யோகவாஸிஷ்டம்என்ற என்ற மஹாராமாயணம் 153

தினமொரு சுலோகம்

நாள் 154

இதுவரை …..தொடர்கிறது

முமுக்ஸு பிரகரணம் 

இராமனின் விவேகம் செறிந்த விளக்கங்களையும் ஸத்தியத்தைக் அறிந்துகொள்ள அவன் வெளிப்படுத்திய 

ஆர்வத்தையும் கேட்ட குருமார்கள் அளிக்கும் விளக்கங்கள் தான் இந்தப் பிரகரணத்தின் சாரம்.முதலில் 

விசுவாமித்திர முனிவர் இராமனது ஞானம் பெறுவதிலுள்ள ஆர்வத்தைப பாராட்டிவிட்டு, முனிசிரேஷ்டரான 

வஸிஷ்டரிடன் புதல்வரும் ஞானியுமான சுகருக்கும் இந்த சந்தேகங்கள் எழுந்தன என்றும் அவரது 

தந்தையளித்த விளக்கங்களில் திருப்தியடையாத சுகரை  ராஜரிஷியான ஜனகரிடம் அனுப்பியதையும் 

குறிப்பிட்டு விட்டு சுகரின் கதையைக் கூறுகிறார்

ஜனகரின்  அரண்மனையில் தனக்கு ஏற்பட்ட அவமதிப்புக்களைக் கண்டு துயரமடையாமலும்,, 

உபசாரங்களையும் மரியாதைகளையும்  கண்டு உவகையடைமலும், பொறுமையாக  காத்திருந்து ஜனகரிடம் 

தன் சந்தேகங்களைத் கேட்கிறார் சுகர்.  அவை  ஏறக்குறைய இராமன் கேட்ட கேள்விகளே.

“எப்படி இந்த உலகம் உண்டாயிற்று? எப்படி அமைதியாகி முடிவிற்கு வருகிறது? இதற்கு யார் மூலகாரணம் ? 

எப்படி உலக மாயை தோன்றுகிறது? எப்படி அது வளர்கிறது? எப்படி அது அழிகிறது? ” 

சுகரின் கேள்விகளே அவருக்கு இந்த ஞானம் பெறுவதிலிருந்த ஜிஞ்ஞாஸையைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் 

கூறியது போல் , தெரிந்து கொள்ள வேண்டும என்ற ஆர்வம் உள்ளவனுக்குத்தான் ஞானோபதேசம் 

செய்யவேண்டும்  என்பதில் உறுதியாக இருந்த. ஜனகர் சுகரின் முமுக்ஸுதவத்தில் திருப்தியடைந்து 

ஆத்மோபதேசம் நல்கியதை விசுவாமித்திர்ர் இந்த இடத்தில் விளக்குகிறார்.

ஜனகரிடன்  உபதேசங்களின் சாரம் இது தான்

‘ பிரபஞ்ச மாயை ஆத்மாவிலிருந்து உண்டாகி உயிர் பிரிந்தவுடன் ஆத்மாவில் கலந்து விடுகிறது. 

மாயையினாலும அதனால் உண்டாகின்ற ஆசைகளினாலும் எந்த பலனும் இல்லை. ஆன்மா பிரம்மத்திலிருந்து 

உருவாகி பிரம்மத்திலேயே லயித்து விடுகிறது. ஆகவே எல்லாமே பிரம்மம் தான்’

அதற்கு பின் விசுவாமித்திர்ர் வஸிஷ்டரிடம் இந்த த்த்துவங்களை பிரம்மாவிடமிருந்து கேட்ட கதைகளின் 

உதவியுடன் இராமனுக்கு விளங்குமாறு வேண்டுகிறார்.வஸிஷ்டரும் விளக்க ஆரம்பிக்கிறார்

‘ நாம் காணும் புற உலகம் உண்மையானது தான் ஆனால் அது நமது மனதிலுளவாகும் ஆசைகளினால் 

உருவானதும் அநித்தியமானதும் ஆக உள்ளது.ஆசைகளை களைந்து விட்டால் பிரம்மத்தில் லயித்து விடலாம். 

இதை முக்தியென்று சொல்கிறோம்.

