யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 155

தினமொரு சுலோகம்

நாள்  155

காண்டம் நான்கு. – ஸ்திதி பிரகரணம்

ஆரம்பம்

ஸாகாரவடதானாவங்குரா: ஸந்தி யுக்திமத்

நாகாரே தன்மஹங்காரம் ஜகதஸ்தி த்யயுக்திகம் !

साकारवटधानावन्कुरा: सन्ति युक्तिमत्

नाकारे तन्महन्कारम जगदस्ति त्ययुक्तिकम् ।
வஸிஷ்டர் தொடர்ந்தார்: ” பிரபஞ்ச சிருஷ்டியின் உண்மையை இதுவரை விளக்கிக் கூறினேன்.இனிமேல் 

சிருஷ்டிக்கப்படாத  பிரபஞ்சத்தின் இருப்பும் அதன் பரிபாலனமும் எவ்வாறு நிகழ்கிறது என்பதை கூறுகிறேன்.

உலகமென்கின்ற மாயக்காட்சி இருக்கின்றவரையில் தான் இந்த பிரபஞ்சம் ‘ தெரிந்த’ வஸ்துவாக நில 

நிற்கின்றது. கனவுக்காடசிகள் எவ்வளவு தூரம் சத்தியமோ அவ்வளவு தூரம் தான் இந்த பிரபஞ்சமும் 

சத்தியம்.ஏனென்றால், ஒரு காரணமும் இல்லாமல் சூன்யத்திலிருந்து எந்தவொரு கருவியின் 

உதவியுமில்லாமல் , சிருஷ்டிகர்ததா என்று யாரும் இல்லாமல்  ‘உருவானது’ தான் இந்த பிரபஞ்சம்.அதாவது , 

பகல் கனவு போல் அது அசத்தியம். வானவில்  போல் , வெற்றிடத்தில் வரைந்த ஓவியம் அது. .எங்கும் படர்நது 

விரிந்து  எல்லாவற்றையும் மறைக்கின்ற மூடுபனி போல் எங்கும் இருக்கிறது அனால்  கையால் பிடிக்கலாம் 

என்று பார்த்தால் அங்கு ஒன்றும் இராது.சில அறிவாளிகள் இந்த உலகை ஜடம் என்று சொல்கிறார்கள்.வேறு 

சிலர் உலகை சூன்யம் ( வெற்றிடம்) என்றும்,மற்று சிலர் இதை அணுக்களின் சேர்க்கை என்றும் 

சொல்கிறார்கள்.

இராமன் கேட்டான்:” விசுவம் கருவாக இருக்கும் பொழுது பரம புருஷனில் நிலைகொள்கின்றது என்றும் 

அடுத்த யுகாரம்பத்தில் வெளிப்படுகின்றது என்றும் கூறினீர்களே! இது எப்படி ? இந்த நம்பிக்கையுடையவர்கள் 

ஞானிகளாக அல்லது அஞ்ஞானிகளா?.”

வஸிஷ்டர் சொன்னார்:” நாம் பார்க்கின்ற பிரபஞ்சம் பிரளயத்திற்குப் பின் பரமபுருஷனில் நிலை கொள்கின்றது 

என்று நம்புகிறவர்கள் இந்த விசுவம் உண்மை என்று நம்புகிறவர்கள்.ஆனால் அது முற்றிலும் அறிவிற்கு 

புறம்பானது- அஞ்ஞானம் தான் இராமா.இந்த அரைகுறையான  பார்வை குருவும் சீடனும் மோகவலயத்திற்குள் 

அடைபட்டு கிடக்கிறார்கள் என்பதற்கான ருசுக்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒரு மரத்தின் விதையில் சூக்‌ஷமமாக இருப்பது வருங்காலத்தில் உருவாகப் போகின்ற  மரம்தான்.ஆனால் அது 

ஒரு சாத்தியக் கூறு தான்.விதை, முளை,செடி, மரம், எல்லாம் ‘அறிவு’ எனும் நிலையில் கையாளப்படும் 

வஸ்துக்கள் தான்.மனதாலும் இந்திரியங்களாலும் உணரக்கூடிய விஷய பதார்ததங்கள் தான் இவை.

மனஸாலும்,இந்திரியங்களாலும் உணர முடியாதவை எப்படி உலகத்திற்கு ‘விதை’ யாக முடியும்?.  

ஆகாயத்தை விட சூக்‌ஷமமானதின் உள்ளில் விசுவத்தில் ‘விதை’ இருக்க முடியும்? இவ்வாறிருக்க, பரம 

புருஷனிலிருந்து எப்படி விசுவத்தின் பீஜம் தோன்ற முடியும்? சூன்யத்தில் ( ஒன்றுமில்லாதது வெற்றிடத்தில் ) 

ஏதாவது நிலைகொள்ளும் முடியுமா? சூன்யத்தில் விசுவம் நிலை கொள்கின்றதென்றால் அதை ஏன் பார்க்க 

முடியவில்லை? காலியான பாத்திரத்தில் மரம் முளை விட முடியுமா? பிரம்மமும், விசுவமும் 

எதிர்வினையானவை என்றால் எப்படி ஒன்றாக ஒரே நேரத்தில் இருக்க முடியும்? சூரியன் 

பிராகாசிக்கும்பொழுது இருட்டு இருக்க முடியுமா?
மரம் ஒரு சிறு விதையின் உள்ளில் இருக்கிறது என்பதில் தவறில்லை. ஏனென்றால் அவை இரண்டிற்கும் 

ஸ்தூல உருவங்களுண்டு.ஆனால் ‘உருவமேயில்லாத பிரம்மத்தில் விசுவத்தின் பீஜம் விதை உள்ளது ‘ என்பது 

பகுத்தறிவிற்கு பொருத்தமாக இல்லையே? ,ஆகவே  ” பிரம்மத்திற்கும் விசுவத்திற்கும் ‘காரிய- காரண’ 

தொடர்பு இருக்கிறது ” என்று கூறுவது முட்டாள்ததனமாகத்தான் தோன்றுகிறது.உண்மையில் பிரம்மம் மட்டும் 

தான் உள்ளது. நாம் காண்கின்ற இந்த பிரபஞ்சமும்,பிரம்மம் தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s