யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 144

தினமொரு சுலோகம் 

நாள் 144

மனம் ஆன் கர்ததா; மனம் தான் போக்தா

ஸர்வேஷு ஸுகதுக்கேஷு ஸர்வாஸு கலனாஸு ச

மன: கர்த்ய மனோ போக்த்ய , மானஸிக வித்தி மானவம் !

सर्वेषु सुखदुखेषु सर्वासु कलनासु च

मन: कर्तु मनो भोक्तय,मानसम् विद्धि मानवम् ।

சிறிது நேரம் தியானத்தில் இருந்து விட்டு இராமன் கேட்டான:” மஹர்ஷே,உண்மையில் இருப்பு- 

அஸ்தித்வம்- இல்லாத அஞ்ஞானத்தினால் இவ்வளவு மனச்சஞ்சலங்களை உளவாக்க முடிகிறது என்பது 

மிகவும் ஆச்சரியமாக உள்ளது. உண்மையில்’இல்லாத’ இந்த உலகம் உண்மையில் இருப்பதாக நமக்குத் 

தோன்றுவதும் மிகவும் ஆச்சரியமாகத்தான் உள்ளது.இது எவ்வாறு நிகழ்கிறது என்று மீண்டும் ஒரு முறை 

விளக்குவீர்களாக! லவண மன்னனுக்கு பலவிதமான துயரங்களை நிகழக் காரணம் என்ன? யார் அல்லது எது 

இந்த அனுபவங்களின் போக்தா ? ( யார் அனுபவங்களின் பலன்களை அனுபவிக்கிறார்கள்)”

வஸிஷ்டர் சொன்னார்:” இராமா, போதம்( ஆத்மா) இந்த உடலுடன் ஏதாவது விதத்தில் பந்தப் பட்டிருக்கிறது 

என்ற எண்ணம்  உண்மையல்ல. சரீரம் என்பது போத மண்டலத்தில் ஏற்படுகின்ற ஒரு பிரமையே ! ஒரு கனவு 

தான்! போதம் சைதன்யம் என்ற வேஷம் அணிந்து ஒரு ஜீவனாக உருவெடுக்கிறது.அதனால் ஏற்படுகின்ற 

குறுகிய வட்டத்திற்குள் அடைபடுகின்றது.ஜீவன் தனக்கு கிடைத்த சைதன்ய சக்தியின் உந்துதலால் இகலோக 

வாழ்வில் மூழ்கிக் போகிறது. பூர்வ ஜன்ம கர்ம பலன்களை அனுபவிக்கின்ற , இன்ப- துன்பங்களை 

உணருகின்ற, சரீரத்தை சுவீகரித்துக்கொண்ட ‘ஸத்’  அஹங்காரம், மனம் , ஜீவன் என்றெல்லாம் 

குறிப்பிடப்படுகிறது. சரீரத்திற்கோ, சைதன்யம் கைக்கொண்ட ஜீவனுக்கோ அனுபவங்கள் கிடையாது. 

அஞ்ஞானத்தால் மூடப்பட்டிருக்கும் மனம் தான் அனுபவங்களுடைய போக்தா.

கனவுக்காடசிகள் உண்டாவது உறக்கத்தில் மட்டும் தான்.அதே போல் அவித்யையில் ஆழ்ந்திருக்கும் பொழுது 

தான் மனம் வெளிப்படையாகக் காணப்படுகின்ற இந்த பிரபஞ்சத்தை கற்பனை செய்து 

தோற்றுவிக்கின்றது.உறக்கத்திலிருந்து எழுந்து விட்டால் கனவுகள் மறைந்து போகின்றன.மனம் விழித்து 

எழுந்து விட்டால்- ஞானம். அடைந்து விட்டால், இந்த பிரபஞ்சம் இராது.கனவு போல் மறைந்து விடும்.

மனம், அவித்யை, மனோபாதைகள் ( வாசனைகள்) , தனிமனித போதம் இப்படி பல பெயர்களால் 

அழைக்கப்படும் ஜீவன் தான் எல்லா அனுபவங்களின் போக்தா.சரீரத்திற்கு சுயசைதன்யம் 

கிடையாதாகையால்,சுகமும் அனுபவிக்க முடியாது, துன்பத்தினால் கஷ்டப்படவும் இயலாது..

அவித்யை தான் அஞ்ஞானத்திற்கும்,கவனமின்மைக்கும் காரணம்.ஆகவே அவித்யை தான் சுக- துக்கங்களின் 

போக்தா.

மனம்தான் பிறக்கிறது,அழுகிறது,கொல்கின்றது, போகிறது, வருகிறது, பிறருக்கு துன்பம் 

விளைவிக்கிறது.இந்த சரீரமல்ல இவைகளையெல்லாம் செய்வது.

” சுக துக்கங்களிலும், மனப்பிரமைகளிலும் கற்பனைகளிலும் ஆட்பட்டு எல்லாவற்றையுமே செய்வது மனம் 

தான்.மனம்தான் எல்லாவற்றையும்அனுபவிப்பதும்.மனம் தான் மனிதன்”

லவண மன்னன் ஏன் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்தது என்பதைக்குறித்துக் கூறுகிறேன், கேள். 

ஹரிச்சந்திரனின் வம்சத்தில் பிறந்தவன் லவணன்.

ஒரு நாள் லவணன் நினைத்தான்:’ என் பாட்டனார் ஹரிச்சந்திரன் பெரிய யாகங்களெல்லாம் செய்து , 

மகாத்மாவானார்.நானும் அது போல் நிறைய யாகங்கள் செய்து மகானாகணும்’

அவன் மனதாலேயே யாகத்திற்கு வேண்டிய பொருட்களையெல்லாம் சேகரித்து, மனதிலேயே யாகிறாய் 

கர்மாதிகளெல்லாம் செய்து,ஒரு வருட காலம் தனது தோட்டத்திலேயே அமர்ந்து தனது சங்கலபத்தில் 

யாகத்தை செவ்வனே செய்து முடித்தான்மனதால்யாகம் செய்து முழுமிபித்ததால் அதன் பலனும் அவனுக்கு 

கிடைத்தது.

அதனால் ,இராமா, மனம் தான் கர்ததா; மனம் தான் போக்தா.ஆகவே மனதை முக்தியை நோக்கிச்செல்ல 

செலுத்து.முக்தி கைவரப் பெறுவாய்..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s