யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 154

தினமொரு சுலோகம்

நாள் 154

இதவரை………தொடர்கிறது

உத்பத்தி பிரகரணம்

மாமுனிவர் வஸிஷ்டர் இராமனின் விராகதையை கைவிடும்படியும், ஆத்ம ஞானம் தேடுவதிலுள்ள ஆர்வத்தை 

வளர்ததுக் கொண்டு விசாரமார்ககத்தில் ஈடுபடும்படியும் வலியுறுத்தினார். இராமன் கேட்ட கேள்விகளுக்கு 

விளக்கமாக பதில் கூறுகிறார் இந்த பிரகரணத்தில்.

‘ இராமா, வேத சாஸ்திரங்களிலும், சிரவணம்,மன்னம் போன்ற மார்ககங்களின் மூலமும், விவேகபூர்வமான 

விசார மார்ககதின் மூலமும பிரம்மத்தைக் காண முயலுபவன் பிரம்மத்தை தனுள்ளேயே காண்பான்.மேலும் 

நாம் காணும் உலகம் பிரம்மத்தின் படைப்பாகவிருந்த பொழுதும் நாமும்அதன் அங்கம் தான்

என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இனி இந்த பிரபஞ்சம் எப்படி உண்டாயிற்று, வளர்நதது, அழிகின்றது என்பதைப் பார்ப்போம் ‘ என்ற 

முன்னுரையுடன் துவங்குகிறது இந்த பிரகரணம்.

இந்த பிரகரணத்தில் ‘பந்தம்’எனபது எப்படி உண்டாகிறது, அதிலிருந்து எப்படி விடுபடுவோம் என்பதையும் 

விளக்குகிறார் வஸிஷ்டர்.

பிரம்மம், தானே எந்த காரணமும் இல்லாமல் உயிர்களை உண்டுபண்ணுகிறது.

பிரம்மம் தனித்து நிற்கும்பொழுது பிரகிருதி என்றும் அழைக்கப்படுகிறது.சரீரம் எடுத்து அதனுள் 

நிலைகொள்ளும் பொழுது ‘ஜீவன்’ ‘ஆத்மா’ ‘புருஷன்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஜீவன் சிந்திக்கும் திறன் பெற்று ‘மனம்’ ஆகிறது.

மனம் பலவித ஆசைகள் கொண்டு உலகை பார்க்கிறபொழுது  உலகைஐப் படைகிறது.ஆபரணங்கள் எந்த 

உருவில் காணப்பட்டாலும் எல்லாம் அடிப்படையில் தங்கம் தான்  என்பது போல் ஜீவன் எந்த உருவம் 

எடுத்தாலும் அடிப்படையில் அது பிரம்மமே.

உலகில் நாம் காண்கின்ற வஸ்துக்கள்-அசையும்,அசையாப் பொருள்கள்- எல்லாம் மனதால் சங்கல்பபிக்கப் 

படுகின்றவையே. 

ஆகவே உலகமும் உலகில் காணப்படும் காட்சிகளும் தூக்கத்தில் காணும் கனவு போன்றதே.

பார்பபவனுக்கும் பார்ககப்படும் பொருளுக்கும் ஏற்படுகின்ற தொடர்பு பந்தம் அல்லது பற்று 

எனப்படுகிறது.பந்தம் என்பது சங்கல்பத்தில் உதயமாகும்போது பொருள்களில் மனம் லயிப்பதற்கு ஏது 

உண்டாகிறது.

மனதிலிருந்து சங்கல்பங்கள் அழியும்பொழுது பொருட்களும் இல்லாதாகிவிடும்.பொருட்களே 

இல்லையெனகின்ற பொழுது பந்தமும் இல்லாதாகி விடுகிறது.

பந்தம்அற்றுப் போவது தான் முக்தி.

பிறகு , வஸிஷ்டர் ஆகாச ராஜனின் கதையின் மூலம், ‘பிரம்மம் தன்னைத் தானே உத்பத்தி செய்து 

கொண்டது. அதற்கு மனமும் கிடையாது, கர்ம வினைகளும் கிடையாது. எப்படி சிலந்தி தன் உடலிலிருந்து 

வலையக பின்னி விட்டு, வலையிலிருந்து விட்டு உட்கார்ந்து கொண்டு மற்றவர்கள் வலையில் சிக்குண்டு 

கிடப்பதைக் காண்கிறது, அது போல் பிரம்மமும் தன்னிச்சையாக பிரபஞ்சத்தை படைத்துவிட்டு அதிலுள்ள 

சேதன – அசேதன வஸ்துக்கள் மாயையில்  சிக்குண்டு கிடப்பதை சாக்‌ஷி மாத்திரமாக காண்கிறது.

இதிலிருந்து மாறுபட்டு மனிதனுக்கு ‘மனம்’ என்று ஒன்று உண்டு. அது தான் எல்லா செயல்களுக்கும் 

அடிப்படை.மனம் ஆசைப்படுவது ஜாக்ரத்தில்- விழித்திருக்கும்பொழுது-செயலாக உரு 

எடுக்கிறது,உறக்கத்தில் கனவாக தோன்றுகிறது, சுஷுப்தியில் நீறு பூத்த நெருப்பு போல் அமைதியாக 

இருக்கிறது. விழித்து எழுந்திருக்கும்பொழுது மறுபடியும் உயிர் பெறுகிறது.

