யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 143

தினமொரு சுலோகம் 

நாள் 143

மனதை விஷயாஸக்தியிலிருந்து விடுவிப்பாய்
தஸ்மான்மனோனுஸந்தானம் பாவேஷு ந கரோதி ய:

அந்தஶசேதன யத்னேன ஸ ஶாந்திமதிகச்சதி !

तस्मान्मनोनुसन्धानम् भावेषु न करोति य:

अन्तश्चेतन यत्नेन स शानतिमधिगचचति ।
:
வஸிஷ்டர் தொடர்ந்தார்: ” மனம் மோகத்தால் நிறைந்ததும், முட்டாள்த்தனமான வண்ணங்களில் 

சுகப்படுவதுமாக இருக்கிறது.  ஆகவே மனம் பிரமையின் பாதிப்புக்குள்ளாகிறது.அதே நேரத்தில் அது 

போதத்தைத் தரக்கூடியதுமாக இருக்கிறது.ஏனென்றால் நமது சிந்தை உயர்ந்த விஷயங்களில் 

மூழ்கியிருந்தால் மனமும் போதத்தை நோக்கித்  திரும்பும்.மனது அவித்யையின் தாக்கத்தில் அகப்பட்டுக் 

கொண்டிருந்தால் சஞ்சலங்களும் சந்தேகங்களும் உறுதிப்பட்டு ஆத்ம சாக்‌ஷாத்காரம் விலகிப்ப் 

போகும்.ஆத்ம சாக்‌ஷாத்காரம் நிகழ்ந்து விட்டாலோ,அவித்யை காணாமலே போய்விடும்.மனம் என்ன 

நினைக்கின்றதோ அதை அடைய வைப்பதற்கு பஞ்சேந்திரியங்களும் தங்களது சகல சக்தியையும் பயன்படுத்த 

சதா சர்வ நேர்முகத்தில் தயாராக நிற்கின்றன.

” அதனால் எவனொருவன் மனதை விஷயங்களின்( வாசனைகளின் தீனியான)  பக்கம் போக 

அனுமதிப்பதில்லையோ அவன் ஆத்ம போத இலாபத்திற்காக முயற்சி செய்வதன் மூலம் பரம ஶாந்தியை 

அடைகிறான்”

 ஆரம்பத்தில் ‘ஸத’ஆக இல்லாதது எதுவும் பிற்காலத்தில் ‘ஸத்’ ஆக மாற முடியாது.ஆதியில் 

இருந்ததும்,இப்பொழுது உள்ளதும், நாளை இருக்கப் போவதும் பரப்பிரம்மம்  மட்டும் தான்.இதைக் குறித்து 

சிந்தித்து தியானத்தில் ஈடுபட்டால், நித்திய சாந்தி பெறலாம்.பிரம்மம் சாந்தியே! யாரும் வேறு எதையும் 

எப்பொழுதும் தியானிக்க வேண்டியதில்லை. சுகம் தேடல் என்ற எண்ணத்தின் வேரை,எல்லாத் 

திறைமைகளையும் பயன்படுத்தி, புத்தியை உபயோகித்து, பிழுது எறியாத வேண்டும்.அஞ்ஞானம் தான் 

முதுமைக்கும் மரணத்திற்கும் காரணம்.ஆசைகளும், விஷயங்களின்பாலுள்ள விருப்பமும் கிளைகள் விட்டு, 

வளர்நது பந்தல்களாக உருமாறுவது, மனதின் உபாதைகள் என்ற வாசனைகளினால்- அதாவது 

அஞ்ஞானத்தினால்த் தான்.இந்த கிளைகள் ,’ இது என் செல்வம்’ ‘ இது என் மனைவி, மக்கள் ‘ என்பன 

போன்றவையே.

இந்த வெறும் காற்றினால் அடைந்த பையான சரீரத்தில் ‘ நான்’ என்று சொல்கின்ற வஸ்து எங்கேயிருக்கிறது, 

இராமா? இராமா, உண்மையில், ‘நான் ‘ ‘எனது’ என்பன போன்ற உணர்வுகளுக்கு இருப்பு ( அஸ்தித்வம் ) 

கிடையாது.ஒரே ஒரு ஆத்மா மட்டும் தான் ஸத்தியம்.அஞ்ஞானத்தின் காரணமாகத்தான் கயிற்றில் பாம்பைக் 

காண்கிறோம் .போதவான்களுக்கு அம்மாதிரியான தப்பெண்ணம் எதுவும் உதயமாவதில்லை.அவர்கள் 

பார்வையில் அனந்தாவபோதம் மட்டும் தான் உண்டு. இராமா, அஞ்ஞானத்தில் தொடர்ந்து இருக்காமல் 

ரிஷியாகப்பார்.இந்த பிரபஞ்சமெனும் காட்சியை உளவாக்கின்ற மனோபாதைகளை அழித்துவிட்டாலும் கூட, 

அஞ்ஞானியைப் போல் இந்த உடல் எனது, நான் இந்த உடல் தான் ,இவைதான் சத்தியம் என்ற பொய்யான 

எண்ணங்களுக்கு இடம் கொடுத்து, துயரமடையாதே.இந்த உடலும் ஆத்மாவும் ஒன்றாக இருப்பதாகவும் 

தோன்றினாலும் அவை வேற்படுத்த முடியாதவையல்ல.சரீரம் இறக்கும் பொழுது ஆத்மா இறப்பதில்லை.

இராமா, இது என்ன அதிசயமுள்ள பார்! மனிதர்கள் பரப்பிரம்மம் மட்டுமே உள்ளது என்ற உண்மையை மறந்து, 

அசத்தியமான அவித்யை  தான் உண்மை என்று நம்புகிறார்கள்..இராமா, அவித்யையின் இருப்ப

குறித்துள்ள மூட நம்பிக்கை உன்னில் வேர் விடாமல் இருக்கட்டும்.உனது போதம் மாசு பட்டால்,அது 

முடிவில்லாத துயரத்திற்கு வழி வகுக்கும்.அஞ்ஞானம் உண்மையல்லவென்றாலும் அதனால் உனக்கு துன்பம் 

பயக்க இயலும்.அவித்யைமினால்த் தான் கானல் நீர் போன்ற பிரமை உண்டாகிறது.ஆகாய மார்ககத்தில் 

செல்வது, பறப்பது, சுவர்க்க-நரக அனுபவங்கள் எல்லாமே அவித்யையின் காரணமாக உண்டாவது 

தான்.ஆகவே ,இராமா, இந்த இரட்டை மனோ பாவத்தை உண்டுபண்ணுகின்ற மனோ உபாதைகளை- 

வாசனைகளை முற்றிலும் தியாகம் செய்துஉவிட்டு ஸர்வ முக்தனாவாய்  .அவ்வாறு ஈடு இல்லாத உன்னத 

நிலையை அடைவாய்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s