யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 140

தினமொரு சுலோகம்

நாள் 140

வாசனைகள்

மா வாகர்த்தா பவ ப்ராஞா கிமகரத்யதயேஹிதே

ஸாத்த்யம் ஸாத்த்யம் உபாதேயம் தஸ்மாத் ஸ்வாஸ்தோபவானக்கா!

मा वाकर्त्ता भव प्राज्ञा किमकर्त्यतयेहिते

सादध्यम् साद्ध्यम उपादेयम तस्मात् स्वास्थो भवानघा ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” மனதின் உபாதைகள், அல்லது வாசனைகள்,உண்மையில்லையென்றாலும் அது 

மனதில் உதிக்கத்தான் செய்கிறது.ஒரே பொருளை இரண்டாக காண்கின்ற ( நிலவு சில நேரங்களில் 

இரண்டாகத் தோன்றும்) ஒரு விதமான மனோ வியாதியால் ஜீவாத்மாக்கள் பாதிக்கப்படுவதுண்டு.ஆகவே 

இம்மாதிரி வாசனைகள் வெறும் மனப் பிரமை தான் என்று புரிந்து கொண்டு அவைகளை அடியோடு விட்டு விட 

வேண்டும். அவித்யையின் தாக்கம் அஞ்ஞானிகளை மட்டும் தான் பாதிக்கும்.ஞானிகளை பாதிக்காது. 

ஞானிக்கு அவை வெற்று வார்ததைகள்- பொருளற்றத வார்த்தைகள்-மட்டுமே.பொருளற்ற வார்ததைகள் 

என்பது மக்கள் பேறு இல்லாத பெண்மணியின் புத்திரன் என்பது போல்த்தான்.மிகஙும் பொருத்தமற்றது தான்.

இராமா, அஞ்ஞானத்தை விட்டொழி.ஞானியாவதற்கு முயற்சி செய்.இரண்டு நிலாக்கள் உணஃடு என்று 

யாராவது சொன்னால் எவ்வாறு அந்த கருத்தை நிராகரிப்பாயோ அது போல்,மனதின் வாசனைகளையும் 

உதறித் தள்ளி விடு.எந்த ஒரு கர்மத்திற்கும் நீ கர்ததா அல்ல.இராமா,பின் எதற்கு நீ கர்த்ருத்துவம் 

ஏற்றெடுக்கிறாய்? இருப்பது ‘ஒன்று மட்டுமே’என்கின்ற பொழுது, யார், என்ன கர்மம் செய்வது?

” நீ நிஷ்க்ரியனாகக் கூடாது கர்மங்கள் செய்யாமலிருக்கக் கூடாது.அப்படியிருந்து என்ன நேடப் போகிறாய் ?

செய்ய வேண்டிய கர்மங்கள் செய்தே தீர வேண்டும்.ஆகவே ஆத்மாவை தேடு; நேடு.”

தனது இயற்கையிலேயே நியோகிக்கப் பட்ட கர்மங்கள் செய்வதால்,அவைகளோடு உனக்கு விருப்போ 

வெறுப்போ இல்லையென்றால்,நீ கர்ததா ஆவதில்லை. நீ ஒன்றுமே செய்யவில்லையென்றாலும்,அப்படி 

‘செய்யாமலிருப்பதில்’ பிடிப்பு வைத்துக்கொண்டிருப்பாயென்றால்,நீ கர்ததா தான்.

பிரபஞ்சத்தை இயக்குவது வாசனைகள் தான்.அது மண்பாண்ட கலைஞனுடைய சக்கரம் போன்று சுழன்று 

கொண்டேயிருக்கிறது.மூங்கில்த்தண்டு போல் உள் வெற்றிடமாகவிருப்பதுதான் வாசனைகள்.நதியில் 

தோன்றும் அலைகளை எவ்வளவு தான் கத்தியானல் அறுத்தாலும் அது மறுபடியும் மறுபடியும் உருவாகிக் 

கொண்டேயிருக்கும்.அது போல்த் தான் வாசனைகளும். அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது.கண்ணுக்குத் 

தெரியாமலிருக்கின்ற அவைகள் மிருதுவாக தோன்றினாலும், கூரான- கத்தியை விட கூரானது.அவைகளை 

புரிந்து கொள்ள இயலாது. அவைகளினால் உண்டாகும் விளைவுகளிலிருந்து தான் அவைகளை 

உணரமுடியும்.ஆனால் ஒருவனது ஆத்ம விசார மார்ககத்தில் அவைகளினால் பயனேதுமில்லை.இந்த 

உபாதைகளினால்த் தான் பிரபஞ்ச சிருஷ்டிகளில் நாநாத்துவம்-( ஒன்றை பலதாக காணுதல்) 

.காணப்படுகிறது.அவைகளுக்கு தனியாக இருப்பிடம் ஒன்றும் கிடையாது.அவை எங்கும் இருக்கும். 

இப்படிப்பட்ட மனோ உபாதைகளை- வாசனைகள் போதத்திலுந்தோ- மேதாசக்தியிலிருந்தோ உண்டானவை 

அல்ல. இருந்து பெரும்பாலும் அவை புத்தியில் அதிஷ்டிதமாக இருப்பதால் போதத்திலிருந்து எழுந்ததாகத் 

தோன்றுகின்றன.அது தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டவையாக இருந்தும், சாசுவதம் என்று 

தோன்றுகிறது.அனந்தாவபோதத்துடனான பழக்கத்தால் அது கர்மோன்முகமாகவும் தோற்றமளிக்கிறது.ஆத்ம 

சாக்ஷாத்காரம் நிகழும்பொழுது இந்த உபாதைகள் – வாசனைகள் முடிவிற்கு வருகின்றன.விஷயங்களிலுள்ள 

ஆஸக்தி தான் ஆசைகளை உரமிட்டு வளர்க்கின்றது.ஆசக்தி இல்லாதபொழுதும் வாசனைகள் நீறுபூத்த  

நெருப்பாக இருந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே அவைகளை வேரோடு பிழுதெறிய வேண்டும்.அது தான் 

முக்திக்கு வழி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s