யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 134

தினமொரு சுலோகம்

நாள் 134 

மனம்

ஆக்ருஷ்டமுத்தரதரம் ருதிதம் விபஸ்து

புக்தம் கதன்னமுஷிதம் ஹதபக்கணே ஶு

காலாந்தரம் பஹு மாயாபஹதேன தத்ர

துர்ஆஸனானிகடபந்தகதேன ஸப்யா:!

आक्रुषटमुद्धरतरम् रुदितम् विपस्तु

भुक्तम् कदन्नमुषितम् हतपक्कणे शु

कालान्तरम् बहु मायोपहतेन तत्र

दुर्वासनानिगढबन्धगतेन सभ्या : ।

அரசன் தொடர்ந்து சொல்லலானான்: ‘ உடன்  நான் அந்த காட்டாள ஜாதியஐ சேர்ந்த  ஒருவனைப் போலவே 

உரு மாறி விட்டேன்.என் காட்டாள மனைவி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.அதும் என் துயரத்தை 

அதிகப்படுத்தியது. காலம் உருண்டோடியதில் இன்னும் மூன்று குழந்தைகள் பிறந்தன. நான் அவ்வாறு 

ஆதிவாஸிகளில் ஒருவனாய் கிரகஸ்தனானேன்.மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றி அவர்களுக்கு 

ஆகாரம் கொடுப்பதற்கு வேண்டியதைத் தேடுவதில் காலம் உருண்டோடியது.நான் விறகு வெட்டி 

வாழ்க்கையை நடத்தி வந்தேன். பல முறை மரத்தடியில் இரவைக் கழிக்க வேண்டி வந்தது.குளிர் 

அதிகமானால் மரப்பொந்துகளில் ஏறி பதுங்கியிருந்தேன்.பன்றிக்கறி தான் எனது முக்கிய உணவாக 

இருந்தது. வயதானதும் இறைச்சி வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்.முக்கியமாக விந்திய மலைச்சாரல் 

பிராந்தியங்களில்   நான் வியாபாரம் செய்து வந்தேன்.விற்க முடியாமல் மீதமிருந்த மாமிசத்தை நொறுங்கித்  

துண்டம் போட்டு காய வைத்தேன். அவ்வாறு செய்தது ஒரு அசுத்தமான இடத்தில்.பசி முற்றும்பொழுது ஒரு 

துண்டு மாமிசத்திற்காக மற்றவர்களிடம் சண்டையிட்டேன்.

என் சரீரத்தின் நிறம் கரிக்கட்டையின் நிறத்தைத் போன்றதாகிவிட்டது. பாப கர்மங்களிலீடுபட்டு  ஈடுபட்டு என் 

மனமும் பாபாச்செய்களினால் ஈர்ககப்பட்டது.. ஸத் விசாரங்களும் மற்ற ஜீவிகளிடம் கருணையும் 

என்னிலிருந்து அறவே ஒழிந்து போய்விட்டது.பாம்பு சட்டையை உரித்துப ் போடுவது போல் என்னிலிருந்து 

கருணை என்பது உரிந்து விழுந்து விட்டது.பறைவைகளையும் விலங்குகளையும் வலைவிரித்தும், பொறி 

வைத்தும் பிடித்து துன்புறுத்தினேன்.வெறும் கோவணம் மட்டும் உடுத்திக்கொண்டு பருவ மாற்றங்களையும் 

பொறுத்துக் கொண்டேன்.அவ்வாறு ஏழு ஆண்டுகள் உருண்டோடின.

” தீமைகள் நிறைந்த துர்வாசனைகள் என்கின்ற கயிற்றினால் நான் கட்டப் பட்டிருந்தேன்.அதனால் 

நான் மிகவும் குரூரமானவனாகவே மாறிவிட்டேன். அவைக்குப்  பொருத்தமில்லாத கெட்ட 

வார்த்தைகளை பேசிக்கொண்டும் கெட்ட வழியில் சஞ்சரித்தும் சில நேரங்களில் அழுதுகொண்டும் 

கெட்டுப்போன உணவை உண்டுகொண்டும் காலத்தைக் கழித்தேன். இவ்வாறு நீண்ட காலம் கழிந்தது.”

காற்றில் பறக்கின்ற சருகுகள் போல் நான் அலைந்து திரிந்தேன்.உண்பது மட்டுமே என் வாழ்வின் 

இலட்சியமாயிற்று. அப்படியிருக்கையில் நாட்டில் வரட்சி ஏற்பட்டது.காற்று நெருப்பு போல் 

சுட்டெரித்தது.காட்டில் நெருப்பு படர்நது பிடித்தது.எல்லாம் எரிந்து சாம்பல் மட்டும் தான் 

பாக்கியிருந்தது.மக்கள் பட்டணி காரணமாக இறக்கத்  தொடங்கினார்கள்.பாலைவனத்து பசுமைக்குப் 

பின்னால் ஓடினார்கள்.கறகளை மாமிசத் துண்டுகள் என்றெண்ணி மென்று பார்த்தார்கள். சிலர் பிணங்களைத் 

தின்ன ஆரம்பித்தார்கள்.மற்றும் சிலர் தங்கள் விரல்களை இறந்தவர்களின் இரத்தத்தில் தொட்டு ருசி 

பார்த்தார்கள்.பட்டிணியின் கோர தாண்டவம் எல்லோரையும் பைத்தியமாக அடித்தது.ஒரு காலத்தில் 

பசுஞ்சோலையாக இருந்த நாடு நகரம் இன்று சுடுகாடாக  மாறியிருந்தது.மகிழ்சசிக் குரல்களுக்குப் பதிலாக 

எங்கும் சோகக் கூக்குரல்கள் தான் கேட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s