மனம் இருக்கும் இடம் குறிப்பிட்டு கூற முடியாது.அது எல்லா அங்கங்களின் வழியாகவும் வெளிப்படுகிறது.

மனதின் செயல்களை ஞானிகள் அவித்யா, மாயை, அஞ்ஞானம் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

மனம் தான் எல்லா இன்ப-துன்பங்களுக்கும்  காரணம் இன்னொரு விதத்தில் சொன்னால் மனம் தான் 

இன்பம் என்றும் துன்பம் என்றும் வேற்றுமை படுத்திப் பார்க்கின்றது.

உலகம் மனதின் திறனால் படைக்கப்பட்டது.உலகம் மனோமயமானது.கனவில்காண்பது , மனதில் 

தோன்றுவது, ஆசைகள்.கற்பனையில் தோன்றுவது ,எண்ணங்கள்,மனப்பதிவுகள்,ஞாபகங்கள் எல்லாம் 

மனமே.

உலகில் பார்ககப்படும் பொருள்களை பார்பபவன் மனதிலிருந்து நீக்கிவிட்டால்,மனம் சிந்தனைகளற்று 

இருக்கும் . இந்நிலை கைவல்ய பதம் எனப்படுகிறது. இதுதான் மனோ நிவ்ரித்தி.

இருப்பது எல்லாம் பிரம்மம் என்ற ஒன்றே.நாம் காணும் உலகம் – கனவிலாகட்டும, நினைவிலாகட்டும் – அது 

மனதின் சிருஷ்டி தான்்.

இதை விளக்குவதற்காக வஸிஷ்டர் லீலாவின் கதையை விவரிக்கிறார் .

ஆனால் மனம் உண்மையல்ல; ஆன்மாவை உண்மையானது; ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றே  என்பதை தெளிவு 

படுத்துவதற்காக சூசிகா என்ற அரக்கியின் கதையை விவரிக்கிறார்

ஆன்மாவின் உதவியாலேயே மனம் பல விதமாக செயல் படுகிறது.நம்முடைய மனமே பல 

பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது.நாம் பலவற்றை தவறாக புரிந்து கொள்கிறோம்.ஆகையால் 

மனதிலுள்ள அறியாமையை நீக்கினால் குற்றமற்ற பிரம்மம் வெளிப்படும்.

இந்தக் கருத்தை விளக்குவதறகாக ஐந்தவனின் கதையைக் கூறுகிறார் மாமுனிகள் .எப்படி மன உறுதியால்

எப்படி பிரம்மாவாகவேஆனார்கள் என்பதை விளக்குகிறது இந்தக் கதை.

பிறகு இந்திரன்-அகலிகையின் கதையைக் கூறி மனதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது். உடல் 

வேறு;மனம் வேறு என்று எடுத்துரைக்கிறார்.

காட்டில் சிக்கித் தவிக்கும் , தன்னைத் தானே இம்சித்துக்கொள்ளும் ஒருவனின் கதையைக் கூறி, மனம் 

தானே பலவிதமான கற்பனைகளில் ஈடுபட்டு தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்கிறது.இல்லாத ஊரில் 

பிறக்காத மூன்று அரச குமாரர்களின் கதையைக் கூறி, மனம் எதை நினைக்கிறதோ அதை எளிதில் நம்பி 

விடுகிறது. அதுவே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்கிறார்.

லவண மன்னனின் கதையின் மூலம் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் ஒரு நிமிடம் மனம் பிறழும் பொழுது, 

கற்பனையில் துன்பங்களை அனுபவிக்க நேருகிறது என்பதை தெளிவு படுத்துகிறார்.

உத்பத்தி பிரகரணத்தின் முடிவில் வஸிஷ்டர் கூறுகிறார்:

” பிரம்மத்திலிருந்து மனம் தோன்றுகிறது.

மனம் தன் சங்கல்பத்தில் உலகைக் காண்கிறது.

பார்பபவன், பார்ககப்படும் பொருள், பார்ததல் என்ற முப்புடிமங்கள் உண்டாகிறது.

பார்பபவனுக்கும் பார்ககப்படும் பொருளோடு தொடர்பு உண்டாகும் பொழுது பந்தங்கள் தோன்றுகின்றன.

பந்தம் பற்றாக மாறி, வாசனை என்ற கயிற்றால் கட்டிப்போடும்பொழுது சம்சாரம் தோன்றுகின்றது.

சம்சார பந்தம் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகிறது.

மனதில் சஞ்சலமில்லாமல் பகுத்தறிவின் உதவியோடு உண்மை நிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பார்ப்பவன் , பார்க்கும் செயல்,பார்ககப்படும் பொருள்,மூன்றும் ஒன்றாகிய நிலையில் பிரம்மம் 

விளங்கும்.விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளையும் தாண்டிய துரீயாவஸ்தை நிலையை 

நிரந்தரமாக அடைய வேண்டும்.அதற்கு நீ முயல் வேண்டும், இராமா!’ என்று முடிக்கிறார் வஸிஷ்ட 

மாமுனிகள்.

இத்துடன் உத்பத்தி பிரகரணம் முடிகிறது.


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s