யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 139

தினமொருசுலோகம்

நாள 139

மனதை அரிசியை; முக்தியை நேடு

யத்து சஞ்சலதாஹீனம் தன்மனோ ம்ருதமுச்யதே

ததேவ ச தப:ஶாத்ரஸித்தாந்தோ மோக்‌ஷ உச்யதே !

यत्तु चंचलताहीनम् तन्मनो म्रुतमुच्यते

तदेव च तप:शास्त्रसिदधान्तो मोक्षउच्यते ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” மனம் எந்த எந்த பதார்தங்களின் பக்கம் தன் கவனத்தை திவீரமாக 

செலுத்துகின்றதோ ,அங்கு தனது நாட்டத்தை அடக்குவதற்கான வழியையும் கண்டுபிடிக்கின்றது.ஆனால் 

இந்த அசைவின் திசை அவ்வளவு தெளிவாக இல்லை.சமுத்திரத்தின் மேல் தளத்தில் காணப்படும் அலைகள் 

சில நேரங்களில் சில இடங்களில் வெளிப்பட்டு மறைகிறது போல் மனதின் அசைவும் வெளிப்பட்டு 

மறைகிறது.பனிக்கட்டியும் குளிரும் எப்படி பிரிக்கமுடியாததோ அது போல் மனமும் சஞ்சலமும் 

பிரிக்கமுடியாதது” 

இராமன் கேட்டான் :”மகாத்மாவே, அப்படி மனதை பலவந்தமாக கட்டுப்படுத்த முயல்வது , இன்னும் 

அதிகப்படியான சஞ்சலங்களுக்கும் சங்கடங்களுக்கும் இடையாகாதா?”

 வஸிஷ்டர் சொன்னார்: ” நீ சொல்வது சரிதான்.சஞ்சலங்களில் மனம் அடக்கமல்ல.மனதின் இயற்கையான 

குணம் சஞ்சலம் தான்.அனந்தாவபோதத்தை அடிப்படையாகக் கொண்டு உண்டாகின்ற சஞ்சலங்கள் தான் 

இந்த உலகமாக வெளிப்படுகிறது.இராமா, அது தான் மனதின் சக்தி.

” மனதிலிருந்து இந்த சஞ்சலங்களை நீக்கிவிட்டால் அது ‘இறந்த ‘ மனதாகும்.அது தான் தவம்.வேத 

ஶாஸ்திரங்கள் வெளிப்படுத்துகின்ற முக்தியும் அது தான்.”

ஆகவே சஞ்சலங்களை அழித்துவிடு.மனம் நிர்மலமாகிவிடும். அனந்தாவபோதத்தில் லயித்து விடும்

 மனம் இவ்வாறு அனந்தாவபோதத்தில் லயனம் ஆகும்பொழுது பரம ஶாந்தியும், மனம் விசார விகாரங்களில் 

மூழ்கும்பொழுது துக்கமும் விளைகின்றது.

மனதின் சஞ்சலம் தான் அவித்யை, அஞ்ஞானம். அது தான் வாசனைகளின் உறைவிடம்.நிரந்தரமான விசார 

மார்ககத்தின் மூலம், சுகபோகங்களிலுள்ள ஈடுபாடு அழித்து,விடுதலை பெற வேண்டும்.இராமா, மனம் 

கடிகாரத்தின் நாக்கு போல் ‘ஸத்.,லிரிந்து ‘அஸத்’திற்கும்,போதத்திலிருந்து ஜடத்திற்கும் 

ஊசலாடிக்கொண்டேயிருக்கும்.ஜடவஸ்துவில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டிருந்தால் மனம் ஜடத்தின் குண 

நலன்களை தனதாக்கிக் கொண்டு விடும் .அதே மனம் ஆத்ம விசாரத்தின் மூலம் ஞானவழியில் திரும்பி 

விட்டால் எல்லா ஸங்கல்பங்களையும் துடைத்தெறிந்து விட்டு ,நிர்மலமான போதத்திறகு திரும்பி வந்து 

விடுகிறது.

இயற்கையிலுள்ளதோ, கற்பனையில் உதித்ததோ,ஆன வஸ்துவின் உருவத்தை மனது தனதாக்கிக் 

கொள்கிறது.அதனால் ,இராமா, உறுதியுடன் புத்தியை பயன்படுத்தி,எல்லாம் துக்கங்களிலிருந்தும் 

விடுபட்ட,சந்தேகத்திற்கே இடமில்லாத அந்த நிலையை மனதில் நிறுத்தி தியானிக்கவும்.மனதிற்கு தன்னை 

கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியும்.ஞானிகள் தங்களுடைய உள்ளடங்கிய வாசனைகளை ( அவைகளின் 

கூட்டுத் தொகை தான் மனம்) அவை உதித்தெழும்பொழுதே அழித்து,அவித்யை வெல்கிறார்கள்.முதலில் 

மோஹங்களை தியாகம் செய்.பிறகு, பந்தனம், முக்தி போன்றவற்றையும் மனதிலிருந்து ஒழித்து 

விடு.எல்லாவிதமான கட்டுபாடுகளையும் உடைத்தெறிந்து பூரண முக்தனாகிவிடு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s