யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 138

தினமொரு சுலோகம்

நாள் 138

ஆத்மஞானம் அபயம் தருகின்ற ஆயுதம்

ஸர்வம் ஸர்வகதம் ஶாந்தம் ப்ரம்ம ஸம்பத்த்யதே ததா

அஸங்கல்பனஶஸ்த்ரேண ச்சின்னம் சித்தம் கதம் யதா

सर्वम् सर्वगतम् शान्तम् ब्रह्म सम्पद्ध्यते तदा 

असन्कल्पनशस्त्रेण च्च्छिननम् चित्तम गतम् यदा।

வஸிஷ்டர் தொடருகிறார்:” இந்த மனமெனும் பூதத்தை வெல்வதற்கான வழி  சுயமுயற்சி அல்லது 

ஆத்மஞானத்தின் உதவியுடன் சுக சௌகரியங்களுக்கான ஆசைகளை கைவிடுதல் தான். இதற்காக தனியாக 

கடும் முயற்சிகள் எதுவும் தேவையில்லை.குழந்தைகளின் கவனத்தைத் எளிதில் திருப்பி விடுவது போல், 

அதற்கு தகுந்தால் போலுள்ள மனோ நிலையை உண்டு பண்ணுவது மட்டுமே போதும்.அதியான ஆசைகளை 

கை விட முடியாதவன் நாசத்தை நோக்கி பயணிக்கிறான்.ஏனென்றால் ஆசைகளை கை விடுவதன் மூலம் 

மட்டும் தான் நன்மையை நோக்கிச்செல்ல முடியும்.திவீரமான சாதனையால்- தவத்தினால்- மனதை 

வெல்லலாம்.அவ்வாறு, கஷ்டமில்லாமல்,ஜீவாத்மாவான தனி மனித போதத்திற்கு, அனந்தாவபோதத்தில் – 

விசுவ போதத்தில்- பரமாத்மாவில் லயிக்கமுடியும்.அப்பொழுது தனி மனித போதத்தின் வரையறைகள்- 

இயலாமைகள்  இல்லாதாகும்.இது கண்டிப்பாக எளிதில் அடையக்கூடியது தான்.இதற்கு முடியாது 

சொல்கிறவன் மனித உருவிலுள்ள கழுகுகளே.

முக்தி வேண்டுமென்றால் மனோ நிவுருத்தியைத் தவிர வேறு வழி கிடையாது.அதாவது, மனதின் ஆசைகளை 

கைவிடுவதற்கு கடின முயற்சி எடுக்கத்தான் வேண்டும்.மனதை ‘நிர்மூலம்’ செய்வதற்கு சந்தேகத்திற்கு 

இடமில்லாமல் உறுதியான தீருமானம் எடுக்க வேண்டும் .குருவின் உபதேசங்களும்,வேதங்களை 

கற்பதும்,மந்திரங்கள் ஜபங்களை. அனுஷ்டிப்பதும்  உங்கள் தீர்மானத்தை செயலாக்குவதற்கு 

உதவியாகவிருக்கும்; அவ்வளவு தான்.

” அஸங்கல்பம் ( கற்பனை- மனோ விருத்தி நாசம்) என்ற ஆயுதத்தைக் கொண்டு  மனதின் வேரை 

அறுத்தால்த் தான், ஒருவனுக்கு ஸர்வ வியாபியும் பரம ஶாந்தியை அளிக்கக் கூடியவதுமான பரம பதத்தை 

அடைய முடியும்”

தவறான புரிதல்களினுடைய, துயரத்தினுடைய ஸந்ததி தான் ஸங்கல்பம் அல்லது கற்பனை.இவைகளை 

ஆத்மஞானத்தின்.  வழியாக இல்லாதாக்கி விட்டால் அவனுக்கு பரம ஶாந்தி தான்.இது ஏன் 

கஷ்டமானதாகத்தோன்றுகிறது?மந்த புத்தி களால் உருவாக்கப்பட்ட விதிமுறைகள், ஆசார 

அனுஷ்டானங்கள், தலைவிதி, கடவுளின் தீருமானம் என்பதைல்லாம்,ஸங்கல்பங்கள் தான்.  முதலில 

அவைகளையெல்லாம் உதறித்தள்ளு, இராமா. பிறகு சுய முயற்சியால்,ஆத்ம ஞானத்தினால்,மனதை 

‘அமனஸ’ ஆகிவிடு.அனந்தாவபோதத்தில்- பரம புருஷனில் தனி மனித போதம்- ஜீவாத்மா லயனமாகி, 

இல்லாதாகட்டும்.அதற்கு பின் மேலே போகலாம்.

பரம்பொருளுடன் ஐக்கியமாகிவிட்ட உன் மேதா விலாசம், நாசமில்லாத ஆத்மாவில் கலந்து இருக்குமிடம் 

தெரியாமலே போகட்டும்.அவ்வாறு மனதை அடக்கி,எல்லா வேற்றுமைகளும் அழிந்துவிட்டால், மூன்று 

உலகங்களை தன் ஆளுமையில் கொண்டுவர செய்யும் முயற்சிகள் கூட பாழ் வேலையாகத் 

தோன்றும்.இம்மாதிரி ஒரு நிலையை எட்டுவதற்கு வேத ஞானமே, சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளோ 

ஒரு பிரச்சினையே அல்ல.ஆத்மஞானம் மட்டும் தான் முக்கியம்.இதில் என்ன கஷ்டம்? இது கடினம் என்று 

தோன்றினால்,ஆத்மஞானம் இல்லாமல் இந்த உலகில் கஷ்டமில்லாமல் வாழ. முடியுமா? அதும் சிரமமான 

காரியம் தானே? ஒருநாளும் இறவாத ஆத்மாவை அறிந்தவனுக்கு மரண பயம்  உண்டாவதில்லை.பந்து – 

மித்திரங்களின் பிரிவு அவனை பாதிக்காது.’இது நான’, ‘ இது என்னுடையது’ என்கின்ற விசாரங்கள் தான் 

மனம்.இந்த சிந்தனைகளை ஒழித்து விட்டால்,அழித்து விட்டால் மனம் கிடையாது.அது பயமில்லாத ஒரு 

அவஸ்தை.கத்தி போன்ற ஆயுதங்கள் பயத்தை உண்டு பண்ணும் ஆனால் அகங்காரத்தை இல்லாதாக்குகின்ற 

ஆத்ம ஞானம் என்ற ஆயுதம் ‘அபயம் ‘ தான் தருகிறது. பயம்  தராது.

.. 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s