யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 152

தினமொரு சுலோகம்

நாள் 152

இதுவரை……

யோகவாஸிஷ்டம் என மோக்ஷ சாஸ்திரத்தின் ஓரு பாதியில் கடந்து விட்ட நிலையில் நாம் வந்த பாதையை 

சற்றே திரும்பி பார்த்தால் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் 

 அறிமுகம்

பிரம்மனின் கட்டளைப் படி அவரின் பிரிய சீடன் பரத்வாஜன் வால்மீகி முனிவரைச் சந்தித்து, மானுடர்களுக்கு 

ஜனன மரணங்களிலிருந்து முக்தியடைவதற்கான  மார்க்கத்தை தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக் 

கொண்டார் அதைத் தொடர்ந்து வால்மீகி மஹரிஷிக்கும் பரத்வாஜருக்கும் இடையில் நடந்த சம்வாத 

ரூபத்தில் இயற்றப்பட்டது தான் பிரஹத்யோக வாஸிஷ்டம் என்ற இந்த நூல் . வஸிஷ்டர் இராமனுக்கு செய்த 

உபதேசங்களைக் வால்மீகி முனிவர் மிகுந்த காவிய நயத்துடன் முப்பத்திரண்டாயிரம் சுலோகங்களாக 

வழங்கியுள்ளார் முக்திக்கான நூலை.

இதில் வரும் இராமனை நாம் ஶ்ரீராமச்சந்திரமூர்தத்தியாகக் காணக்கூடாது.இந்த நூலில் வரும் இராமன் 

பகவத் அவாரம் என்று கருதினால் குழப்பம் தான் மிஞ்சும்.  இதில் வரும் இராமன் வேறு எந்த ஒரு 

பாலகனையும் போல் வேத சாஸ்திரங்களை கற்றறிந்த ஒரு பிரம்மச்சரி பாலகன் ;ஆனால் பிரபஞ்சத்தில் 

நிகழும் சம்பவங்களைக் கண்டு குழம்பி வாழ்வில் பிடிப்பு விட்டுப் போகும் நிலையிலுள்ளது ஒரு 

பாலகன்.செய்வதறியாமல் திகைத்து நிற்கும் பாலகன். அவனுக்கு வஸிஷ்ட முனிவர் எனும் குரு, எல்லாம் 

கற்றுத் தெளிந்த குரு, பிரம்ம சத்தியத்தை தன்னுள் தரிசித்த குரு அளிக்கும் உபதேசங்கள்  இந்த நூலின் 

கரு. 

இம்மாதிரி இக்கட்டான நிலைமை எல்லோருக்கும் வாழ்வின் ஏதோரு கட்டத்தில் எதிர்கொள்ள வேண்டி 

வருவதுண்டு. ஆகவே இது எல்லோருக்குமான நூல்.

ஓரளவிற்கு புத்தி பக்குவம் அடைந்த எல்லோரும் இந்த நூலை படித்து தெளிவடைய முடியும்.இந்த பிரபஞ்ச 

இருப்பிற்குக் காரணமான ஸத்தியம் தான் பிரம்மம் என்றும் பிரம்மத்தில் சிருஷ்டிக்கப்பபட்டதாக காணும் 

இந்த ஜகத் தாற்காலிகமான பிரமை தான் என்றறிதலும் தான் அஞ்ஞானத்தின் முடிவு.அந்த உண்மையை 

விளக்குவது தான் இந்த நூலின் நோக்கம்.

ஆதியும் இடையும் முடிவுமில்லாத, பலதாக பிரிக்க முடியாத பிரம்ம சொரூபம் தான் அவபோதம் –

ஆத்மா.அந்த ஆத்மாவில் மாயையினால் உளவாகின்ற ஒரு பிரமை தான் ஜகத் அல்லது பிரபஞ்சம். இந்த 

சத்தியத்தை வெளியிலிருந்து தேடுபவனால் கண்டு பிடிக்க முடியாது.உள்முகமாக மனதை திருப்பி, விசார 

மாரக்கத்தில் சஞ்சரிப்பவனால் மட்டுமே அந்த சத்தியத்தை கண்டடைய முடியும்.இந்த அகண்ட போதம் தான் 

பிரபஞ்சம்; ‘அதுவன்றி வேறொன்றில்லை ‘ என்று விசாரித்து அறிந்து கொள்பவனுக்கு ஆத்ம சாக்‌ஷாத்காரம் 

உளவாகிறது.

‘ நான் பந்தனத்திலிருக்கிறேன். எனக்கு மோசனம் ( முக்தி) வேண்டும்’ என்று நினைப்பவன் இந்த நூலினால் 

பயனடையும் முடியும். ஒன்றுமே அறியாஅவனுக்கு இந்த நூல் தேவையில்லை; அவன் ‘ தான் பந்தனத்தில் 

பட்டிருக்கிறோம் ‘ என்று கூட அறியாதவன் முக்தியடைய முடியாது.

நூலின் கட்டமைப்பு

இந்த நூல் ஆறு பிரகரணங்களாக தரப்பட்டுள்ளது 

அவை முறையே:

1. வைராக்கிய பிரகரணம்

2 . முமுக்ஸு பிரகரணம் 

3. உற்பத்தி பிரகரணம்

4. ஸ்திதி பிரகரணம்

5. உபசமனப் பிரகரணம்

6. நிர்வாணப் பிரகரணம்.


