற்படும் தாற்காலிகமான 

இன்பம் தரும் அனுபவங்களும்.முட்செடிகள் நிறைந்துள்ளஅந்தக் காடு தான் நமது இகலோக வாழ்வு.அங்கே 

மனைவி ,மக்கள், உறவினரும், மித்திரர்கள் என்ற பற்பல பந்தங்கள் நம்மை அலட்டிக் 

கொண்டேயிருக்கின்றன.

நாம் அலைந்து திரிந்து மீண்டும் மீண்டும் அந்தக் காட்டிற்குள் வந்து சேருகிறோம். மனமும் இதில் சாந்தி 

கிடைக்குமா, அதில் சாந்தி கிடைக்குமா என்று அலைந்து திரிந்து அமைதியில்லாமலிருக்கிறது.மீண்டும் 

மீண்டும் பிறக்கிறது, இறக்கிறது. விவேகம் தரும் வெளிச்சத்தை மனம் நிராகரிக்கிறது. மனம் உண்மையைக் 

காண மறுக்கிறது.ஆத்ம ஞானத்தை தன் எதிரியைக் எண்ணுகிறது. பிறகு துன்பம் வரும்பொழுது 

அழுகிறது.சில நேரங்களில் மனிதர்கள் பக்குவம் வராத – தாற்காலிகமான அறிவின் ஒளியில்,இகலோக 

சுகங்களையெல்லாம் துறந்து சன்னியாசியாகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட துறவறம் 

நிலைப்பதில்லை.அதும் மேலும் அதிக துன்பத்திற்கான காரணமாகிறது.

சன்னியாசம்,பக்குவப்பட்ட அறிவின் காரணமாகவும், தீர்க்கமான விசாரணையின் பலனாக வும் 

கைக்கொள்ளப்பட்டதென்றால்,அது நித்திய சாந்தியையும் பரமானந்தத்தையும் நல்கும்.ஒருக்கால் அப்படி 

சன்னியாசம் பெற்ற மனிதன் தனது கடந்தகால வாழ்க்கையை ஒருவிதமான ஆச்சரியத்துடன் திரும்பி 

பார்ப்பார்களாகவிருக்கலாம். கதையில் மனிதனின் ஒவ்வொரு அவையவயங்கள். உதிர்நது விழுவது, 

சன்னியாசம் கைக்கொண்ட ஞானியின் பூர்வ கால வாசனைகள் அழிகின்றதைக் குறிக்கின்றது.

” அவித்யையின் விளையாட்டைப் பாரேன். அது ஒருவனை , தன்னிஷ்டப்படி தொந்தரவுகளை செய்து,அவனை 

இலட்சியமில்லாமல் அங்குமிங்கும் ஓட வைத்து, அர்த்தமற்ற பதட்டத்தில் தள்ளுகிறது.”

 ஆத்மஞானம் எல்லாருக்கும். கிடைக்கக்கூடிய கூடியது தான் என்றாலும் அவரவர்களுடைய பூர்வ கால 

வாசனைகளின் அடிப்படையில் உலகத்தில் அலையவேண்டிவருகிறது.மனம் இதற்கு உரமிட்டு துயரங்களின்

தீவிரத்தை அதிகப்படுத்துகிறது. மனிதனை மேலும் அலைக்கழிக்கின்றது.தன்னுடைய மோகத்தாலும், 

ஆசையாலும்,சபலங்களினாலும்,அவன் பந்திக்கப் படுகிறான்.துயரங்கள் அவனை அமைதியற்றவனாகவும், 

நிராசையுற்றவனாகவும் மாற்றுகிறது.ஆனால் ஞானி இவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல்,தான் எடுத்துக் 

கொண்ட ஆத்ம விசாரணையை- ஸத்யான்வேஷணத்தை- விடாமல் தொடருவான்.ஆகவே துன்பங்களும் 

அவனைத் தீண்டுவதில்லை.கட்டுப்பாடற்ற மனம் தான்,துன்பங்களுக்கு காரணம் .

ஆத்மான்வேஷணத்தின் வழியாக இக லோக துன்பங்களெல்லாம் சூரியனைக்கண்டபனித்துளி போல் மறைந்து 

போகும்.ஆத்ம விசாரம் ஒன்று தான் உண்மையை கண்டறிய ஒரே வழி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s