யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 149

தினமொரு சுலோகம்

நாள் 150

ஸத்- அஸத் பந்தம்

அவித்யாத்மதத்த்வஸ்ய ஸம்பந்தோ நோபபத்யதே

ஸம்பந் த: ஸத்யஶானாம் ச ய:ய: ஸ்பு ட: ஸ்வானுபூதித:

अविद्ययात्मतत्त्वस्य सम्बन्धो नोपपद्यते

सम्बन्ध: सद्यशानाम् च य: स्फुट: स्वानुभूतित:|
வஸிஷ்டர் தொடர்ந்தார்:” லவண மன்னன் மோகத்தால் பிரமை பிடித்த போதத்தில் ஒரு அரசகுமாரன் ஒரு 

ஆதிவாசி பெண்ணை மணப்பதாகக் கண்டான்.அதுவே அவனில் தன்னனுபவமாக பிரதிபலித்தது.அது தனது 

அனுபவம் என்றே அவனுக்கு தீருமானமாக தோன்றியது.சிலநேரங்களில் ஒருவன் தனது பூர்வகால 

அனுபவங்களை முற்றிலும் மறப்பதுண்டல்லவா? அவன் அந்த அனுபவங்கள் ஏற்பட்ட பொழுது அது 

சம்பந்தப்பட்ட கர்மங்களுக்காக எவ்வளவு நேரம் செலவழித்திருந்தாலும்அந்த நிகழ்வுகள் தனக்கு 

நிகழ்ந்ததாக தோன்றுவதில்லை.இம்மாதிரியான ஞாபகக்குழப்பங்கள் மனிதனின் ஸஹஜ சுபாவம். முன் 

அனுபவங்கள் கனவுக்காட்சிகளென  இப்பொழுது , தான் பூர்வ காலத்தில் ஆதிவாசி பெண்ணை மணந்ததும் 

அது தொடர்பான சம்பவங்களும், மனப் பிரமையில் காட்சிகளாக விரிந்துள்ளன.விந்திய மலைச்சாரலில 

வசித்து வந்த ஆதிவாஸிகளின் மனதிலும் அதே காட்சிகள் அனுபவப்பட்டிருக்கலாம்.லவண மன்னனுடைய 

மனமும் ஆதிவாஸிகளின் மனமும் பரஸ்பரம் அந்த அனுபவங்களை தங்கள் தங்களது அனுபவங்களாக்கிக் 

கொண்டிருக்கலாம்.நிறைய ஆட்கள் திரும்பத் திரும்ப சொல்வதால் சில விஷயங்கள் உண்மை என்று நம்பப் 

படலாம்.அது போல் ஒரே மாதிரி மோகப்  பிரமை பலரும் ஒரே நேரத்தில் அனுபவிப்பதால்,உண்மை என்று 

தோன்றலாம்.இப்படிப்பட்ட அனுபவங்கள் ஒருவனது வாழ்வின் அம்சமாக அவனே ஏற்றுக்கொண்டதும்  அவை 

தனதான ஒரு உண்மை சொரூபமாக ஸங்கல்பிக்கப் படுகிறது.ஒருவனது போத மண்டலத்தில் ஏற்படுகின்ற 

அனுபவங்கள் தானே இகலோக ஸத்தியம்.

செக்காட்டுவது போல் எவ்வளவு முறை ஆட்டினாலும் மணலிலிருந்து எண்ணை கிடைக்காது.அது போல் 

அவித்யை உண்மை ஆவதும் இயலாத காரியம்.அவித்யையும் உண்மையும் ஒரு பொழுதும் ஒன்றாக 

முடியாது.ஏனென்றால் ஒன்று ஸத்; மற்றொன்று அஸத்.ஒரே இனத்தில்பபட்ட பொருள்களிடையே தான் பந்தம் 

இருக்க முடியும்.போதம் அனந்தமானதினால்த்தான் ( எல்லையில்லாதது) உலகிலுள்ள எல்லாவற்றைக் 

குறித்தும் போதத்திற்கு தெரியும்.விஷயி ( போக்தா ) சுய ஒளியில்லாத விஷயத்தை ( வஸ்துவை) 

ஒளிமயமாக்குகிறது என்பது உண்மையாக இருக்க முடியாது. காரணம் போதம் ஸர்வ வியாபியென்பதால் 

எல்லாமே சுயமாக ஒளி பரப்புகிறது.அதற்கு தனியாக ஒரு பிரக்ஞை தேவையில்லை.போதத்தில் 

அவபோதமுண்டாகும்பொழுது பிரக்ஞை சுயமாக உதயமாகின்றது.அது போதம் ஜடவஸ்துவை 

பார்ப்பதாலில்லை.
விசுவம் என்பது சைதன்ய வஸ்துவும் ஜடவும் சேர்ந்த கலவை என்று சொன்னாலும் அதுவும் 

சரியில்லை.காரணம் அவைக்கிடையே எந்த பொருத்தமும் கிடையாது.எல்லா வஸ்துக்களிலும் போதம் 

நிறைந்திருப்பதால் அதில் தானாகவே ஆத்ம ஞானம் ( அவபோதம்) முளை விட வேண்டும்.பாறாங்கல்லும் 

மரமும் ஜடங்களாக இருப்பதால் அவைகளுக்கிடையே ஒரு பொருத்தம் இருப்பதாக நமக்குத் 

தோன்றும்.ஆனால் அவைகளின் அடிப்படையிலுள்ள மூலப் பொருள்களுக்கிடையே தான் ஒற்றுமை.அந்த 

மூலப்பொருள்களிடையே ஏற்படும் சில மாற்றங்களினால்த் தான் அவை யில் ஒன்று பாறாங்கல்லாகவும் 

இன்னொன்று மரமாகவும் ஆக மாறியுள்ளது.இம்மாதிரி ஒற்றுமை- வேற்றுமைகள் நமது நாவின்  ருசி 

வித்தியாசங்களிலும் நாம் பார்க்கிறோம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s