யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 132

தினமொரு சுலோகம் 

நாள் 132

தீவ்ரமந்தத்வஸம்வேகாத் பகுத்வால்பத்வ பேத்த:

விளம்பனேன ச சிரம் ந து ஶக்திமஶக்தித:!

तीव्रमन्दत्वसमवेगाद् बहुत्वाल्पत्व भेदत:

विलमबनेन च चिरम न तु शक्तिमशक्तित: ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்: ” அனந்தாவபோதத்தில் மனம் தோன்றிய பொழுது அது

தன்னுடைய சுய சுபாவத்தை  வெளிப்படுத்தியது. மனதால் நீளமானதை

குறுகியதாக்கவும் குறுகியதை நீண்டதாக்கவும் தானாகவே பலதாக பிரியவும், பலதை

ஒன்றாக்கவும் இயலும். ஒரு பொருள் மிகச் சிறியதாக இருந்தாலும் மனம் அதை

தொட்டு விட்டால் பெரிதாக்கி தனதாக்கிக் கொள்கிறது.கண் மூடி திறப்பதற்குள்

எண்ணிக்கையில்லடங்காத உலகங்களை சிருஷ்டிக்கப்பபடாத மனம், அவைகளை அதே நொடியில் இல்லாமலாக்கவும் செய்கின்றது.பல கதா பாத்திரங்களை திறமையாக நம் கண் முன் கொண்டு வரக்கூடிய நடிகனை போல்த்  தான் மனமும்.மனம் பல விதமான பாவங்களைப் அவ்வப்போது கைக்கொண்டு செயல்படுத்துகிறது.

அது ‘ஸத்’ ஐ ‘அஸத்’ஆகவும் ‘அஸத்’ ஐ ‘ஸத்’ ஆகவும் தோற்றுவிக்கிறது.அதனாலேயே இன்ப- துன்பங்களுக்கு உள்ளாகின்றன.தனது உரிமையில் சந்தேகம் கொண்டு, தானாக வந்து சேருவதைக் கூட வலுக்கட்டாயமாக தனதாக்கிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளினால் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது.

கால த்திலுள்ள ஏற்படுகின்ற பருவ மாற்றங்கள் எவ்வாறு மரங்களிலும் செடி கொடிகளிலும் மாற்றங்களை நிகழ்ததுகின்றதோ அது போல் மனதும்,மனோ விருத்திகள் மூலமும் கற்பனைகளை வளர்பபதன் மூலமும் ஒரு பொருளை மற்றொரு பொருளாக தோற்றுவிக்கிறது.காலமும் தூரமும் எல்லாம் தன் கட்டுப்பாட்டில் இருக்கும்படி மனம் பார்ததுக்கொள்கிறது.

“மனம் அதன் கடுமையோ,மந்ததையோ அடிப்படையாகக் கொண்டு  அது உண்டாக்கிய அல்லது மாற்றி அமைத்த பொருள்களின் பெரியதோடு சிறியது ஆன் அளவைப் பொறுத்து காலப்போக்கிலோ, மிகவும் தாமதமாகவோ எதை செய்யவேண்டுமோ அதை செய்கிறது.ஆனால் மனதால் சுயமாக ஒன்றும் செய்ய இயலாது என்பது தான் உண்மை.”

இதை புரிந்து கொள்வதற்காக, இன்னொரு கதை சொல்கிறேன், கேளாத்தன்மை, இராமா.உத்தர பாண்டவம் என்ற நாட்டில் வனப்பகுதிகளில் நிறைய மகான்களுடைய முனிகள் வசித்து வந்தனர்.அந்த ஆட்டின் கிராமாந்திரங்கள் மிகவும் செல்வச் செழிப்புடன் காணப்பட்டன.புகழ்பெற்ற ஹரிச்சந்திரனின் வம்சத்தில் வந்த லவணன் என்ற அரசன் அந்த நாட்டை ஆண்டு வந்தான்.அவன் உயர்ந்த குலத்திலே பிறந்தவனும்,தானங்களில் சிறந்தவனும்,தர்மத்தைக மீறாதவனும் எல்லா வித்த்திலும் அவன் வகித்து வந்த அரச பதவிக்கு மிகவும் பொருத்தமானவனாகவும் இருந்தான்.அவன் தனது எதிரிகளை.எல்லாம் வெற்றி கொண்டு, அவர்கள் மனதிலெல்லாம் அவன் பெயரைக் கேட்டாலும் ஒரு நடுக்கத்தை உண்டு பண்ணுபவனாகவும் இருந்தான்.

ஒரு நாள் அவன் வழக்கம்போல் போல் அரசவைஅயில் அமர்ந்திருந்தான்..அமைச்சர் பெருமக்களும் ஏனையோரும் மன்னனுக்கு மரியாதை செலுத்தி விட்டு அமர்நிருந்தனர். அப்பொழுது அஅரசவையில் ஜால வித்தைகள் காண்பிக்கின்றது ஒருவன் வந்து அரசனை வணங்கி விட்டு,சொன்னான்:” மன்னா, நான் தங்களை மகிழ்விக்கின்றன இப்பொழுது அதிசயத்தைக் காண்பிக்கிறேன்.” அவன் சில் மயில் த்தோகைகளை எடுத்து ,உதறினான் அங்கு ஒரு அழகான குதிரையுடன் ஒரு வீரன் தோன்றினான்.அந்த வீரன் மன்னனிடம் , ‘அந்த குதிரையை தன் காணிக்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் ‘ என்று கேட்டுக் கொண்டான்.ஜாலவித்தைக்காரன் மன்னனிடம், ‘அந்தக் குதிரையில் ஏறி உலகம் முழுவதுமே சுற்றி விட்டு’ வரச் சொன்னான்.அரசனும் குதிரையைப் கண்டார். அவர் கண்களை மூடி அசையாமல். அமர்நதிருந்தார்.அவையிலிருந்த அத்துணை பேரும் பேச்சு மூச்சற்று இருந்தார்கள்.அங்கு பரம சாந்தி நிலவியது.அரசனின் மௌனத்தை கலைக்க யாருக்கும் தைரியமற்ற வரவில்லை.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s