யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 147

தினமொரு சுலோகம் 

நாள் 147

பரம புருஷன்

த்வத்தாஹந்தாத்மதா தத்தா ஸத்தாஸத்தா ந காசனா

ந க்வசித்பேதகலனா ந பவோ ந ச ரஞ்சனா !

त्वत्ताहन्तात्मता तत्ता सत्तासत्ता न काचना

न क्वचिद्भेदकलना न भवो न च रज्ञना ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்: ” ஆத்மா அஞ்ஞானத்தால் அஹங்காரத்திற்குமள் மூழ்கி தானாகவே பிரிந்து 

நிற்கின்றது. தங்க மோதிரம் , தன்னுடைய ஆதாரம் தங்கம் தான் என்பதை மறந்து, ‘ஐயோ, என் 

தங்கத்தன்மையை இழந்து விட்டேனே!” என்று ஒப்பாரி வைப்பது போல்த் தான் இதுவும்.”

இராமன் கேட்டான்:”  பகவன், இந்த அஞ்ஞானமும் அஹங்காரமும் ஆத்மாவில் முளைக்கின்றது எப்படி?”

 வஸிஷ்டர் சொன்னார்:” இராமா, நம் கேள்விகள் ஸத்தியத்தைக் குறித்து- உண்மையானவைகளைக் 

குறித்ததாக இருக்க வேண்டும.உண்மையல்லாதவைகளைக் குறித்ததாக இருக்கக்கூடாது. உண்மையில் ‘ 

மோதிரம், தங்கம்,எல்லைக்குட்பட்ட அஹங்காரம்’ என்பவையொன்றுமே உண்மையில் 

இருக்கின்றவையல்ல.தங்க வியாபாரி மோதிரத்தை தங்கத்தின்  எடையை அடிப்படையாகக்கொண்டு விலை 

பேசி விற்கிறான். ஏனென்றால் அவனுக்கு அது வெறும் தங்கம் தான் .மோதிரத்தின் ‘மோதிரத்தனமையை ‘ ப் 

பற்றி பேசுவது, அனந்தாவபோதத்தின் எல்லைக்குட்பட்ட நாமரூபங்களைப் பற்றி பேசுவது போல்த்தான்.அது 

மகப்பேறில்லாத பெண்ணின் புத்திரன் என்பது போல் அர்ததமற்றதாகும்… 

உண்மையல்லாதவைகளின் இருப்பும் உண்மையல்ல.அவித்யையில் முளைவிடுவது அவை ஆத்ம 

விசாரத்தினால் இல்லாததாகின்றன.அஞ்ஞானத்தின் காரணமாக முத்துச்சிப்பியை வெள்ளி என அஞ்ஞானி 

நினைக்கிறான். ஆனால் ஒரு நொடி கூட சிப்பிக்கும் வெள்ளிக்கும் தொடர்பு இருந்ததில்லை.அது வெறும் 

சிப்பி தான் என்ற உண்மை மனதில் உறைக்கும் வரை அஞ்ஞானம் அவனை விட்டுப் போகாது.மணலிலிருந்து 

எண்ணையூற்றை எடுக்க முடியாதது போல், தங்க மோதிரத்திலிருந்து தங்கத்தை , தவிர வேறு எதையும் எடுக்க 

இயலாது.அது போல் ‘ஸத்’ வஸ்து ஒன்று தான் உள்ளது. அது தான் அனந்தாவபோதம் அல்லது பிரம்மம். 

ஆகவே எந்த உருவத்தில் பார்த்தாலும் எந்த பெயரில் அழைத்தாலும் அதிலெல்லாம் சுயம் பிரகாசமாக 

ஒளிர்நதுகொண்டேயிருக்கிறது அந்த பிரம்மம் மட்டும் தான்.அதே போல்தான் அவித்யையின் 

காரணமாக,மனப் பிரமையின் காரணமாக, நாம் காணும் பிரபஞ்சமும், பிரபஞ்ச கிரியைகளும் அது 

போல்த்தான் தனக்கென்று இருப்பு இல்லாமலேயே உளவாகின்ற அஹங்காரமும்.ஸத்தியமான ஆத்மாவில் 

அஹங்காரம் இருப்பதில்லை.

அனந்தாத்மாவில் சிருஷ்டியில்லை,சிருஷ்டிப்பவனுமில்லை.உலகமுமில்லை,சொர்ககமுமில்லை.

அரக்கர்களுமில்லை, தேவர்களுமில்லை.சரீரமும் கிடையாது, மூலப்பொருட்களும் கிடையாது.காலமில்லை, 

தேசமில்லை.இருப்புமில்லை, அழிவுமில்லை..’நீ’யுமில்லை, ‘நானும்’ இல்லை. ஆத்மாவுமில்லை, ‘அது’ 

இல்லை.’ஸத்தியம்’இல்லை, ‘அஸத்தியமும’ இல்லை.’பலது’ கிடையாது,தியானம்கிடையாது, சுகம் 

அனுபவித்தல் கிடையாது.இருப்பது பரம சாந்தி மட்டும் தான். அது தான் விசுவம்.அதறகு முதல்- இடை- 

முடிவு கிடையாது.எப்பொழுதும் உள்ளது.மனம் வாக்கு செயல்கள் என்ற எல்லாவற்றிற்கும் 

புறம்பானது.உண்மையில் அனந்தம் தனது அனந்ததையை ( எல்லையில்லாத் தன்மையை ) ஒருக்காலும் 

கைவெடிந்ததில்லை.’அது’ ஒருக்காலும்’இது’ ஆனதில்லை.அது அசைவில்லாத எல்லையில்லாத சமுத்திரம் 

போல் தான். அது சுயம் பிரகாசமான சூரியனைப் போல்த்தான் என்றாலும் அதற்கு கர்மங்களொன்றுமில்லை.

அஞ்ஞானம் காரணமாக பரம புருஷனை வஸ்துக்களைக் பிரபஞ்சமாகக் காண்கிறோம்.ஆகாயம் நிலை 

கொள்வது ஆகாயத்தில்த்தான்.’சிருஷ்டிக்கப் பட்டவை’ யெல்லாம் பிரம்மத்திலேயே நிலை 

கொள்கின்றது.கண்ணாடியில் தெரிகின்ற இரண்டு நகரக் காட்சிகளுக்கிடையிலுள்ள தூரம் 

போல்த்தான்,அருகில், தொலைவில், அங்கு, இங்கு, என்றெல்லாம் நாம் கருதுகின்ற பொய் நினைப்புக்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s