யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 133

தினமொரு சுலோகம்

நாள் 133

மனம் ( தொடர்ச்சி)

அனப்யஸ்தவிவேகம் ஹி தேசகாலவஶானுகம்

மந்த்ரௌஷதிவஶம் யாதி மனோ  நோதாரவ்ருத்திமத்

अनभ्यस्तविवेकम् हि देशकालवशानुगम्

मन्तरौषधिवशम् याति मनो नोदारव्रुत्तिमत् ।

வஸிஷ்டர்  தொடர்ந்தார்:” இராமா, கொஞ்சம் நேரத்திற்கு பின் மன்னர் கண்ணைத் திறந்தார். பயத்தால் 

அவரது தேகமே நடுங்கிக் கொண்டிருந்தது. கீழே விழுமுன் அரசனை அமைச்சர் பெருமக்களும் ஏனையோரும் 

தாங்கி பிடித்துக்கொண்டு கொண்டார்கள். அவர்களைப் பார்த்து அரசன் கேட்டான்,’ நீங்கள் எல்லாம் யார்? 

என்னை என்ன செய்கிறீர்கள்?’

மந்திரிகள் தர்மசங்கடத்துடன் சொன்னார்கள்:’ பிரபுவே, தாங்கள் எங்களுடைய வீர மஹாராஜாவல்லவா? 

தாங்கள் மிகுந்த அறிவாளியாகவிருந்தும், தங்களை ஒரு பிரமை பிடித்துக்கொண்டு கொண்டுள்ளது.தங்களது 

மனதிற்கு என்னாயிற்று? மனைவி, மக்கள் முதலிய மிகவும் சின்ன விஷயங்களில் ஆஸக்தியுடன் 

மூழ்கியிருப்பவர்களுக்குத் தான் இந்த மாதிரி மோக பிரமை  ஏற்படும்.தங்களைப்போலுள்ள அறிவாளிகளுக்கு 

ஏற்படுவதற்கு சாத்தியமேயில்லை.மேலும் தாங்கள் பரம்பொருளின் மீது அதீவ பக்தியுடைவர்.’

” ஞானமடையாதவர்களை மட்டுமே மாயா வினோதங்களும்,லஹரியும் மருந்துகளும் பாதிக்கும்.மனம் 

பூரண வளர்சசியடைந்தவனை அம்மாதிரியான உபாதைகள் தீண்டாது”

 இதைக் கேட்ட மன்னருக்கு  கொஞ்சம் சுய நினைவு திரும்பியது.ஆனால் அந்த ஜால வித்தகனைப் 

பார்த்ததும் மறுபடியும் நடுங்கிக் ஆரம்பித்தார்.பிறகு அவனிடம் கேட்டார்:’ மாயாவியே,நீ என்னை என்ன 

செய்தாய்? நீ எனக்கு மேல் ஏதோ ஒரு மாயா வலயத்தை உண்டு பண்ணியிருக்கிறாய்.அந்த மாயை 

அறிவாளியைக் கூட தன் வலயத்திறகுள் கொண்டு வந்து விடுகிறது.நான் இந்த தேகத்தில் இருந்து கொண்டே 

எத்தனை மாயக்காடசிகளைக் கண்டேன்!’

அவையோர் பக்கமாகத் திரும்பி மன்னன் தன் அனுபவங்களை விவரிக்க ஆரம்பித்தார்.

‘இந்த மாயாஜாலக்காரன் மயில்இறகுகளை வீசியவுடன நான் என் முன்னால் நின்றிருந்த குதிரையின் மீது 

தாவி ஏறினேன்.அப்பொழுது எனக்கு ஒரு சிறு மனப்பிரமை ஏற்பட்டது.

பிறகு நான் வேட்டையாடுவதற்காக காட்டிற்குப் போனேன்.ஆனால் அந்தக் குதிரை என்னைத் கொண்டு 

போனது ஒரு பாலைவனத்திற்கு.அங்கு உயிரினங்கள் எதுவுமில்லை.ஒன்றும் முளைத்து வளருவுமில்லை.அங்கு 

நீர் இல்லை.ஆனால் மிகுந்த குளிர் அனுபவப்பட்டேன்.நான் மிகவும் துன்பம் அனுபவித்தேன்.நாள் முழுவதுமே 

அங்கேயே இருந்தேன்.மீண்டும் அந்த குதிரை மீது ஏறி வேறு ஒரு இடத்திற்குப் போனேன்.அந்த இடம் 

அவ்வளவு  மோசமாகவ இல்லை.

அங்கு ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்பொழுது குதிரை ஓடிப்போய்விட்டது.சிறிது நேரத்தில் சூரியன் மறைந்து 

இருட்டு பரவியது. நான் ஒரு மரத்திலிருந்த பொந்தில் போய் ஒளிந்து கொண்டேன்.அந்த இரவு ஒரு யுகத்தை 

விட நீண்டதாகத்தோன்றியது.மெல்ல பொழுது விடிந்ததும்.சூரியன் உதித்தான்.சிறிது நேரத்திற்குப்பின் ஒரு 

கருமை நிறமுள்ள ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள் அவள் கருப்பு  உடையணிந்திருந்தாள்.ஒரு தட்டில் 

உணவை எடுத்து வந்து கொண்டிருந்தாள் அவள்.நான் சிறிது உணவு தரும்படி அவளிடம் 

மன்றாடினேன்.எனக்கு அவ்வளவு பசி.அவள் என்னை அலட்சியப்படுத்தி விட்டு போய்க்கொண்டிருந்தாள் நான் 

அவளை பின் தொடர்ந்து உணவை யாசித்தேன்.கடைசியில் அவள் வாய்   திறந்தாள்.’ நான் உணவு 

தருகிறேன். ஆனால் நீங்கள் என்னை மணம் புரிந்து கொள்ள வேண்டும்.’ நான் ஒப்புக்கொண்டேன்.அவள் 

எனக்கு உணவு தந்தாள்.தன் தந்தையை அறிமுகம் செய்து வைத்தாள்.அவன் அவளை விட பயங்கரமாக 

இருந்தான் . உடன் நாங்கள் மூவருமாக அவர்கள் கிராமத்தை வந்து அடைந்தோம்.அங்கு ஒரு பெரிய விருந்து 

ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த விருந்தில் இரத்தமும் மாமிசமும நிறைந்து வழிந்தது.அவள் என்னை  தன் 

வருங்காலம் கணவன் என்று அறிமுகப்படுத்தினாள்.அவர்கள் என்னை மிகவும் மரியாதையுடன் 

பார்த்தார்கள்.என்னை மகிழ்விக்க அவர்கள் சொன்ன கதைகள் என்னைப் பெரும் 

துயரத்திலாழ்ததியது. ராட்சத்த தனமான ஒரு கோலாகலத்துடன் அவளை நான் மணந்தேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s