யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 142

தினமொரு சுலோகம்

நாள 142

அஞ்ஞானத்தின் அழிவு

நா ஹம் ப்ரஹ்மேதி ஸங்கல்பாத்ஸுத்ருடாத்பத்த்யதே மன:

ஸர்வம் ப்ரஹ்மேதி ஸங்கல்பாத் ஸுத்ருடான்முச்யதே மன: !

ना हम् ब्रह्मेति सन्कलपात्सुद्रुढाबद्ध्यते मन:

सर्वम् ब्रह्मेति सन्कल्पात् सुद्रुढान्मुच्यते मन: ।)

இராமன் கேட்டான்: ” மகாத்மாவே, இவ்வளவு பயங்கரமான அஞ்ஞானமெனும் இருள் எவ்வாறு 

இல்லாமலாகும்?

வஸிஷ்டர் சொன்னார்:”இராமா, நமது கவனம் விளக்கை நோக்கி  திருப்பினால் இருள் இல்லாமல் 

போய்விடும்.அது போல் நமது கவனத்தை ஆன்மாவை நோக்கி திருப்பினால் அஞ்ஞானமும் முடிவிற்கு வந்து 

விடும்.ஆத்மஞானம் தேடுவதற்கு நமது உள்ளிலிருந்து ஒரு அறைகூவல் ( உந்துதல்)வரவேண்டும்.அது வரும் 

வரை, அவித்யை அல்லது இந்த மனோபாதைகள் எண்ணிக்கையற்ற பிரபஞ்சானுபவங்களை உண்டாக்கிக் 

கொண்டேயிருக்கும்.ஒளி என்பது என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு,நிழலே ஆசைப்பட்டால், 

வெளிச்சம்  என்ற ஞானம் உண்டானவுடன் நிழல் இல்லாதாகிவிடும்.அப்புறம் தெரிந்து கொள்வதற்கு நிழல் 

இராது. அது போல் ஆத்ம விசாரத்தினால்,அஞ்ஞானம் நாசமடைகிறது.இராமா, ஆசை தான் 

அஞ்ஞானம்.ஆசைகள் இல்லாதாவது தான் முக்தி.மனதில் சிந்தனைகளை இல்லாதாகும்பொழுது பொழுது 

ஆசைகளும் இல்லாதாகிவிடும்.அப்பொழுது தான் முக்தி சாத்தியமாகும்.இது தான் மனோ நிவ்ரித்தி அல்லது 

மனோ நாசம்.

இராமன் வினவினான்:” மஹர்ஷே , தாங்கள் கூறினீர்கள், ஆத்மஞானம் உண்டாகிவிட்டால் அஞ்ஞானம் 

அழிந்துவிடும் என்று.இந்த ஆத்மா என்றால் என்ன ?”

வஸிஷ்டர் சொன்னார்:”. இராமா பிரம்மாவிலிருந்து புற்கொடி வரை எல்லாமே ஆத்மா தான்..அவித்யை 

என்பது இல்லாத ஒரு அஸத்தியம்.( அஸத்). மனம் என்பது ஒரு தனி வஸ்து அல்ல.ஆத்மாவில்தான் அவித்யை 

எனும் முகமூடியால் திரைசீலையால் விஷயம்-விஷயீ என்கின்ற பாவ பேதங்கள் உளவாகின்றன. அதனாலேயே 

அவைகளை அனந்தாவபோதத்திலிருந்து  வேறாக   காணவேண்டியிருக்கிறது.அது தான் மனம் என்று 

சொல்லப்படுகிறது.இந்த மூடு திரையில் ஆத்மா தான்.

இந்த மறை அல்லது திரை அனந்தாவபோதத்தில் உதயமாகின்ற ஒரு சிந்தனை,ஒரு கருத்து, ஒரு 

எண்ணம்தான் மனம் என்பது . இந்த சிந்தையின் சந்ததி தான் மனம்..இந்த மனதை இல்லாமலாக்குவதற்கும் 

சிந்தனையின் உதவி தேவை.சிந்தனைகளை முடித்து வைப்பதற்கும் சிந்தனை வேண்டும்.

” ‘ நான் பரப்பிரம்மமில்லை’ என்கின்ற என்ற எண்ணம் – ஒரு நம்பிக்கை மனதை கட்டுப்படுத்துகிறது.

‘எல்லாம் பிரம்மம்’ என்பதும் ஒரு சிந்தனை – எண்ணம் தான். அந்த எண்ணம் நம்பிக்கையாக 

உறுதிப்படுகிற பொழுது மனம் முடிவிற்கு வருகிறது”

.நினைப்புக்களும் சிந்தைகளும் பந்தமே; அவைகளின் முடிவு விடுதலையே.ஆகவே மனோ விருத்தியை 

முடிவிற்கு கொண்டு வந்து பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவாய், இராமா. பிறகு உனக்கு இயற்கை 

விதித்துள்ள கர்மங்களை கர்த்ருத்வ பாவம் இல்லாமல் செய்வாய்.

விசாரம் அல்லது எண்ணம் தான் ஆகாயம் நீல நிறமாக உள்ளது என்று தம்மை நம்பவைக்கிறது.அதே போல் 

இந்த உலகை ‘ஸத்’ என எண்ண வைப்பதம் மனம் தான்.ஆகாயத்திறகு நிறமே கிடையாது.ஒளிக்கீற்றுக்களை 

ஒரு எல்லைக்கப்புறம் நம் கண்களால்  காண முடியாததால்த் தான் ஆகாயத்திற்கு நீல நிறம் பூசுகின்றது..அது 

போல் நம்முடைய எண்ணங்களின் குறுகிய எல்லைகள் தான் இந்த பிரபஞ்சக் காட்சிக்கு காரணமாகிறது. 

இராமா, இந்த உலகம் மனதின் பிரமை மட்டுமே.அதைக்குறித்துள்ள எண்ணங்கள் கூட மனதில் எழாமல் 

இருக்கட்டும. ‘நான் மதி மயக்கத்திலிருக்கிறேன்’ என்ற எண்ணம் துயரங்களுக்குக் காரணமாகிறது.’ நான் 

உணர்நதிருக்கிறேன்- விழித்திருக்கிறேன்’ என்ற எண்ணம் ஆனந்தத்திற்கு காரணமாக அமைகிறது.ஆகவே 

எல்லாம் எண்ணங்களே்ஆகவே அவைகளை தவிர்ப்போம் 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s