யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 146

தினமொரு சுலோகம்

நாள்146

ஞானத்திற்கான ஏழு படிகள்

ஞானபூமி: ஶுபேச்சாக்யா ப்ரதமா ஸமுதாஹ்யத:

விசாரணா த்விதீயா து த்ரிதீயா தனுமானஸா

ஸத்வாபத்திஶ்சதுர்ததா ஸ்யாத்ததோஸம்ஸக்திநாமிகா

பதார்ததாபாவனீ ஷ்ஷ்டீ ஸப்தாஹம் துர்யாகா ஸ்த்யுதா !

ज्ञानभूमि: शुभेच्छाख्या प्रथमा समुदाह्यत: 

विचारणा द्वितीया तु त्रुतीया तनुमानसा

सत्तापत्तिश्चतुर्तथा स्यात्ततोसमसक्तिनामिका

पदार्त्थ भावना षष्टि सप्तमी तुर्यगा स्त्युता !

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, முக்திக்கான  ஏழுபடிகளைக் குறித்து இனி நான் சொல்கிறேன்.அதை 

அறிந்து கொண்டால் நீ இந்த மோஹ வலயத்திற்குள் விழமாட்டாய்

” சுத்தமான இச்சை தான் முதல் படி.இரண்டாவது விசாரணை. மூன்றாவது மனம் சூக்‌ஷமமாக உருவாகின்ற 

நிலை.நாலாவது நிலை ‘ஸத்’ல் மனம் உறுதிப்பட்டு நிலைக்கின்ற அவஸ்தை.ஐந்தாவது, இகலோக 

கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை.வஸ்துநிஷ்டமான அணுகு முறையின் ( விஷய- விஷயீ காட்சி) முடிவு தான் 

ஆறாவது படி.ஏழாவது இதற்கெல்லாம் மேலான நிலை.”

‘ நான் ஏன் இப்படி அஞ்ஞானியாக இருக்கிறேன்? இதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும். மகான்களையும் 

வேத ஶாஸ்திரங்களையும் நாடி  எனக்கு விஷயங்களில் ஆஸக்தி யில்லாமலாக்க வேண்டும.’ இப்படிப்பட்ட 

இச்சை உண்டானால் அது தான் முதல் படி.

அதற்குப் பின் சுயமாக ‘ஸத்’ஐ தேடி விசார மார்ககத்தில் சஞ்சரிப்பது  தான் அடுத்த படி.

விசாரணை மூலம் விஷயங்களில் ஆஸக்தி குறைந்து,மனம் சூக்ஷமமும், சுதாரியவுமாவதும் தான் மூன்றாவது 

படி.

இந்த மூன்றவஸ்தைகளையும் சாதனையின் மூலம் கடக்கும் பொழுது,இந்திரியசுகங்களில் ஆர்வம் குறைந்து  

ஸத் வஸ்துவில் நாட்டம் ஏற்படுகிறது.அது தான் சகஜமான சுபாவம்.இந்த சகஜமான சுபாவம் தலைகாட்டுவது 

தான் நாலாவது நிலை.

இந்த விஷயத்தின் மீது உண்டாகும் அனாஸக்தி திவீரமாகி, ஸத் வஸ்துவில் மட்டும் மனம் உறுதியாக 

நினைக்கின்றது தான் ஐந்தாவது படி.

அவ்வாறு ஆத்மாவில்- ஸத் வஸ்துவில் மட்டும் மனம் நிலைக்கும் பொழுது தன்னுள்ளேயும் வெளியேயும் உள்ள 

‘இரட்டை’  மனப்பாங்கும், பலவிதமான காட்சிகளைக் காண்பதும்  முடிவிற்கு வருகிறது.மகான்களின் 

உந்துதலால் ஆரம்பித்த விசாரணை சுயானுபவமாக மாறுகிறது.அதற்கு பிறகு வேறு உபாதைகளின் தாக்கம் 

இல்லாமல்,வேற்றுமை உணர்வுகளும்,இல்லாமலாகி, ஆத்ம ஞானம் சொரூப சுபாவம் என்று உணரலும், 

இடைவெளியில்லாத அனுபவமாகி விடுகிறது.இது தான் ஏழாவது படி.இதை ‘அதீந்திரிய தலம்’ 

என்கிறார்கள்.இது தான் ஜீவன் முக்தாவஸ்தை.

இதற்குப் பின் தான் சரீர போதமேயில்லாத துரீயாவஸ்தை.இராமா, இந்த ஏழு படிகளைக் கடந்து ஆத்ம 

ஞானம் நேடியவர்கள் மகான்கள்.அவர்கள் முக்தி அடைந்தவர்கள். இன்ப- துன்பங்கள் அவர்களை 

பாதிப்பதில்லை.அவர்கள் கர்மத்தில் ஆழ்நதவர்களாகவோ, நிஷ்காமியமாக கர்மமாற்றுபவர்களாகவோ 

இருக்கலாம்.ஆத்மாவில் ஆனந்தம் காண்கின்ற அவர்களுக்கு,ஆனந்தம் காண்பதற்கு பிறரின் உதவி 

தேவையில்லை.

பரமோன்னதமான இந்த ஏழாவது நிலையை அடைவதற்கு எல்லோராலும் முடியும்.சரீரமுள்ள 

மனிதர்களுக்கும்,சரீரமில்லாத ஜடங்களுக்கும் இது இயலும்.இதற்குத் தேவை ஆத்மஞானம் மட்டும் தான் .

இந்த நிலையை அடைந்தவர்கள் மகான்களே. அவர்கள் எல்லோருக்கும் பிரியமானவர்களே. அவர்கள் 
முன்னால் சக்கரவர்ததிகள் கூட துரும்பிற்கு சமானமே.அவர்கள் இங்கே, இப்பொழுது முகதர்களாக 

வாழ்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s