யோகவாஸிஷ்டம் அன்றைய மஹாராமாயணம் 159

தினமொரு சுலோகம்

நாள் 159

பார்ககவோபாக்கியானம் 2

விவித ஜன்மதஶாம் விவிதாஶய: ஸமனுபூய ஶரீரபரம்பரா:

ஸுகமதிஷ்டதஸௌ ப்ருகுநந்தனோ வரனதீஸுதடே த்ருடவ்ருக்‌ஷவத் !

विविध जन्मदशाम् विविधाशय: समनुभूय शरीरपरम्परा:

सुखमतिष्ठदसौ भ्रुगुनन्दनो वरनदीसुतटे द्रुडव्रुक्षवत् ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” சுக்கிரன் தன்னுடைய பழைய வரலாற்றை அடியோடு மறந்து விட்டான்.கொஞ்ச 

நாட்கள் இந்திர சபையில் சுற்றி வந்த பிறகு, தான் மோகம் கொண்ட அப்சரஸைக்  குறித்து விசாரித்து 

தெரிந்து கொண்டான்.அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டதும் தங்களையே மறந்து போனார்கள் .

ஆசைகளை நிறைவேற்றுவது சொர்ககத்தின் தனித்தன்மையல்லவா! தான் அப்சரஸைக் சந்தித்த நந்தவனம் 

இருட்டாகட்டும் என்று சுக்கிரன் நினைக்கவே நந்தவனம் முழுவதுமே இருள் பரவியது.அங்கு கண்ட ஒரு 

மாளிகையில் சுக்கிரன் பிரவேசித்தான்.பின்னாலையே அந்த அப்சரஸும் வந்து சேர்ந்தாள்.அவள் 

சொன்னாள்:’ நாதா, தங்கள் மீதுள்ள ஆசையால் என் உள்ளம் வெந்து நீறாகிறது.முட்டாள்கள் தான் காதலை 

கேவலமாக எண்ணுவார்கள்.ஞானிகள் அப்படி எண்ணமாட்டார்கள்.மூன்று உலகங்களின் அதிபர் பதவி கூட 

காதலை வயப்பட்டவர்களின் சேர்ககைக்கு ஈடாகாது.தங்கள் இதயத்திலே எனக்கு இடம் தருவீர்களா’ என்று 

கேட்டுக் கொண்டு அவள் முனிகுமாரனின் மார்பில் சாய்ந்தாள்..சுக்கிரன் நீண்ட காலம் அந்த அப்சரஸுடன் 

சுவர்ககத்தில் வாழ்ந்து வந்தான்.இதற்கிடையில்் அவன் நேடிய புண்ணியமெல்லாம் நஷ்டமடைந்தது.அவனும் 

அப்சரஸும் சுஙர்ககத்திலிருந்து பூமியில் வந்து விழுந்தார்கள்.

அவர்களது சூக்‌ஷம சரீரங்கள் பனித்துளிகளாக பூமியில் விழுந்தது. அந்த பனித்துளிகளில் ஒன்று விழுந்தது 

ஒரு கோதுமை மணியில்.. .அந்த கோதுமையை உண்ட ஒரு மஹா பிராமணனால் அவனது மனைவியின் 

கருவில் பீஜமாக உருவானான்சுக்கிரன் .அவன் அந்த பிராமணனின்  புத்திரனாகவும் அப்சரஸ் ஒரு மானாகவும் 

பிறந்து வளர்நதார்கள்.சுக்கிரன் அந்த பெண்மானில் ஒரு மானுட புத்திரனை ஜனிப்பித்தான்.அந்த புத்திரனிடம் 

அவனுக்கு அதியான பிரியம் உண்டாயிற்று. அந்த புத்திரனைக் குறித்துள்ள கவலையாலும் அவனுடைய 

வருங்காலம் எப்படியிருக்குமோ என்ற ஆதியிலுமே சுக்கிரன் விரைவில்முதுமையடைந்தான்.சுகானுபவங்களில் 

ஆசை நசிக்காமலையே சுக்கிரன் மரணமடைந்தான்.நசிக்காத அந்த ஆசைகள் காரணமாக அவன் மறு 

ஜன்மத்தில் ஒரு அரசனாகவும் பிறந்தான்.அந்தப் பிறவியில் மிகுந்த ஆன்மீக ஈடுபாட்டுடனும் தவங்கள் 

செய்தும் அவன் வாழ்க்கையை கழித்தான். அடுத்த பிறவியில் அவன் ஒரு மகாத்மாவாக பிறந்தான்.இப்படி பல 

பிறவியெடுத்தான்

அவ்வாறு ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவிக்கு என – பல பல சரீரங்கள் – கைக்கொண்டு  

அவைகளையெல்லாம் கைவிட்டு – அந்த சரீரங்களுக்கேற்றார்ப் போல் சுக துக்கங்களை அனுபவித்து ஒரு 

நதியின் கரையில் கடுமை தவத்திலாழ்நதான் சுக்கிரன் எனும் பிரகு குமாரன்.”
.

அவ்வளவும் நிகழ்வது தன் தந்தையின் முன் அமர்ந்து தியானம் செய்யும் முனிகுமாரனின் மனதில். இப்படி நீண்ட 

காலம் தந்தையின் முன்னால் அன்னாகாரமின்றி தவத்திலாழ்நதிருந்தான்.அவன் உடல் காய்ந்து சுருங்கி 

வெறும் எலும்பும் தோலுமாக மாறியது. அந்தக் காலத்தில் சுக்கிரனின் மனம் -சாந்தியை இழந்து-பல பல 

காட்சிகளை பின்னிக் கொண்டிருந்தது.அதன்படி அவன் பல பல ஜன்மங்கள் – முன் விவரித்த படி- எடுத்து , 

பிறப்பு- இறப்பு எனும் சம்சார சக்கர சுழறசியில் அகப்பட்டு சுவர்ககத்திற்கும் பூமிக்குமாக சஞ்சரித்தும், 

தவத்தின் அமைதியான வாழ்க்கை வாழ்நதும்,உழன்றுகொண்டிருந்தான்.அவைகளில் 

மூழ்கியிருந்தால் அவனுக்கு எல்லாமே உண்மையில் நிகழ்ந்ததாக உறுதியாக நம்ப வேணஃடியிருந்தது.அவரது 

உடலோ எல்லா விதமான பருவ மாற்றங்களுக்கும் ஆட்பட்டு காய்ந்த சருகு போலாயிருந்தது.ஆகவே  நர 

மாமிச பட்சிணிகள் கூட அவனை நெருங்கவில்லை.அவன் தவத்தில் அமர்ந்திருந்தது பிருகு முனிவரின் 

முன்னிலல்லவா? அவர் தவ வலிமையால் பல சித்திகள் பெற்றிருந்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s