 மனிதனுக்கு இரண்டு மார்க்கங்கள் உள்ளன. ஒன்று நிவ்ரித்தி மார்ககம்; இன்னொன்று பிரவிருத்தி மார்ககம். 

நிவ்ரித்தி மார்ககம் என்பது மனதை உள்முகமாக திருப்பி ஆத்ம விசாரணை செய்து ஆத்ம ஞானம் நேடுவது. 

பிரவிருத்தி  மார்ககம் உலக வஸ்துக்களில் பற்று உண்டாக்கி ஆசைகளை வளர்ததி துன்பத்தைத் தரும்.

மனிதர்கள் பூர்வ ஜன்ம வாசனைகளின் காரணமாக பிரவிருத்தி மார்ககத்தில் செல்கிறார்கள்.வாசனைகள் 

இரண்டு விதம் ஒன்று மலின வாசனைகள், இன்னொன்று சுத்த வாசனைகள் மலின வாசனைகளை சுய 

முயற்சியால் அழித்து, மனதை சுத்த வாசனைகளில் ஒருமுகப்படுத்தினால் நாம் நிவுருத்திமார்ககத்தில் செல்ல 

இயலும்.. இது எல்லோராலும் முடியும்.அப்படி செய்வதன் மூலம் பிறப்பு- இறப்பு எனும் சக்கர சுழற்சியிலிருந்து 

நாம் விடுபட முடியும். அதை செய்யாமல் விதியை குறை சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ‘

இப்படிக் கூறிவிட்டு வஸிஷ்டர் முக்திக்கான நான்கு மார்ககங்களை உபதேசிக்கிறார்.அவை முறையே சாந்தி, 

விசாரம், சந்தோஷம், சத்சங்கம்.என்பவையாகும்.

இந்த நான்குமே ஆன்மிக ஞானம் தேடுவதற்கான மார்ககங்களே.ஆன்ம ஞானம் பெற்று விட்டால் ஜனன 

மரணங்களிலிருந்து விடுதலை கிடைத்து விடும்.உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு  விளைவிக்கும் 

இந்திரியங்களின் பந்தனத்திலிருந்து தப்புவதற்கு ஆன்ம ஞானம் ஒன்றே வழி.

ஆன்ம ஞானம் பெற்றவர்கள் மனதைக்கொண்டு மனதை கட்டுப்படுத்தியவர்கள.

விருப்பு வெறுப்பு அற்ற நிலையில், வேண்டுதல் ,வேண்டாமை இல்லாததால்,நன்மை, தீமை யாவற்றையும் ஒரே 

நிலையில் காண்பர்.வந்ததை ஏற்று, வாழ்க்கையை அமைதியாக வாழ்வார்கள்.தங்களது கர்மங்களை 

செவ்வனே நிறைவேற்றுவார்கள்.

இப்படிப்பட்ட சாந்தியை அடைய வேண்டுமென்றால்,தன் அறிவால் எதையும் பகுத்துப் பார்த்து உண்மையை 

உணர்தல் அவசியம்.இது தான் விசார மார்ககம்.ஆகவே அறியாமையால் உண்டாகும் சோம்பலைத் தவிர்த்து 

ஆன்ம ஞானத்தை நாட வேண்டும்.

மனத்திருப்தி தான் சந்தோஷம்.உள்ளதில் திருப்திப்படுகின்ற மனம் அமைதியடையும். விசார மார்ககத்திற்கு 

இந்த போது மென்ற மனம் மிகவும் அவசியம்.எதிலும் பற்றின்மையும் திருப்திகரமாக வாழ  வழி வகுக்கும். 

அதுவே ஆத்ம ஞானத்திற்கும் வழி காட்டும்.

சத்சங்கம் என்பது நல்லோர் சேர்க்கை. நல்லவருடன் சேர்க்கை வைத்துக்கொளவதால் ஞானம் மலரும்; 

சந்தோஷம் அதிகரிக்கும்; மனச்சாந்தி பெறுவோம்.’

இப்படி விவரமாக உபதேசங்கள் நல்கி இராமனின் ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்ற ஆர்வத்தை – 

ஜிஞ்ஞாஸையை-முமுக்த்ஸவத்தை தூண்டி விடுகிறார்கள் மஹரிஷிகள் இந்த பிரகரணத்தில்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s