யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 156

தினமொரு சுலோகம்

தாள் 156

சிருஷ்டி என்பது இல்லை

இத்யஸ்தத்தோ ந ஸத்யுஷ்டேர் அஸத்யுஷ்டேஶ்ச வா க்வசித்

அஸ்யாஸ்தாப்யுதிதம் புத்தம் நாபுத்தம் ப்ரதி வானக்க!

इत्यस्तन्तो न सद्युष्टेर्  असद्युषटेश्च वा क्वचित्

अस्यास्ताभ्युदितम् बुद्धम नाबुद्धम् प्रति वानघ।
வஸிஷ்டர். தொடர்ந்தார் :” இராமா, பிரளய காலத்தில்,பரப்பிரம்மத்தில் விசுவம் ஒரு விதையாய் நிலை 

கொண்டிருந்ததுவென்றால்  பிரளயத்தின் முடிவில் அது மீண்டும் விசுவமாக தோன்ற வேண்டுமென்றால் 

அதற்கு இன்னொரு காரணம் உண்டாகணும்.அப்படியொரு காரணம் உளவாகவில்லை என்பது மக்கள்பேறு 

இல்லாதவளின் மகள் என்று சொல்வது போல் பொருத்தமற்றதாகும். ஆகவே அடிப்படையிலேயே பிரம்மத்தின் 

சொரூப சுபாவம் அது தான் என்று கொள்வது கொஞ்சம்கூட பொருத்தமாக இருக்கும். பிரளயத்திற்குப் 

பின்னும் அது அப்படியே தொடருகிறது.பரப்பிரம்மமும் விசுவமும் காரண- காரிய பந்தத்தால் 

பந்திக்கப்படவில்லை. சிதாகாசத்தில் , அனந்தாவபோதத்தில் ,கோடானுகோடி விசுவங்கள் உள்ளன. அது 

எப்படியென்றால்  பூட்டிப்  போட்டிருக்கும ஒரு இருட்டு அறையில் கூரையிலுள்ள ஒரு சிறு துவாரம் வழியாக 

வருகின்ற சூரிய ஒளியில் அறையில் அந்த ஒளிக்கீற்றின் பாதையிலுள்ள தூசிகள் பாடி  பறப்பது போல் என்று 

சொல்ல வேண்டும். அறைக்கு வெளியே சூரிய ஒளியாலுண்டாகின்ற பிரகாசமாக இருக்கும் வெட்ட வெளியில் 

தூசுக்கள் காணாமலே போய் விடுகின்றன.அது போல் பரமோன்னதமான அத்துவைதபோதத்தில் விசுவங்கள் 

எனும தூசுக்கள் தெரிவதில்லை.ஒருவனது சுபாவம் அவனிலிருந்து வேறல்ல. அது போல் விசுவம் 

அவபோதத்திலிருந்து- பரமனிலிருந்து வேறல்ல. 

பிரளயத்திற்குப் பின் விசுவத்தை சிருஷ்டிப்பதற்காக ஒரு சிருஷ்டிகர்ததா வேண்டியிருந்தது. அது தான் 

மனோவிருத்தி- சிந்தை- ஸ்மருதி- ஞாபகம். ஞாபகத்தில்- மனதில் உண்டான சிந்தைகள் தான் நாம் 

காண்கின்ற இந்த உலகிற்கெல்லாம் காரணம். ஆனால் அந்த சிந்தைகளோ ‘ ஆகா, இதோ 

ஆகாயத்திலொரு அப்பளம்’ என்பது போல் அசத்தியமாக இருக்கிறது.ஆனால் இந்த மனோவிருத்திகள் 

முளைத்ததற்கு – ஞாபகங்களுக்கு எந்த அடிப்படையும் கிடையாது. ஏனென்றால், கடந்து போன யுகத்தின் 

பிரம்மத்தின் தேவதைகளெல்லாம் முக்தியடைந்தவர்களாயிற்றே?!அவர்களுக்கு ஏது, பூர்வ ஜன்ம ஞாபகங்கள்? 

ஞாபகங்கள் உள்ள எவருமேயில்லாத பொழுது ஞாபகங்கள் மட்டும் எப்படியிருக்க முடியும்? போதத்தில் 

உதயமாகின்ற பூர்வகால அனுபவங்களின் தொடர்புடையவையோ தொடர்பில்லாதவையோ ஆன்ம 

ஞாபகங்கள் விசுவமாக உருவெடுக்கின்றன. அவ்வாறு அனந்தாவபோதத்தில் திடீரென தோன்றுகின்ற உலகம் 

யதேச்சையாக உண்டான சிருஷ்டி தான் 

இப்படித் தோன்றிய பிரத்தியட்சமாகிற உலகம், விசுவ புருஷன் என்ற பெயரில் திவ்ய உருவம் எடுத்தது.அந்த 

விசுவம் ஒரு சிறு அணுவில் மூன்று உலகங்கள், அவைகளின் அங்கங்களான காலம், தூரம், கர்மம், 

பொருட்கள், பகல் , இரவு, என்கின்ற அங்கங்களுடன் காணப்படுகிறது. அந்த ஒரு அணுவிலேயே அனேகம் 

அணுக்கள் உண்டு; அதோடு எண்ணிக்கையற்ற உலகக் காட்சிகளும் உண்டு. ஒரு சலவைக் கல்லில் 

செதுக்கின சிற்பத்தின், கையில் ஒரு சிற்பம்; அந்த சிற்பத்தின் கையில் அதே போன்ற இன்னொரு சிற்பம்.; 

இப்படி முடிவில்லாத எண்ணிக்கையிலடங்காத சிற்பங்கள்.அது போல்த் ஆன் இந்த ஜகத்..

ஆகவே இராமா, ஞானியோ, அஞ்ஞானியோ, மனிதனின் கண்களிலிருந்து  காட்சிகள் 

மறைவதில்லை.ஆனால் ஞானி இவைகளை பிரம்மனாகவே காண்கிறான் என்பது மட்டும் தான் 

வித்தியாசம்.அஞ்ஞானியோ இவைகளை உலகமாக காண்கிறான்.சூன்யத்தில் காண்பதை ‘ தூரம்’ .என்றும் 

அனந்தாவபோதத்தில் காண்பதையும் ‘சிருஷ்டி’ என்றும் சொல்கிறார்கள் . சிருஷ்டி என்பது வெறும் 

பொருளற்ற வார்த்தை மட்டுமே.அதற்கேற்ற உண்மை நிலை இல்லை என்பதே உண்மை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s