யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 151

தினமொரு சுலோகம்

நாள் 151

ஜீவன் முக்தன்

அபரிஞாயமானைஷா மஹாமோஹப்பிரதாயினீ

பரிஞாதா த்வனந்தாக்யா ஸுகதா ப்ரம்மதாயினீ !

अपरिज्ञायमानैषा महामोहप्रदायिनी

परिज्ञाता त्वनन्ताख्या सुखदा ब्रह्मदायिनी।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” மகான்களுடைய ஸத்ஸங்கத்தாலத் தான் இந்த முடிவில்லாத அஞ்ஞான 

ஓட்டத்தை- அவித்யையின் தாக்கத்தை, தடுத்து நிறுத்த முடியும்; கடந்து செல்ல முடியும்.அப்படிபட்ட 

ஸத்ஸங்கத்திலிருந்து எந்த எந்த வஸ்துக்கள் நமது விசார மாரக்கத்திற்கு உதவும்’ எதை 

ஏற்றுக்கொள்ளலாம்,எதை ஒதுக்க வேண்டும் என்ற பகுத்தறிவு நமக்கு உண்டாகும். அவ்வாறு முக்திக்கான 

தூய ஆர்வம் நம்மில் முளைக்கும் . இது இன்னும் திவீரமான விசார மார்ககத்திற்கு நம்மை இழுத்துக் 

செல்லும்.அந்த நிலையில் மனம் சூக்‌ஷமமாகும். அதில் குடியிருக்கின்ற உபாதைகள் ( வாசனைகள் ) 

வலுவிழக்கும்.அப்பொழுது சுத்த ஞானத்தில் உறுதிப்படுகிற ஜீவாத்மா ஸத்தை நோக்கித் திரும்பும்.அதோடு 

வாசனைகள் முற்றிலும் அற்றுப்போய் அனாஸக்தி ஸஹஜமாகின்றது.கர்மங்களுடனுள்ள பந்தமும், கர்ம 

பலன்களிலுள்ள ஆசைகளும், வேண்டாத சந்தேகங்களும் முடிவிற்கு வருகிறது.ஸத் வஸ்துவில் உறுதிப்பட்டுப் 

போன தரிசனம் ( காணுதல் ) ,  ( சத்திய தரிசனம் )  அஸத்திய வஸ்துக்களுடன்  தனக்கு பந்தம் உள்ளது என்ற 

எண்ணத்தை வலுவிழக்க செய்கின்றது. ஸத்தியஞானம் பெற்றவன், இகலோகத்தில் வாழும் பொழுதும், 

கர்மங்கள் ஆற்றும் பொழுதும்,அவன் செய்ய வேண்டிய கர்மங்களையெல்லாம் செவ்வனே செய்து 

முடிக்கிறான்.உறக்கத்தில் சரீர கர்மங்கள் ( மூச்சு விடுவது, உண்ட உணவை ஜீரணிப்பது போன்ற கர்மங்கள்) 

எப்படி நிர்வகிக்கப் படுகின்றதோ, அது போல் உலக ரீதியான கர்மங்களை நிறைவேற்றும் பொழுது, அவன் 

லௌகீக சுக போகங்களைக் குறித்து சிந்திப்பதில்லை.இப்படி நிறையக் காலம் கழிந்தால் அவன் முக்தி 

பதத்திற்கு பொருத்தமானவனாகிறான்.எல்லா அவஸ்தகளுக்கும் மேலானவனாகிறான்.அவன் ஜீவன் 

முக்தனாகிறான்.

வாழும் பொழுதே முக்தனாகிறவன், லௌகீக இலாபங்களில் சந்தோஷவானோ, நஷ்டங்களில் 

வருந்துபவனோ ஆகமாட்டான். இராமா, உன்னிலுள்ள வாசனைகள்- உபாதைகள் உன்னை 

அலட்டுகிறது.உன்னை பலஹீனனாக்குகிறது. ஸத்தியத்தைக் அறிவதற்கு முயற்சி செய்.ஆத்மாவை, 

அனந்தாவபோதத்தை அறிவதன் மூலம்,உன்னால் துயரங்களை, மோகத்தை, ஜனன- மரணங்களை , சுக- 

துக்கங்களை , கடந்து செல்ல முடியும்.

ஆத்மா ஏகவும், பாகம் வைக்க முடியாததும்  ஆக இருப்பதால் உனக்கு சொந்தமும் கிடையாது; பந்தமும் 

கிடையாது. அதனாலேயே  உண்மையில்லாத பந்தங்கள் மூலமுண்டாகின்ற துன்பங்களுமில்லை.ஆத்மா 

ஒன்றன்றி வேறில்லாதில்லாததால்,அதற்கு ஆசைப்படவோ, அடையவோ ஒன்றும் கிடையாது.ஆத்மாவிற்கு 

மாற்றம் கிடையாது; மரணம் கிடையாது. மண்பானை உடைந்து போகும்பொழுது அதனுள்ளிருக்கும் ஆகாயம் 

உடைவதில்லை.மனோபாதைகள்அழிந்து பரமோபசாந்தி கைவரும்பொழுது அஞ்ஞானியை மோகத்தின் 

வசமாக்கும் மாயக்காட்சிகளின் முடிவாயிற்று.

இந்த மாயயை சரியாக புரிந்து கொள்ளாமலிருக்கும் பொழுது தான்,அது பெரிய, பெரிய, மோகப் 

பிரமைகளுக்கு காரணமாகிறது.அதை சரியாகத் புரிந்து கொண்டால் , அது எல்லையில்லாதது என்று புரிந்து 

கொண்டால், அதுவே எல்லையற்ற மகிழ்சசியின் உறைவிடமான ஆத்ம சாக்‌ஷாத்காரத்திற்கு 

காரணமாகும்.வேதத்தை விளக்குவதற்காகத் தான் ஆத்மா, பிரம்மம், என்றெல்லாம் வார்த்தைகளை 

பயன்படுத்துகிறோம்.உண்மையில் ஸத்திய வஸ்துவாக ‘ஒன்று’ மட்டுமேயுள்ளது.அது ஶுத்த அவபோதம் 

தான்.அதறகு சரீர பாவம் கிடையாது.அறிந்து கொண்டாலும் அறிந்து கொள்ளவில்லையென்றாலும், 

சரீரமிருந்தாலும் இல்லையென்றாலும் அது தான் ‘ஸத்’.

நாம் காண்கின்ற துயர அனுபவங்களெல்லாம்,சரீரத்தின் அனுபவங்கள் தான்.ஆத்மாவாகட்டும் 

இந்திரியோற்பன்னமான  சுக துக்கங்களின் எல்லைகளிலோ அதன் குறுகிய கோட்பாடுகளிலோ, 

அடங்குவதில்லை. ஆகவே அதற்கு துயரங்களில்லை.ஆசைகள் இல்லை.உலகம் ஆத்மாவில் பிரதிபலித்துக் 

காண்பது ஆத்மா ஆசைப்பட்டதாலோ, அதன் விருப்பத்தாலோ அல்ல.

இராமா, நான் இது வரை கூறியதைக் கேட்ட நீ, இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டி,ஸ்திதி.விவரங்களைக் 

குறித்து உனக்கிருந்த தவறான அபிப்பிராயங்கள் எல்லாம் நீங்கி, உன் போத மண்டலம் இரட்டை மனோபாவம் 

இல்லாதாகி மாசற்றதாகியுள்ளது.

( உற்பத்தி. பிரகரணம் என்ற மூன்றாம் பாகம் இத்துடன் முடிவுற்றது.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s