வைராக்கிய பிரகரணம்

இந்த பிரகரணத்தில் இகலோக வாழ்வில் விரக்தி- பிடிப்பின்மை ஏற்பட்டு, அமைதியில்லாத இராமன்- 

பதினைந்து வயதே நிரம்பிய இராமன், தனது தந்தை தசரத மன்னனிடம், குருமார்கள் வஸிஷ்டர், 

விசுவாமித்திரர் போன்ற மஹரிஷிகளின் கேள்விகளுக்கு, தன் பிடிப்பின்மைக்கான காரணத்தை விளக்கிக் 

கூறுகிறான்.

உலக வாழ்வின் நிலையாமை

‘உலகில் யாவும் மாறும் தன்மையுடைது.நிலையற்றது.இந்திரியங்களால் உண்டாகும் துன்பங்களுக்கு 

வாடிக்கையாளர் கொண்டிருக்கிறேன்.உலகில் நிரந்தர இன்பம் பயக்கும் வஸ்து எதுவும் இல்லை. பிறப்பது 

துன்பப்படும் படுவதற்கும் இறப்பதற்கும் தானா?’

அழியக்கூடிய செல்வம்

“செல்வமே எல்லா பிரச்சினைகளுக்கும் துன்பங்களுக்கும் அடிப்படை காரணம்.செல்வம்ஓரிடத்தில் 

நிலைத்து நிற்காது.செல்வமுடையவன் மனதில் மாசு படிந்து. விடும்.செல்வம் தகுதியில்லாதவர்களிடம் 

சென்றடையும்.செலவமுள்ளவர்களின் மனதில் மாசு படிந்து விடுகிறது.”

மனித வாழ்வு

“மனித வாழ்க்கை அனித்தியமானது. தோன்றி மறையும்பொழுது கூடியது.மரணம் எப்பொழுது சம்பவிக்கும் 

என்று யாராலும் கூற இயலாது.”

அகங்காரம் 

மனிதனின்பெரிய எதிரி அகங்காரம்.இது மனதின் அறியாமையால் தோன்றி எங்கும் 

பரவியுள்ளது.அகங்காரத்தால்வாழ்வில் எல்லாத்துன்பங்களும் உண்டாகின்றன.அகங்காரத்தால் 

பொருள்களை அடைய வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது.நாம் செய்யும் யாகங்கள் கூட அகங்காரத்தால் 

செய்யப்படுகின்றன.

எல்லா விபத்துகளும்,பதற்றங்களும்,பிரச்சினைகளும்,தீய முயற்சிகளும்,அகங்காரத்திலிருந்து 

உண்டாகின்றன.ஆகையால் அகங்காரம் ஒரு வியாதி.எப்பொழுதும்நிறைந்துள்ள அகஙாரத்தை 

மனதிலிருந்து நீக்கி தூய ஆன்மாவை அடைய வேண்டும்.

மனம்

மனம் அலைபாய்கினளது.அது கட்டுக்கடங்காத்து. இன்பம் கூட அதில் நிலைத்து நிற்பதில்லை. மனம் தான்

எல்லாத் துன்பங்களுக்கும் கெடுதல்களுக்கும் மூல காரணம். மனம் நாச மடைந்தால் இந்த பிரபஞ்சம் 

முடிவிற்கு வரும்.

ஆசை

ஆசையும் கொபமும் மனிதனின் நாசத்திற்கு வழி வகுக்கின்றன. ஆசை அடங்கிய நேரமில்லை.

உடம்பு

மனித உடம்பு சதை, எலும்பு, இரததம்,நரம்புகளாலானது.இன்பத்திலும் துன்பத்திலும் மாறி மாறி 

கஷ்டப்படுகிறது.இது அகங்காரத்தின் இருப்பிடம்.

பருவமாற்றங்கள்

குழந்தைப்பருவத்திலிருந்து முதுமை வரை வித விதமான துன்பம் மனிதனை வாட்டுகிறது.

காலம்

காலம் எல்லாவற்றையும் அழித்துவிடுகிறான். இதற்கு யாரும் விலக்கல்ல.

விதி

இந்த உலகம் மாறிக்கொண்டேயிருக்கிறது. இன்பமும்துன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. 

எதுவும் நிரந்தரமில்லை.இந்த உடம்பு கூட நமதில்லை.எல்லாவற்றையும் தீருமானிப்பது காலனெனும் விதி.

அநித்தியமான இன்பம்தரக்கூடியது ஏதாவது உண்டா? அதை அடைவது எப்படி? இல்லையென்றால்  நான் 

ஏன் செயலாற்ற வேண்டும?

இவ்வாறு தனது விராகதைக்கு விளக்கம், கூறி, ஆணித்தனமாக கேள்விகளை எழுப்பிய இராமனுக்கு பதில் 

சொல்கிர்றாகள் முனி சிரேஷ்டர்கள்.அது அடுத்த பிரகரணம்- முமுக்ஸு பிரகரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s