யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 141

தினமொரு சுலோகம்

நாள் 141

வாசனையின் சக்தி

ஸனிதஅம்பஸ்தனீ சித்ரே ந ஸ்த்ரீ ஸ்திதர்மிணீ யதா

ததைவாகாஶசிந்தேயம் கர்ததும் யோக்யா ந கிஞ்சன !

सनितम्बस्तनी चित्रे न स्त्री स्तिधर्मिणी यघा

तथैवाकारचिन्तेयम् कर्त्तुम योग्यता न किन्चन ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இப்படிப்பட்ட பட்ட வாசனைகளை, அஞ்ஞானத்தை, மனிதன் மிகவும் எளிதாக 

சம்பாதித்து சேர்த்து வைக்கிறான்.அவை சுகம் தருவதாகத்தோன்றினாலும் துன்பம் தான் தருகின்றது.ஆத்ம 

ஞானத்தை மறைப்பதால் சுகம் தருவதாகத் தோன்றுகிறது. லவண மன்னனுக்கு ஒரு மணி நேரம் 

ஒராயுட்காலமாகத்தோன்றியதல்லவா? இந்த மன உபாதை ,வாசனை,தன்னால் சுயமாக ஒன்று செய்ய 

இயலாமல் உள்ளது.கண்ணாடியில் தெரிகின்ற எரிகின்றது விளக்கின் திரி போல் இதுவும் மிகவும் 

உயிரோட்டத்துடன் காணப்படுகிறது.

” ஓவியத்தில் காணப்படும் அழகான ஒரு பெண்மணியால் எவ்வாறு தனது பெண்மைக்குரிய 

கடைமைகளை செய்ய இயலாதோ, அது போல் வாசனைகள் சக்தி வாய்ந்ததாக 

தோன்றினாலும்,அவை தானாக ஒன்றும் செய்ய இயலாமலுள்ளது.”

 ஆகவே வாசனையால் ஞானியை பிரமைக்குள்ளாக்க முடியாது.அது அஞ்ஞானியை 

அடிபணியவைக்கிறது.பாலைவனத்து கானல் நீரைக்கண்டு விலங்கினங்கள் ஏமாறுவது போல் அஞ்ஞானிகளும் 

ஏமாறுகிறார்கள். அறிவாளிகளுக்கு அதன் உண்மை சொரூபம் தெரியும்.மனோபதைகளுக்கு நிமிஷ 

நேரத்து  வாழ்வு தான் உண்டு.வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நதி நிஶசலமாக ( அசையாமல்) 

இருப்பது போல் தோன்றும்.அதே போல் வாசனைகளும்.அதனால் சத்தியத்தை மூட முடிவதால்,தான் உண்மை 

என்று பாவனை செய்கிறது. ஆனால் விசார மார்ககம் மூலம் அறிந்து கொள்ள முயலும்பொழுது பொழுது அதன் 

‘பொய்முகம்’ வெளிப்படுகிறது.வலுவில்லாத மெல்லிய நாரிழைகளை சேர்த்து இணைத்து வலுவான கயிறு 

தயாரிப்பது  போல், வாசனைகள் வலிமை பெறுவது  பிரபஞ்சத்தில் காணப்படும் குணநலன்களல்ததான்.

வாசனைகள் வளர்நதுகொண்டே போவது போல் தோன்றினாலும் அது விளக்கின் திரியின் நுனியில் எரியும் 

நெருப்பு போல்த் தான். அதைப் பிடிக்க முயன்றால் காணாமலே போய்விடும்.ஆனாலும், ஆகாயத்தின் நீல நிறம் 

உண்மை என்று தோன்றுவது போல் வாசனைகளுக்கும் இருப்பு உள்ளது போல்த் தோன்றுகிறது. 

இரண்டாவது நிலவு போல், கனவில் வரும் வஸ்துக்களைக் போல்,அது மனப் பிரமையைத் தான் 

உண்டுபண்ணுகிறது.

அமைதியுடன் ஓடத்தில் போவோருக்கு நதியின் கரை தான் நகருவது போல்த் தோன்றும்.(பகவான் ரமணர் 

இதே போல் ஒரு உதாரணம் சொல்வார்:’ ஓடும் ரயிலில் உட்காரந்திருப்பவர்களுக்கு இருமருங்கிலுமுள்ள 

மரங்கள் எதிர்பக்கம் ஓடிக்கொண்டிருப்பது போல்த் தோன்றும்’)கர்மத்தில் மூழ்கியிருப்பவர்களுக்கு 

பிரபஞ்சமெனும் இந்த  உலகை -ஒரு நீண்ட கனவை -அது காண்பிக்கிறது.பந்தங்கள்,அனுபவங்கள் 

எல்லாவற்றையுமே உண்மையெனத் தோன்ற வைக்கின்றது.

இந்த அவித்யை, அல்லது வாசனைகள் தான் ‘இரட்டை’ மனோபாவத்தை உண்டு பண்ணுகிறது.அதை 

வளர்ககின்றது.அனுபவங்களுக்கும் ,மனோ விசாரங்களுக்குமுள்ள வேற்றுமைகளுக்கும்,பிரித்துப் பார்க்கின்ற 

மனோ பாவத்திற்கும் அதுவே காரணம்..இப்படிப்பட்ட அசத்தியமான நிலைமையைக் குறித்து வெளிச்சம் – 

தெளிவு ஏற்படும்பொழுது, மனம் அசையாமல் நிற்கின்றது.நீரின் ஓட்டம் நிற்கும்பொழுது அது 

நதியல்லாமலாகிவிடுகிறது.”

 இராமன் கேட்டான்:” மகாத்மாவே, கானல் நீரில் காண்கின்ற  நதி ஒருகாலத்திலும் முடிவிற்கு 

வருவதில்லையே? இந்த உலகை இருட்டாக்குகின்ற அஞ்ஞானம் எத்தனை விசித்திரமானது 

இருக்கிறது.ஆசைகள்,(விருப்பு- வெறுப்புக்கள்,) எப்படி அஞ்ஞானத்தை உரமிட்டு வளர்ககின்றது! பகவன், 

இந்த மனோபாதைகள்,வாசனைகள், திரும்பவும் முளைக்காமலிருக்க என்ன வழி ?”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s